• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் திரைப்படமான “ஆபிரகாம் ஓஸ்லர்” இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது !!

by Tamil2daynews
March 25, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் திரைப்படமான “ஆபிரகாம் ஓஸ்லர்”
இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது !! 

 

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லரான ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்’ திரைப்படத்தை, ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது.  நடிகர் ஜெயராம் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நட்சத்திர நடிகர் மம்முட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

மிதுன் மானுவல் தாமஸ் இயக்கியுள்ள இப்படத்தினை ரந்தீர் கிருஷ்ணன் எழுதியுள்ளார். தொடர் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக, திருச்சூரில் உள்ள காவல்துறை உதவி ஆணையரான ஓஸ்லரின் முயற்சிகளைப் பற்றிய படம் தான் ஓஸ்லர்.   ரசிகர்களை இருக்கையின் விளிம்பில் வைத்திருக்கும் இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

ஓஸ்லர் வாழ்வில் அவருக்கு ஏற்படும் தனிப்பட்ட சோகத்தை  அவரால் தாங்கிக்கொள்ள முடியாத நேரத்தில்,  காவல் துறை சந்தித்த மிகக் கடினமான வழக்குகளில் ஒன்றான, புத்திசாலித்தனமான, இரக்கமற்ற சீரியல் கில்லர்களை எதிர்கொள்கிறார் ஓஸ்லர்.

இன்சாமினியா எனும் தூக்கமின்மை மற்றும் ஹாலுசினேஷன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் ஓஸ்லர்,  இந்த வழக்கினை அந்த கடினமான நேரத்தில் எப்படி பல சவால்களை தாண்டி, எப்படி முடிக்கிறார் என்பது தான் இந்தப்படம்.

இப்படத்தில் ஜெயராம் நாயகனாக நடிக்க, மம்முட்டி, அனஸ்வர ராஜன், அர்ஜுன் அசோகன், அனூப் மேனன், சைஜு குருப், ஜோசப் மேத்யூஸ், ஆர்யா சலீம், செந்தில் கிருஷ்ணா, ஜெகதீஷ் மற்றும் திலீஷ் போத்தன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார், மிதுன் முகுந்தன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முன்னதாக ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றி அமைத்துள்ளது. ரசிகர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது, மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.
Previous Post

நடிகர் சூர்யாவின் ’கங்குவா’ பட டீசர் குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட 2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது!

Next Post

‘கள்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

Next Post

‘கள்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

Popular News

  • சிக்மா’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்ட Dr B Nail Galaxy…பிரியா தயாநிதி மாறன் திறந்து வைத்தார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நடன அசைவுகளை துல்லியமாக ஆடுவதை விட அதை ரசித்து ஆடுவேன்’ – சாய் பல்லவி

    0 shares
    Share 0 Tweet 0
  • சிக்னல் அட் 11.30 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • டெலிவரி பாய் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கார்த்திகேயன் சந்தானம், லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் கூட்டணியில் உருவாகும் ‘மேயாத மான் 2’

November 29, 2026

வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெயின்’ படத்தின் ‘டிரெயின் ஆன் வீல்ஸ்’ விளம்பரப் பயணம் தொடக்கம்! டிசம்பர் 4-ம் தேதி ரிலீஸ்!

November 29, 2026

IFFI விழாவில் திரையிடப்பட்ட ‘கூடு- KOODU’ திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு

November 29, 2026

பேசில் ஜோசப்- LK அக்ஷய் குமார் இணைந்து மிரட்டும் ‘ராவடி- Raawadi ‘ படத்தின் குஜிலி மஸ்து இரண்டாம் பாடல் வெளியீடு

November 29, 2026

இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைக் காணிக்கை: ‘ஆபரேஷன் சிந்தூர்’ பின்னணியிலான திரைப்படம் அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமியில் பிரம்மாண்ட பூஜையுடன் தொடக்கம்

November 29, 2026

மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் ரசிகர்களுக்காகக் களமிறங்கும் மலையாளத் திரைப்படங்கள்!

November 29, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.