• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘தி வில்லேஜ்’ இணையத் தொடர் மூலம் என்னுடைய ஒ டி டி டிஜிட்டல் தள அறிமுகம், நிச்சயமாக வித்தியாசமான அனுபவமாகும்’ என பிரைம் வீடியோவின் ‘தி வில்லேஜ்’ எனும் இணையத் தொடரை பற்றி நடிகர் ஆர்யா உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார்.

by Tamil2daynews
November 22, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘தி வில்லேஜ்’ இணையத் தொடர் மூலம் என்னுடைய ஒ டி டி டிஜிட்டல் தள அறிமுகம், நிச்சயமாக வித்தியாசமான அனுபவமாகும்’ என பிரைம் வீடியோவின் ‘தி வில்லேஜ்’ எனும் இணையத் தொடரை பற்றி நடிகர் ஆர்யா உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார்.

 

பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் ஒரிஜினல் தமிழ் திகில் தொடரான ‘தி வில்லேஜ்’ எனும் நீண்ட வடிவிலான இணையத் தொடரின் உலகளாவிய பிரீமியரை அண்மையில் அறிவித்தது. இந்தத் தொடர் அதே பெயரில் அஸ்வின் ஸ்ரீவத்சங்கம்,  விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ் குப்தா ஆகியோர் உருவாக்கிய கிராஃபிக் ஹாரர் நாவல்களால் ஈர்க்கப்பட்டு உருவாகியிருக்கிறது.  தனது குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு பின்னணியில் உள்ள மர்மத்தை அவிழ்க்க முயற்சிக்கும் மனிதனின் கதையை இந்த திகில் தொடர் விவரிக்கிறது. திறமைமிகு நடிகர்களில் ஒருவரான ஆர்யா- பத்தாண்டுகளுக்கும் மேலாக திரை துறையில் பணியாற்றி வருகிறார். இப்போது இந்த திகில் தொடரில் நடித்ததன் மூலம் நீண்ட வடிவத்திலான இணையத் தொடரின் ஸ்ட்ரீமிங்கில் அறிமுகமாகிறார். இந்த திகில் தொடரில் அவர் கௌதம் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரம், கட்டியல் எனும் கிராமத்தில் வசிக்கும் உள்ளூர் வாசிகள் சிலருடன் இணைந்து தனது குடும்பத்தை கண்டறியும் மீட்பு பணியில் ஈடுபடுவராக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
The Village' trailer: Arya to make his OTT debut with this horror-thriller - India Todayஇந்த ஒரிஜினல் திகில் தொடர் பற்றி நடிகர் ஆர்யா பேசுகையில்,
” தி வில்லேஜ் எனும் திகில் தொடருடனான எனது ஒ டி டி எனும் டிஜிட்டல் தள அறிமுகம் நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. இதன் கருத்தாக்கம், திகில் &  த்ரில்லர் அம்சம் மற்றும் ஆழமான கதை ஆகியவை இந்திய ஒ டி டி சந்தையில் ஒரு போதும் அதன் ரசிகர்களால் அனுபவிக்கப்படவில்லை. மேலும் இந்த இணைய தொடர் சுவராசியமானதாக இருப்பதையும் நான் கண்டேன். இது என்னை தொடர்ந்து பணியாற்ற வழி வகுத்தது.‌ இந்திய ஒ டி டி இயங்கு தளங்களில் காணப்படும் அனைத்து திகில் வகையிலிருந்தும் ‘தி வில்லேஜ்’ எனும் இந்த திகில் தொடர் தனித்துவமானதாகும். பல தருணங்களில் திரைப்படங்களில் நாம் பார்க்கும் திகில்.. ஓர் எல்லைக்குள் பின் தடை செய்யப்பட்டதாக இருக்கும். அதை உருவாக்கும் போது ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் செல்ல இயலாத நிலை உண்டு. ஆனால் இந்த திகில் தொடரில் இயக்குநர் மிலிந்த் ராவ் அனைத்து அம்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஜானரிலான உள்ளடக்கத்தை உருவாக்குவதில் படைப்பாளிகள் நம்புவதற்கு இது ஒரு சிறந்த வழி என நான் நினைக்கிறேன். ஏனெனில் மக்கள் இந்த வகையான ஜானரிலான படைப்புகளை கண்டு ரசிக்க விரும்புகிறார்கள்.‌” என்றார்.

‘தி வில்லேஜ்’ எனும் இந்த திகில் தொடரில் ஆர்யாவுடன் திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பி என் சன்னி, கே. முத்துக்குமார், எஸ். எஸ். கலைராணி, ஜான் கொக்கன், பூஜா, வி. ஜெயப்பிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம், ‘தலைவாசல்’ விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.‌ இந்த தொடர் வினோதமான தோற்றமுடைய உயிரினங்கள்… மரபு பிறழ்ந்தவர்கள்.. ஒரு குடும்பத்தை இடைவிடாமல் வேட்டையாடும் பயங்கர கொடூரத்தின் முடிவில்லாத இரவைக் காட்சிப்படுத்தி இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் சகிப்புத்தன்மையின் விளிம்பிற்கு அழைத்துச் செல்கிறது. இந்த ஒரிஜினல் தமிழ் திகில் தொடரை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கி இருக்கிறார். ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி. எஸ். ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். இந்த ஒரிஜினல் திகில் தொடர் நவம்பர் 24ஆம் தேதி முதல் தமிழில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. அதனுடன் தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலத்தில் சப்- டைட்டில்களுடன் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

Previous Post

‘அன்னபூரணி’ படத்திற்காக தொழில்முறை சமையல் கலைஞராக மாறிய நயன்தாரா!

Next Post

“டைகர் படவரிசை எப்போதும் எனது திரை வாழ்க்கையை பிரகாசமாக்கும்!” என்கிறார் டைகர்-3-ன் மூலம் இதுவரை இல்லாத மிகப்பெரிய தீபாவளி வெளியீட்டு வெற்றியை வழங்கிய சல்மான் கான்

Next Post

"டைகர் படவரிசை எப்போதும் எனது திரை வாழ்க்கையை பிரகாசமாக்கும்!" என்கிறார் டைகர்-3-ன் மூலம் இதுவரை இல்லாத மிகப்பெரிய தீபாவளி வெளியீட்டு வெற்றியை வழங்கிய சல்மான் கான்

Popular News

  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.