• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சிங்கப்பூர் சலூன் வரும் 25ஆம் தேதி வெளியாகிறது

by Tamil2daynews
January 14, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சிங்கப்பூர் சலூன் வரும் 25ஆம் தேதி வெளியாகிறது

 

ரெளத்திரம்’, ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’,‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கியவர் கோகுல். இவர் இப்போது இயக்கும் படம், ‘சிங்கப்பூர் சலூன்’. ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்கிறார்.  ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

எல்கேஜி (2019) மற்றும் மூக்குத்தி அம்மன் (2020) படங்களுக்குப் பிறகு வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மூலம் ஆர்ஜே பாலாஜியின் மூன்றாவது படம்  சிங்கப்பூர் சலூன் . இப்படத்தில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர், மீனாட்சி சவுத்ரி, கிஷேன் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதைப் பற்றி ஆர்.ஜே பாலாஜி  பேசியது, ” இந்த படம் எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.  இந்த படத்தில் மக்களுக்கு தேவையான  கமர்சியல் எலிமெண்ட் எல்லாம் கலந்து இருக்கும்.   லோகேஷ் கனகராஜ் , ஜீவா  கேமெியோ  ரோலில் நடித்திருகாங்க.  இது மட்டும் இல்லாமல்,  ஒரு பெரிய சர்ப்ரைஸ் ,ஒரு பெரிய நடிகர் இந்த திரைப்படத்தில் நடிச்சிருக்காரு. அதை யாரென்று இப்ப ரீவில் பண்ண முடியாது, படத்தை பார்த்து நீங்களே   பயங்கர சர்ப்ரைஸ் ஆகுவீங்க.   ஆரம்பத்துல இந்த திரைப்படத்தை உள்வாங்க எனக்கு  கடினமா இருந்தது அப்புறம் போக போக நான்  பழகிக்கிட்டேன். என் ஆரம்பத்துல நான் வந்து கத்துக்கிட்ட பல விஷயங்கள் இப்போ வரைக்கும் எனக்கு உதவிகரமா இருக்கு.    சமூக கருத்துகளை மேலோட்டமா  சொல்லி இருக்கோம் அரசியல் பேசாத இந்த படம் ,  மக்களுக்கு ரொம்ப பிடிக்கும்” என்று கூறினார்.

இயக்குனர் கோகுல் பேசுகையில், “இந்த திரைப்படம் 60% காமெடி மீதி 40% எமோஷன், சென்டிமென்ட் என்ற பல பரிமாணங்கள் உள்ளடக்கி இருக்கு.  நம்ம எப்படி ஒரு சாதாரண சலூன் கடைக்கு போயிட்டு முடி எல்லாம் வெட்டுனதுக்கு அப்புறமா  நம்மள பார்க்கும்போது ஒரு திருப்தி, ஒரு சந்தோஷம்  வர மாதிரி இந்த திரைப்படத்தை பார்த்து முடிச்சதுக்கு அப்புறமா உங்க எல்லாருக்கும் நிச்சயமாக தோன்றும்.    என்னுடைய நகைச்சுவை இந்த படத்துல இருக்கு அது இல்லாம , வித்தியாசமாகவும் முயற்சி செஞ்சிருக்கோம்.   நான் என்னோட வாழ்க்கையில பார்த்த நிறைய  முடி திருத்துபவர்கள் தான் இந்த கதைக்கான ஒரு இன்ஸ்பிரேஷன்.   இன்னிக்கு இருக்கக்கூடிய எல்லா பெரிய நடிகர்களும்  அவங்களுடைய அப்பாயிண்ட்மெண்ட்காக தான் வந்து காத்துக்கிட்டு இருக்காங்க, அந்த அளவுக்கு இன்னைக்கு  இந்த தொழில் வந்து ஒரு மிகப்பெரிய ஒரு இடத்தை போய் அடைஞ்சிருக்கு.  இந்த உள் கருத்த மையமா வச்சு,  இதிலேயே  நிறைய விஷயங்களை நாங்க  இந்த திரைப்படத்தில் பேசி இருக்கோம்.   கண்டிப்பா உங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.

தயாரிப்பாளர் டாக்டர்  ஐசரி கணேஷ் பேசுகையில், ” சிங்கப்பூர் சலூன் இதுவரைக்கும் நான் தயாரித்த திரைப்படங்களை விட அதிக பொருட்செலவுல தயாராகி இருக்கும் திரைப்படம்.   ஆர். ஜே. பாலாஜியால இப்படியும் நடிக்க முடியுமா  அப்படின்னு மக்கள் வியக்குற மாதிரியான ஒரு கதை அம்சமும் ,அவரும் அதுக்கு ஏத்த மாதிரி நடித்திருக்கிறார்,  எனக்கு இந்த கதை மேல பெரிய நம்பிக்கை இருக்கிறது.  ஃபர்ஸ்ட் ஆஃப் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து மகிழ வைக்கும் கதையாகவும்,  செகண்ட் ஹாஃப் எமோஷன் மோட்டிவேஷன் இந்த மாதிரி  பல சுவாரசியம்சங்களை இந்த திரைப்படம் உள்ளடக்கி இருக்கும்.

சிங்கப்பூர் சலூன் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

Previous Post

ஜவான்’ புகழ் இசையமைப்பாளர் அனிருத் தனது ‘ஹுக்கும்- வேர்ல்ட் டூர்’ரை துபாயில் இருந்து ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளார்!

Next Post

‘ஹனுமான்’ – விமர்சனம்

Next Post

'ஹனுமான்' - விமர்சனம்

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.