• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்தின் முதல் சிங்கிள் “சூரியன் குடையா நீட்டி”பாடல் வெளியாகியுள்ளது

by Tamil2daynews
December 14, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்தின் முதல் சிங்கிள்  “சூரியன் குடையா நீட்டி”பாடல் வெளியாகியுள்ளது

 

ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்திலிருந்து, நட்புக்கு சாட்சியாக அழுத்தமான வரிகளுடன் வந்துள்ளது முதல் சிங்கிள் “சூரியன் குடையா நீட்டி” பாடல்.

இசையமைப்பாளர்: ரவி பஸ்ரூர்
பாடியவர்: ஐரா உடுப்பி

பாடலாசிரியர்: மதுரகவி

பாடல் லிங்க் – https://youtu.be/UmycVwrn0Ng

ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் இந்தியத் திரையுலகில்  மிகவும் எதிர்பார்க்கப்படும்  திரைப்படங்களில் ஒன்றாகும். பிரபாஸ் நடிப்பில், இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இப்படம், ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது, இந்த புதுமையான ஆக்சன் உலகைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி  வெளியாகிறது‌.

முதல் சிங்கிள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே, பார்வையாளர்கள் சலாரின் இசை உலகத்தை தரிசிக்க ஆர்வத்துடன்  காத்திருந்தார்கள், இந்நிலையில் தற்போது, தயாரிப்புத் தரப்பு  சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர்  படத்தின் முதல் சிங்கிள் #சூரியனகுடையாநீட்டி பாடலை வெளியிட்டுள்ளனர்.

மிகவும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியிருக்கும்   இப்படத்தின் உணர்ச்சிகரமான பக்கத்தை பற்றிய ஒரு அறிமுகத்தை இந்த சிங்கிள் பாடல் நமக்கு வழங்குகிறது, மேலும் இது ஒருவரின் முழுபலமாகவும்  அதே நேரம்  பலவீனமாகவும்  இருக்கும் இரண்டு சிறந்த நண்பர்களின் உணர்வுகளையும் எடுத்துக்காட்டுகிறது. இப்பாடல் படத்தின் உணர்வுப்பூர்வமான அம்சத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது, இப்படம் வெறும் ஆக்‌ஷன் திரைப்படமாக மட்டுமல்லாமல், இரண்டு சிறந்த நண்பர்களின் பின்னணியில் பார்வையாளர்களின் இதயங்களைத் தொடும் மிகவும் உணர்ச்சிகரமான திரைப்படமாக இருக்குமென உறுதியளிக்கிறது.

2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடும் இந்த அதிரடி ஆக்‌ஷன்  திரைப்படத்திற்கு சென்சார் போர்டு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தில் பல இரத்தக்களரியான ஆக்சன் காட்சிகள், வன்முறை மிகுந்த அதிரடி காட்சிகள் நிறைய உள்ளது. ‘ஏ’ சர்டிபிகேட் எனும் முத்திரையே  படத்தின் ஆக்சன் அளவை பிரதிபலிக்கிறது.

ஹொம்பாலே பிலிம்ஸ், சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர்   படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார். இப்படம் டிசம்பர் 22, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.
Previous Post

‘கண்ணகி’ – விமர்சனம் Rating 4/5

Next Post

‘லைஃப் இருக்கு டிரக்ஸ் எதற்கு’: போதை மருந்துகள் பயன்பாட்டுக்கு எதிராக ஏஐ அனிமேஷன் மூலம் உருவாகியுள்ள ஒரு புது இசை முயற்சி!

Next Post

'லைஃப் இருக்கு டிரக்ஸ் எதற்கு': போதை மருந்துகள் பயன்பாட்டுக்கு எதிராக ஏஐ அனிமேஷன் மூலம் உருவாகியுள்ள ஒரு புது இசை முயற்சி!

Popular News

  • மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    0 shares
    Share 0 Tweet 0
  • டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.‌

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.