• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘புஷ்பா2 – தி ரூல்’ ஆகஸ்ட் 15, 2024 முதல் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது!

by Tamil2daynews
September 14, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘புஷ்பா2 – தி ரூல்’ ஆகஸ்ட் 15, 2024 முதல் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது!

 

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2-தி ரூல்’ படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியிடப்படும்.  அதிகாரப்பூர்வ தேதியுடன் வெளியாகியுள்ள இந்த புதிய போஸ்டர் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

சுதந்திர தினம் மற்றும் ரக்ஷாபந்தன் விடுமுறை நாட்களின் நீட்டிக்கப்பட்ட வாரயிறுதியுடன் கூடிய இந்த வெளியீட்டுத் தேதி, பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் அதிகரிக்க சரியான வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘புஷ்பா-தி ரைஸ்’ படத்தின் வெற்றிக்குப் பின் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டு தேதிக்காக நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அல்லு அர்ஜுன் சமீபத்தில் 69வது தேசிய விருதுகளில் புஷ்பாவாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். அல்லு அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட ‘புஷ்பா 2’ படப்பிடிப்பின் காட்சிகளால் ரசிகர்களின் உற்சாகம் மேலும் அதிகரித்தது. இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் ‘புஷ்பா 2’  வெளியீடு குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாது, வர்த்தக வட்டாரத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கொரோனா காலக்கட்டத்திற்குப் பிறகு திரையரங்குகளுக்கு அதிக பார்வையாளர்களை வரவழைத்து திருப்புமுனை ஏற்படுத்திய திரைப்படம் ‘புஷ்பா’. படத்தின் வசனங்கள், கதைக்களம், அடிமையாக்கும் இசை என அனைத்து வகையான பார்வையாளர்களையும் இதன் முதல் பாகம் ஈர்த்தது. அல்லு அர்ஜுனின் புஷ்பராஜ் கதாபாத்திரம் இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் விரும்பத்தக்க கதாபாத்திரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேஸ்ட்ரோ இயக்குநர் சுகுமார் உருவாக்கிய இந்த புஷ்பாவின் உலகம் அதன் இரண்டாம் பாகத்தில் இன்னும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

‘புஷ்பா2-தி ரூல்’ உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் மேஸ்ட்ரோ சுகுமார் இயக்கத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
Previous Post

‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு

Next Post

இசையில் மிரட்டிய இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு IPhone வழங்கி அசத்திய “ஒன் 2 ஒன்” பட இயக்குநர் K.திருஞானம் !!

Next Post

இசையில் மிரட்டிய இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு IPhone வழங்கி அசத்திய "ஒன் 2 ஒன்" பட இயக்குநர் K.திருஞானம் !!

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.