• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“மதிமாறன்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

by Tamil2daynews
December 11, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“மதிமாறன்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

 

ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல்  தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மதிமாறன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Don’t judge the book by its cover புத்தகத்தின் அட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே என்பதாக உலகின் மிகச்சிறந்த பழமொழி ஒன்று உள்ளது, அது தான் இப்படத்தின் மையம். தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகனின் தேடல் தான் இப்படத்தின் கதை.

பிரபல இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.  பாடி ஷேமிங் எந்த வகையிலும் தவறென்பதையும், இயலாதவர்களின் மீதான சமூகத்தின் பார்வையையும் கேள்விகுள்ளாக்கும் வகையிலுமான கதையை, அட்டகாசமான திரைக்கதையில் மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாக்கியுள்ளார்  மந்த்ரா வீரபாண்டியன்.

தற்போது வெளியாகியுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் படத்தின் முதன்மை கதாப்பாத்திரங்களுடன் ஒரு காவலதிகாரி ஜீப்பின் மீது அமர்ந்திருக்கிறார்.  இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுவதுடன், ரசிகர்களுக்கு ஒரு தரமான திரில்லர் அனுபவம் காத்திருப்பதாக உறுதியளிக்கிறது.Imageஇப்படத்தில் நாச்சியார், லவ் டுடே  புகழ் இவானா முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க வெங்கட் செங்குட்டுவன்  நாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பாவா செல்லதுரை, E.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் தற்போது திரைவெளியீட்டுக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இப்படத்தினை பாபின்ஸ் ஸ்டுடியோஸ் எனும் புதிய நிறுவனம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடவுள்ளது.

தொழில்நுட்ப குழு விபரம்
இயக்கம் – மந்த்ரா வீரபாண்டியன்
தயாரிப்பு  நிறுவனம் –   ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல்
TN திரையரங்கு வெளியீடு – பாபின்ஸ் ஸ்டுடியோஸ்
இசையமைப்பாளர் – கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு – பர்வேஸ் K
எடிட்டர் – சதீஷ் சூர்யா
கலை இயக்குனர் – V.மாயபாண்டி சண்டைக்காட்சி – சுரேஷ் குமார்
ஆடை வடிவமைப்பாளர் – கடலூர் M ரமேஷ், ஷேர் அலி N (வெங்கட் செங்குட்டுவன்) ஒப்பனை – என்.சக்திவேல்
மக்கள் தொடர்பு – யுவராஜ்.

Previous Post

கான்ஜுரிங் கண்ணப்பன் – விமர்சனம்

Next Post

முன்னாள் அமைச்சர் S. P. வேலுமணி துவக்கிவைத்த விக்ராந்த் – யோகிபாபு நடிக்கும் புதிய படம். ரமேஷ் சுப்பிரமணியம் இயக்குகிறார்.

Next Post

முன்னாள் அமைச்சர் S. P. வேலுமணி துவக்கிவைத்த விக்ராந்த் - யோகிபாபு நடிக்கும் புதிய படம். ரமேஷ் சுப்பிரமணியம் இயக்குகிறார்.

Popular News

  • ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

August 4, 2026

சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!

August 4, 2026

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா

August 4, 2026

விஜய் ஆண்டனியின் உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.