• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பசங்க ஸ்ரீராம் கதாநாயகனாக நடிக்கும் திரில்லர் படம் ‘எக்ஸிட் ‘ !

by Tamil2daynews
January 21, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பசங்க ஸ்ரீராம் கதாநாயகனாக நடிக்கும் திரில்லர் படம்  ‘எக்ஸிட் ‘ !
‘பசங்க’ திரைப்படம் மூலம் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சற்றே வளர்ந்து :கோலி சோடா’ வில் பேசப்பட்டு ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து  அங்கீகாரம் பெற்றவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘எக்ஸிட்’ இது

ஒரு நாள் இரவில் நடக்கும் கதை.

இது ஒரு சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கிறது. எக்ஸிட் என்றால் வெளியேறும் வழி .உயிரைப் பலி கேட்கும் ஓர் ஆபத்தான சூழலில் இருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, கதாநாயகன் எப்படி வெளியேறுகிறான் என்பதுதான் கதை.

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷாஹீன் இயக்கி உள்ளார்.ப்ளூம் இண்டர்நேஷனல் சார்பில் வேணுகோபாலகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

கதாநாயகன் ஸ்ரீராம் எப்போதும் நடிப்புக்கு முக்கியத்துவம் தருபவர். அவரது நடிப்பாற்றலுக்கு மதிப்பளிக்கும் வகையில் மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் அவரையே நாயகனாக நடிக்க வைத்துள்ளனர்.
Image

இப்படத்தில் வில்லனாக விஷாக் நாயர் நடித்துள்ளார் .இவர் ஏற்கெனவே மலையாளத்தில் மம்முட்டி படத்தில் வில்லனாக நடித்தவர். இந்த விஷாக் நாயர் இதில் ஒரு மிருகமாகவே மாறி நடித்துள்ளார் .

‘ஜெயிலர்’ படத்தில் வரும் விநாயகன் போல,பொதுவாகப் படங்களில் வரும் பாத்திரங்களுக்கு மிருக குணத்தை மட்டும் தான்  காட்டுவார்கள்.இப்படத்தில் வரும் வில்லனோ உடல் அசைவுகளிலும் மாறி,ஒரு மிருகத்தைப் போல நான்கு கால்களால்தான் நடப்பார். பேசவே மாட்டார். ஆனால் உணர்ச்சிகள் காட்டுவார்.மனித மாமிசத்தைக் கடித்து உண்ணுவது போன்ற தனது குரூர  செயல்களின் மூலம் பதற வைப்பார். அவரது தோற்றமும் உடல் மொழியும் அசல் மிருகத்தை நினைவூட்டிப் பார்ப்பவர்களை மிரட்டும்.

இவர்கள் தவிர ,ரனிஷா ரஹிமான்,ஹரிஷ் பெராடி,வைஷாக் விஜயன்,ஆஸ்லின் ஜோசப், சூரஜ் பாப்ஸ், ஸ்ரீரியாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்திற்குத் திரைக்கதை – அனீஷ் ஜனார்தன் – ஷாஹீன்,கதை – அனீஷ் ஜனார்தன்,ஒளிப்பதிவு – ரியாஸ் நிஜாமுதீன் ,படத்தொகுப்பு – நிஷாத் யூசுப், இசை – தனுஷ் ஹரிகுமார், விமல்ஜித் விஜயன்,ஒலி வடிவமைப்பு – ரெங்கநாத் ரவி,கலை – எம். கோயா,ஆடை வடிவமைப்பு – சரண்யா ஜீபு  என சினிமாவின் மீது தாகம் கொண்ட தொழில் நுட்பக் கலைஞர்களின் கூட்டணி இணைந்து பணியாற்றியுள்ளது.

தமிழில் திரில்லர் படங்கள் ஏராளம் வந்தாலும் அவற்றில் சில படங்கள் ஜாலி, கேலி என்று தடம் மாறிச் சிரிக்க வைப்பது உண்டு.

ஆனால் இந்தப் படம் முழுக்க முழுக்க சீரியஸாக இருக்கும்.அந்த திகில் மனநிலையைக்  கடைசி வரை மாற்றாமல் இருக்கும்.

இப்படம் பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியாகிறது. அதே மாதம் ஒன்பதாம் தேதி மம்முட்டி நடித்த ‘பிரம்மயுகம்’ வருகிறது .அதற்குப் போட்டியாக இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.அதிலிருந்து இந்தப் படத்தின் மீது படக்குழுவினர் வைத்துள்ள நம்பிக்கை புலப்படும்.
Previous Post

நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் ‘கருடன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது.

Next Post

சமூக விரோதி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று தர முடியாமல் சென்சார் அதிகாரிகள் தவிப்பு ?அதிரடியாக முடிவு எடுத்த இயக்குனர் சீயோன் ராஜா

Next Post

சமூக விரோதி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று தர முடியாமல் சென்சார் அதிகாரிகள் தவிப்பு ?அதிரடியாக முடிவு எடுத்த இயக்குனர் சீயோன் ராஜா

Popular News

  • ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “திரைப்படம் முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும்”…‘இருமுடி கட்டு’ திரைப்படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.