• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அமேசான் ப்ரைம் தளத்தில் உலகளவில் புதிய சாதனைகள் படைக்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படம் !!

by Tamil2daynews
March 20, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அமேசான் ப்ரைம் தளத்தில் உலகளவில்  புதிய  சாதனைகள் படைக்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படம் !!

 

அமேசான் ப்ரைம் தளத்தில்,  பிப்ரவரி 9 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான, சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், 40 நாட்களை கடந்தும்,   உலகளவில் 9க்குமேற்ப்பட்ட  நாடுகளில் டாப் 5 வரிசையில்  இடம் பிடித்து, டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க, தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்,  இவ்வருட பொங்கல் கொண்டாட்டமாக, ஜனவரி 12  ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “கேப்டன் மில்லர்”. இப்படம்  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.

வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய இப்படத்தில், தனுஷ்,  பிரியங்கா மோகன் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில்  இணைந்து நடித்திருந்தனர்.

“கேப்டன் மில்லர்”  படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்திற்கு, மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார்.

பெரும் நட்சத்திரக் கூட்டணியில், உயர்தர தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில்,  வரலாற்றுப் பின்னணியில் அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளிவந்த இப்படம், திரை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.

திரையரங்குகளில் வெற்றி பெற்ற கேப்டன் மில்லர் படம், கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் உலகம் முழுக்க ஸ்ட்ரீம் செய்யப்பட்டது.  வெளியான முதல் வாரத்திலேயே,  உலகம் முழுக்க 14 நாடுகளில் டாப் 5 வரிசையில் இப்படம் இடம்பிடித்து சாதனை படைத்தது. மேலும் இந்தியா உட்பட 9 நாடுகளில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி 40 நாட்களை  கடந்த நிலையில், இன்றளவிலும் இந்தியா மட்டுமல்லாது, தான்சேனியா போன்ற ஆப்ரிக்க நாடுகளிலும்,  மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற ஆசிய நாடுகளிலும், பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், போன்ற நாடுகளிலும் தொடர்ந்து முதல் 5 இடங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. கடந்த 8ஆம் தேதி வெளியான  இப்படத்தின் இந்தி பதிப்பு, பல்வேறு புலம்பெயர் நாடுகளில் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்த நிலையில், இந்தியாவில் முதல் 10 இடங்களுக்குள் #1 படமாக இடம் பிடித்துள்ளது.  மேலும் தொடர்ந்து 2 வாரமாக, இப்படம் முதல் இடத்தில்  உள்ளது. இதுவரை எந்தவொரு இந்தியத் திரைப்படமும் செய்யாத புதிய சாதனை இதுவென்பது குறிப்பிடதக்கது.
Previous Post

பிரைம் வீடியோ இன்றைய தேதி வரையிலான அதன் அனைத்து மொழிகள் மற்றும் பிரிவுகள் முழுவதுமாக கிட்டத்தட்ட 70 தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பரந்த அளவிலான மிகப்பெரிய பட்டியலை வெளியிட்டது

Next Post

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் எஸ்.எஸ்.கார்த்திகேயா ஆகியோர், ஃபஹத் பாசிலுடன் 2 சுவாரஸ்யமான திரைப்படங்களில் இணைந்துள்ளனர்

Next Post

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் எஸ்.எஸ்.கார்த்திகேயா ஆகியோர், ஃபஹத் பாசிலுடன் 2 சுவாரஸ்யமான திரைப்படங்களில் இணைந்துள்ளனர்

Popular News

  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !

    0 shares
    Share 0 Tweet 0
  • ’இருமுடி கட்டு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.