• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கும் நியூட்டன் சினிமாவின் “பாரடைஸ்” மலையாளத் திரைப்படம் கொரியாவின் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது !

by Tamil2daynews
October 4, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கும் நியூட்டன் சினிமாவின் “பாரடைஸ்” மலையாளத் திரைப்படம் கொரியாவின் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது!

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸும் நியூட்டன் சினிமாவும் இணையும்  ‘பாரடைஸ்’ என்கிற மலையாளத் திரைப்படத்தின் சர்வதேச பிரிமீயர்  தென்கொரியாவின் பிரசித்தி பெற்ற பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இந்த விழாவின் முதன்மை விருதான “கிம் ஜெசோக்” விருதிற்கும் பாரடைஸ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உலகப் புகழ் பெற்ற இயக்குநரும் பல சர்வதேச விருதுகளைப் பெற்றவருமான பிரசன்னா விதானகே இப்படத்தை இயக்கியிருக்கிறார். 2022-ல் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியும் அதைத் தொடர்ந்து எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடும், விலை உயர்வும் இலங்கையில் நாடுதழுவிய போராட்டம் வெடிப்பதற்குக் காரணமாக இருந்தது. இச்சமயத்தில் தங்களுடைய ஐந்தாம் திருமண விழா கொண்டாட அங்கு செல்லும் மலையாளிகளான வெப் சீரிஸ் தயாரிப்பாளரான, காணொளி பதிவாளர் (vlogger)  மற்றும் அவரது மனைவி ஆகியோர் அங்கே எதிர்கொள்ளும் எதிர்பாராத நிகழ்வுகளையும், விசித்திரமான அனுபவங்களையும் காட்சிப்படுத்தும்’ ‘பாரடைஸ்’  ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் திரைப்படமாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள் .

பிரச்சினை வரும்போது தான் மனிதர்களின் உண்மை முகம் தெரிகிறது என்பதைக் கூறும் இப்படம், இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளையும் அங்குள்ள மலையகத் தமிழர்களின் வாழ்க்கை நிலையையும் பேசுகிறது. அதோடு இராமாயணத்தில் இடம் பெற்றுள்ள முக்கியமான சம்பவங்களையும் இடங்களையும் கதையோட்டத்தில் காணலாம் என்கின்றனர், இப்படத்தின்  தயாரிப்பாளர்களான ஆன்டோ சிட்டிலப்பள்ளியும், ஸனிதா சிட்டிலப்பள்ளியும்.

மலையாளத்தில் பல முக்கிய படங்களில் நடித்த ரோஷன் மேத்யூவும், தர்ஷனா ராஜேந்திரனும் இப்படத்தில் முக்கிய கதாபத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை இந்தியாவின் முக்கியமான ஒளிப்பதிவாளரான ராஜீவ் ரவியும்,  படத்தொகுப்பை ஶ்ரீகர் பிரசாத்தும்,ஒலிக்கலவையை தபஸ் நாயக்கும், இசையை “கே”யும் கையாண்டுள்ளனர்.

பாரடைஸ் உன்னதமான உணர்வுகளின் கோர்வையோடு, சினிமாவின் அழகியலை அருமையாக கையாண்டிருக்கும் ஒரு தலைசிறந்த இயக்குனரால் எடுக்கப்பட்ட படமாகும்.  அதோடு குறிப்பிடத்தக்க நடிகர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் சேர்ந்து நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள படமுமாகும். இப்படத்தை வழங்குவதில் மெட்ராஸ் டாக்கீஸ் பெருமை கொள்கிறது என்றார் அந்நிறுவனத்தின் தயாரிப்பாளரான சிவா ஆனந்த்.

பாரடைஸ் திரைப்படத்தின் முதல் திரையிடல் இம்மாதம் ஏழாம் தேதி தென் கொரியாவின் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. படத்தின் முக்கிய நடிகர்களும் படக்குழுவினரும் இதில் பங்கு பெறுகிறார்கள்.
Previous Post

‘இறுகப்பற்று’ – விமர்சனம்

Next Post

முத்தையா முரளிதரன் சாரின் வாழ்க்கை மிகவும் ஊக்கமளித்து, ஒவ்வொருவரின் இதயத்திலும் உள்ளத்திலும் ஆழமாகச் செல்லும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஸ்பையரிங்கான கதை மூலம் பலர் தங்களது இலக்குகளை அடைய அவர்களைத் தூண்டுகிறது” – இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதி

Next Post

முத்தையா முரளிதரன் சாரின் வாழ்க்கை மிகவும் ஊக்கமளித்து, ஒவ்வொருவரின் இதயத்திலும் உள்ளத்திலும் ஆழமாகச் செல்லும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஸ்பையரிங்கான கதை மூலம் பலர் தங்களது இலக்குகளை அடைய அவர்களைத் தூண்டுகிறது” - இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதி

Popular News

  • கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • நண்பன் அழைத்து வராமல் இருக்க முடியுமா? – அதிரடி பட விழாவில் சஞ்சு சாம்சன்..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கும் புதிய படம் கோலகல ஆரம்பம் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE5 ஒரிஜினல் சீரிஸ் வழங்கும், பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் நடிப்பில், நஹாஸ் ஹிதாயத் இயக்கும், “ஐ அம் கேம்” படத்தின் பூஜை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது!

May 24, 2026

நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!

May 24, 2026

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்

May 24, 2026

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

May 24, 2026

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

May 24, 2026

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

May 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.