• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘ ஆலகாலம்’ – விமர்சனம்

by Tamil2daynews
April 6, 2024
in விமர்சனம்
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘ ஆலகாலம்’ –  விமர்சனம் 

முதலில் கொண்டாட்டமாக அறிமுகமாகி பின்பு திண்டாட்டமாகி வாழ்க்கையைப் படுகுழியில் தள்ளும் மதுப்பழக்கம் குறித்த அபாயத்தைச் சொல்லும் படங்கள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் சரியான பெயரோடு வந்திருக்கும் படம் ஆலகாலம்.

குக்கிராமத்து ஏழை மக்களுக்கும் நம் மகன் நகரத்தில் பெரிய கல்லூரியில் படிக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கும்.அப்படிப் படிக்க வைப்பதற்காக அவர்கள் படும்பாடுகள் சொல்லி மாளாதவை. இப்படத்திலும் கிராமத்து ஏழைத்தாய் ஈஸ்வரிராவ் தன் மகனை பெரியகல்லூரியில் படிக்க வைக்கிறார்.அவரும் நன்றாகப் படிக்கிறார்.அவருடைய படிப்பறிவைக் கண்டு வியந்து அவரை ஒரு பெண் காதலிக்கும் வகையில் இருக்கிறார்.அவர் வாழ்வில் மது நுழைவதும் அதனால் ஏற்படும் கொடும் விளைவுகளும்தாம் படம்.

கிராமத்து அப்பாவி மாணவராக அனைவரையும் கவரும் வகையில் நடித்திருக்கிறார் ஜெயகிருஷ்ணா.மதுப்பழக்கத்துக்கு ஆளான பின்பு அவருடைய நடிப்பு வியக்க வைக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் சாந்தினிக்கு இளமைத்துள்ளல், குடும்பப் பொறுப்பு ஆகியனவற்றை வெளிப்படுத்துகிற வேடம்.இரண்டிலும் பொருத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஈஸ்வரிராவின் சிறப்பான நடிப்பு பல இடங்களில் கண்கலங்க வைப்பதோடு படத்தின் கருத்தை மக்களிடம் ஆழமாகப் பதியவைக்கவும் செய்திருக்கிறது.

தங்கதுரை,தீபா சங்கர்,கோதண்டம் உள்ளிட்டோருக்கும் நல்ல வேடங்கள் அமைந்திருக்கின்றன.
அதற்குத் தக்க நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கா.சத்தியராஜ்.புறக்காட்சிகளில் மட்டுமின்றி அகவுணர்வுகளையும் காட்சிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் மு.காசிவிஸ்வநாதன், கதையையும் அது சொல்லும் கருத்தையும் சரியாக வெளிப்படுத்தும் வகையில் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார்.அவருடைய வேகமும் விவேகமும் படத்தை இரசிகர்களிடம் சரியாகக் கொண்டு சேர்க்கிறது.

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் நன்று.பின்னணி இசையும் அளவாக அமைந்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது.

நாயகனாக நடித்திருக்கும் ஜெயகிருஷ்ணாதான் படத்தை இயக்கியிருக்கிறார்.தயாரிப்பாளரும் அவரே.

திரைக்கலை மூலம் ஒரு நல்ல கருத்தை மக்களுக்குச் சொல்லவேண்டும் என்கிற எண்ணத்தைச் செயல்படுத்த உழைத்து அதில் வெற்றி பெற்றிருக்கிறார்.நடிகராகவும் வரவேற்புப் பெற்றிருப்பது கூடுதல் வெற்றி.

மொத்தத்தில் இந்த படம்  நம் நாட்டிற்கு தேவையான படம்
Previous Post

“வல்லவன் வகுத்ததடா” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Next Post

‘WHITE ROSE’ – (வெள்ளை ரோஜா) – விமர்சனம்

Next Post

'WHITE ROSE' - (வெள்ளை ரோஜா) - விமர்சனம்

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.