• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நந்தமுரி கல்யாண் ராம் நடிப்பில் தயாராகும் ஸ்பை திரில்லர் படமான ‘டெவில்’ எனும் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை எல்னாஸ் நோரூஸி, ‘ரோஸி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்

by Tamil2daynews
October 23, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நந்தமுரி கல்யாண் ராம் நடிப்பில் தயாராகும் ஸ்பை திரில்லர் படமான ‘டெவில்’ எனும் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை எல்னாஸ் நோரூஸி, ‘ரோஸி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்

 

நந்தமுரி கல்யாண் ராம் திரையுலகில் அறிமுகமாகும் போதே தனித்துவமான திரைக்கதைகளை தேர்வு செய்து நடித்து நற்பெயரை சம்பாதிப்பதில் பெயர் பெற்றவர். இவர் தற்போது மற்றொரு சுவாரசியமான திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தை குறிக்கும் வகையில் ‘டெவில்’ என பரபரப்பாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ‘பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட்’ என்ற வாசகத்துடன் வெளியாகிறது. இப்படத்தை அபிஷேக் நாமா இயக்கி, தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை மாளவிகா நாயரின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டு பார்வையாளர்களையும், ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது படத்தின் தயாரிப்பாளர்கள், பாலிவுட்டின் முன்னணி நடிகை எல்னாஸ் நோரூஸி நடித்திருக்கும் ‘ ரோஸி’ எனும் கதாபாத்திர போஸ்டரை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
Imageஇதை தெரிவித்துவிட்டு, ”திறமை வாய்ந்த நடிகை எல்னாஸ் நோரூஸியை‌- ‘டெவில் ரோஸி’யாக அறிமுகப்படுத்துகிறோம். அவரது திரைத்தோன்றல் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் திரையரங்குகளில் கலாட்டா செய்ய வைக்கும். பாலிவுட் அழகி எல்னாஸ் நோரூஸி நடன அரங்கில் தன்னுடைய துள்ளலான நடன அசைவுகளால் பார்வையாளர்களை கவர்வார் என்பது போஸ்டரில் தெளிவாக தெரிகிறது” என குறிப்பிட்டுள்ளனர்.

விருது பெற்ற பல படைப்புகளை வழங்கி திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் என பெயர் பெற்ற அபிஷேக் பிக்சர்ஸ் இந்த ‘டெவில்’ திரைப்படத்தை வழங்குகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளான காந்தி நதிக்குடிகர் பார்வையாளர்களுக்கு அற்புதமான காட்சி அனுபவத்தை வழங்குவதற்காக விடாமுயற்சியுடன் பணியாற்றியிருக்கிறார்.

நந்தமுரி கல்யாண் ராம், சம்யுக்தா, மாளவிகா நாயர், எல்னாஸ் நோரூஸி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்ய, ஹர்ஷவர்தன் ராமேஸ்வர இசையமைத்திருக்கிறார்.‌ கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீகாந்த் விசா மற்றும் அவரது குழுவினர் எழுத, தம்மி ராஜு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.

Previous Post

கேன்சர் சர்வைவர்களுக்கு பில்ரோத் மருத்துவமனை முன்னெடுத்த நற்செயல்!

Next Post

இயக்குனராக அறிமுகமாகும் ஜோஜு ஜார்ஜ்! வெளியானது மோஷன் போஸ்டர்!

Next Post

இயக்குனராக அறிமுகமாகும் ஜோஜு ஜார்ஜ்! வெளியானது மோஷன் போஸ்டர்!

Popular News

  • இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • வைபவ் முருகேசன் வெறும் புகழைத் தேடி ஓடவில்லை.. அவர் தனக்கான நிரந்தர இடத்தை கட்டமைத்து வருகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அயோத்தியில் ராமர் கோவில் திறப்பதை முன்னிட்டு நடிகை சுகன்யா எழுதி, இசையமைத்து பாடியுள்ள பாடல் ‘ஜெய் ஸ்ரீ ராம்’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் டைட்டில் வெளியீடு

April 16, 2026

‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்

April 16, 2026

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

April 16, 2026

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

April 16, 2026

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி விழா!

April 16, 2026

குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

April 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.