• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார் கவிப்பேரரசு வைரமுத்து

by Tamil2daynews
March 9, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார் கவிப்பேரரசு வைரமுத்து

 

கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய ‘மகாகவிதை’ நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் பாராட்டு பெற்றதை தொடர்ந்து கடல் தாண்டியும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து கவிப்பேரரசு வைரமுத்துவின் சாதனை படைப்பான ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ மற்றும் 1 லட்சம் வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ 18 லட்சம்) மலேசியாவில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வழங்கின.

தான்ஶ்ரீ டாக்டர் எஸ் .ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் முன்னிலையில் கோலாலம்பூரில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது மற்றும் பரிசுத் தொகை கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டது. பஞ்சபூதங்களை பற்றி விரிவாக பேசும் ‘மகாகவிதை’ நூலை படித்து மகிழ்ந்த மலேசிய பல்கலைக்கழக தமிழ் அறிஞர்கள் ஐந்து பேர் நூல் குறித்து சிறப்புரை வழங்கினார்கள்.

நீர் குறித்து இஸ்லாமிய கல்விக் குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ இஃபாலும், காற்று குறித்து மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை பேராசிரியர் முனைவர் இராஜேந்திரனும், தீ குறித்து சுலுத்தான் இதுரீசு கல்வியல் பல்கலைக்கழகம்
தலைவர், மலேசியத் தமிழ்ப் புலவர் சங்கத்தை சேர்ந்த முனைவர் மனோன்மண தேவி அண்ணாமலையும், பூமி பற்றி மேனாள் காவல்துறை ஆணையர் புலவனின் புவி காக்கும் வேட்கை மதிப்புமிகு டத்தோ ஶ்ரீ தெய்வீகன் ஆறுமுகமும், ஆகாயம் குறித்து மலேசியத் தமிழ்நெறிக் கழகம் தேசியத் தலைவர் தமிழ்ப்பெருந்தகை இரா திருமாவளவனும் விரிவாக பேசி கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்பை வெகுவாக பாராட்டினர்.

இவ்விழாவில் தமிழ் அறிஞர்கள், படைப்பாளிகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

விருதினைப் பெற்றுக் கொண்டு ஏற்புரை ஆற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, மலேசிய தமிழ் இலக்கிய காப்பகம் மற்றும் தமிழ் பேராயத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியவர்களுக்கும் பங்கேற்ற அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்காக சமீபத்தில் மலேசியா வந்தடைந்த கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு‘டத்தோ’ ஶ்ரீ எம் சரவணன் தலைமையில் விமான நிலையம் முதல் தங்கி இருக்கும் ஹோட்டல் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘கல்கி 2898 AD’ படத்தில் ‘பைரவா’வாக நடிக்கிறார் பிரபாஸ்.

Next Post

‘கார்த்தி26 ‘ பட தொடக்க விழாவின் காணொளி வெளியீடு!

Next Post

'கார்த்தி26 ' பட தொடக்க விழாவின் காணொளி வெளியீடு!

Popular News

  • அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிங்காரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

November 2, 2026

சிங்காரம் – விமர்சனம்

November 2, 2026

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

November 2, 2026

மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

November 2, 2026
‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

November 2, 2026

சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

November 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.