• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படத்தை இயக்கும் ஸ்டண்ட் சில்வா..!

by Tamil2daynews
January 24, 2024
in சினிமா செய்திகள்
0
பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படத்தை இயக்கும் ஸ்டண்ட் சில்வா..!
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

2024-ல் தை பிறந்ததும் வெளியாகும் திரைப்படங்களில் எந்த படம் நம் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் என்று அதிகம் எதிர்பார்ப்போம்.அதில் ஏதாவது சில படங்கள் முன் வரிசையிலும் மற்றும் ஒரு சில படங்கள் அடுத்த வரிசையிலும் இருப்பதை நாம் சிறுவயது முதல் பார்த்திருக்கிறோம்.இந்த தை பொங்கலில் வெளிவந்த படங்களான கேப்டன் மில்லர்,அயலான்,மெரி கிரிஸ்மஸ்,ஹனுமான் மற்றும்  மிஷன் சாப்டர்-1ஆகிய படங்களில் அதிகமாக ரசிகர்களின் மனதை கவர்ந்த அதிரடி ஆக்‌ஷன் படமாக மிஷன் சாப்டர்-1 இடம் பெற்றுள்ளது.

மிஷன் சாப்டர் 1 ஆக்க்ஷன் காட்சிகளை  பார்க்கும் பொழுது ஹாலிவுட் படம் பார்ப்பது போல் பிரம்மிப்பாக உள்ளது.

பொதுவாக படத்தில் சண்டை என்றால் ஹீரோவுடன் ஒருவர் அல்லது   நான்கு ஐந்து பேர் மோதலாம் இதில் நூற்றுக்கணக்கான ஸ்டண்ட்  நடிகர்களை வைத்து ஸ்டண்ட் சில்வா அமைத்திருக்கும் சண்டை காட்சிகள்  படம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும்போது படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் படத்தில் சண்டை காட்சிகள் பின்னி எடுத்திருக்காங்க என்றும்,சண்டைக் காட்சிகள்  மிகப் பிரமாண்டமாக இருக்கின்றது என்றும்  ஒட்டுமொத்த ரசிகர்களும் சொல்கிறார்கள்.

இப்படத்தில் ஜெயிலராக நடித்திருக்கும் எமி ஜாக்சனும் அதிரடி ஆக்க்ஷனில் அனல் பறக்க விடுகிறார். இதற்கு காரணம் சண்டை பயிற்சி இயக்குனர்  ‘ஸ்டண்ட் சில்வா தான்!

ஸ்டண்ட் சில்வா,இவர் இந்திய சினிமாவில் ஒரு மிக சிறந்த ஸ்டண்ட் இயக்குனர்,ஸ்டண்ட் நடிகர், மற்றும் திரைப்பட இயக்குநரும் ஆவார்.இந்தியாவின் மிக சிறந்த வெற்றிபட இயக்குனரான S.S.இராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் NTR நடிப்பில் வெளி வந்து ஆக்‌ஷனில் மிக பெரிய வெற்றி அடைந்த ‘எமதொங்கா’ படத்தின் மூலம் ஸ்டண்ட் இயக்கனராக அறிமுகமாகி தமிழ்,தெலுங்கு,மலயாளம்,கன்னடம்,ஹிந்தி,மராட்டி,பெங்காலி,மற்றும் சிங்களம் என பல மொழிகளிலும் 300 படங்களுக்கு மேலாக சண்டைபயிற்சியாளராக பணியாற்றி பல அரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.இவர் சண்டை பயிற்சி அளிப்பது மட்டுமின்றி பல படங்களில் நடித்து நல்ல ஸ்டண்ட் நடிகர் என ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

‘தல’ அஜித் நடிப்பில் வெளிவந்த ‘மங்காத்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் இந்த ஸ்டண்ட் சில்வா.பிறகு அதே தல அஜித்துடன்  அருண் விஜய் நடிக்கும் ‘என்னை அறிந்தால்‘ திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளை பற்றி சொல்லவே வேண்டாம் சும்மா திரையில் அதிர வைத்திருப்பார்.இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டுமென்றால் நடிகர் அருண் விஜய்க்கு இந்த  திரைப்படம் மூலம்தான் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அந்தஸ்து கிடைத்து
தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வருவதற்கு இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் ஒரு உதாரணம் என்றே சொல்லலாம்.

பொதுவாகவே அன்றைய காலகட்டத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரைக்கும் சினிமாவில் வில்லனாக நடிக்கும் எல்லோரும் நிஜத்தில் நல்லவர்கள்தான் அந்தவிதத்தில் ஸ்டண்ட்சில்வாவும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல.

பார்ப்பதற்கு நூடுல்ஸ் தலையுடன் முகத்தில் தழும்புடன் கரடு முரடாக காட்சியளிக்கும் இந்த ஸ்டண்ட் சில்வாவின்   மனம் ஒரு பச்சை குழந்தை போன்றது,இது பார்ப்பவர்களுக்கு  தெரியாது,ஆனால்  அவருடன் பழகியவர்களுக்கு மட்டும்தான் தெரியும் அவர் ஒரு சொக்கத்தங்கம் என்று.'Chithirai Sevvaanam': A grim story that gets you thinking (IANS Rating

இதற்க்கு சான்றாக இவர்  தமிழில் இயக்கிய முதல் திரைப்படம்  ‘சித்திரை செவ்வானம்’ சமுத்திரக்கனி மற்றும் பிரபல நடிகை சாய் பல்லவியின்  தங்கை பூஜா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியாகி பார்த்த அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்து மிகபெரிய எமோஷனல் வெற்றி படமாக  அமைந்தது.

இத்திரைபடத்தின் மூலமாக சமூகத்தில் பெண் பிள்ளைகளை எவ்வாறு  பாதுகாப்பாக   வளர்க்க வேண்டும்  என்றும் சோஷியல் மீடியாவை எப்படி கையாளவேண்டும் என்றும் ஒரு உன்னதமான கருத்தை சொல்லி,இந்த படத்தை ஒரு சாதாரண படமாக இல்லாமல்   மிகபெரிய பாடமாக செதுக்கியிருந்தார்.

சித்திரை செவ்வானம் படத்தை இயக்கிய பிறகு  ஏற்கனவே ஒப்புக்கொண்ட  பல  படங்களின் ஸ்டண்ட் இயக்குனர் பணி இருந்ததால் உடனே  படங்கள் இயக்க முடியவில்லை.

இந்த 2024 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமான  சூப்பரான அதிரடி ஆக்க்ஷன் திரைப்படத்தை இயக்க போகிறார் ஸ்டண்ட் சில்வா.

செய்யும் தொழிலே தெய்வம் என்றும் நாம் செய்யும் தொழிலுக்கு என்றைக்குமே உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதே இவருடைய கொள்கை.

இதுவே இவரின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளது.

எந்த வேலையாக இருந்தாலும் அந்த வேலையை சிறப்பாக   செய்து முடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கி அடிப்பதில் வல்லவரான ஸ்டண்ட் சில்வா இந்த பொங்கலில் மிஷன் சாப்டர் -1 படத்தின் வெற்றியை  தொடர்ந்து அவரின் திரையுலக வாழ்வில் இனி எல்லாம் ஏறு முகமே.

வாழ்த்துக்கள்.💐

Previous Post

கட்டா குஸ்தி திரைப்படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் & இயக்குநர் செல்லா அய்யாவு கூட்டணி!! விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!

Next Post

புதிய பல படைப்புகளுடன் திரையுலகை திரும்பி பார்க்க வைக்கும் இயக்குநர் R.சந்துரு!!

Next Post

புதிய பல படைப்புகளுடன் திரையுலகை திரும்பி பார்க்க வைக்கும் இயக்குநர் R.சந்துரு!!

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.