• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘ரோமியோ’ அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு முழுமையான படமாக இருக்கும்” – நடிகர் விஜய் ஆண்டனி!

by Tamil2daynews
April 12, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ரோமியோ’ அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு முழுமையான படமாக இருக்கும்” – நடிகர் விஜய் ஆண்டனி!

 

தனது துள்ளல் இசையால் ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆண்டனி தற்போது நடிகராகவும் சிறந்த படங்களைக் கொடுத்து மில்லியன் கணக்கான சினிமா ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார். இசையமைப்பாளர், நடிகர் என்பதையும் தாண்டி அவர் தயாரிப்பாளராகவும் இருப்பதால் பார்வையாளர்களின் ரசனைக்கேற்ப தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார். இப்போது, அவர் நடிப்பில் உருவாகியுள்ள ரொமாண்டிக்- காமெடி திரைப்படமான ‘ரோமியோ’ ஏப்ரல் 11 ஆம் தேதி உலகளவில் பிரமாண்டமாக வெளியாகத் தயாராக உள்ளது.

படம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி கூறுகையில்,
“விநாயக் கதையை என்னிடம் சொல்லி முடித்தவுடன் அதன் ஆழம் மற்றும் அதில் இருந்த உணர்வுப்பூர்வமான விஷயங்கள் என்னை கவர்ந்தன. எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எமோஷனல் கலந்த கதையாக உருவாகியுள்ள ‘ரோமியோ’ இன்றைய இளைஞர்களை நிச்சயம் கவரும் என நான் நம்புகிறேன். ரொமாண்டிக் காமெடி கதைகள் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் வரவேற்பு பெற்ற ஜானர். இந்த படமும் அப்படி ரசிகர்களுக்குப் பிடிக்கும். தான் சொன்னதை திரையில் கொண்டு வர வேண்டும் என முழு அர்ப்பணிப்போடு விநாயக் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் வேலை பார்த்தார்” என்றார்.

சக நடிகர்களுடன் பணிபுரிந்தது குறித்து விஜய் ஆண்டனி தெரிவித்ததாவது, “மிருணாளினி ரவியுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவம். மிகவும் அர்ப்பணிப்புள்ள நடிகை. எப்படிப்பட்ட சவாலான காட்சி கொடுத்தாலும் திறமையாக நடித்துவிடுவார். ஒட்டு மொத்த குழுவும் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. மதிப்பிற்குரிய தலைவாசல் விஜய் சாருடன் பணிபுரிந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். ‘ரோமியோ’ அனைத்து வயதினருக்கும் ஏற்ற மகிழ்ச்சியான படமாக இருக்கும்” என்றார்.

’ரோமியோ’ படத்தை விநாயக் வைத்தியநாதன் எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். முதன்மை கதாபாத்திரங்களில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பரத் தனசேகர் இசையமைத்திருக்க, ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Previous Post

துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி மற்றும் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் ’லக்கி பாஸ்கர்’ பட டீசர் ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுத்துள்ளது!

Next Post

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை ஹைதராபாத்தில் தொடங்கியது.

Next Post

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை ஹைதராபாத்தில் தொடங்கியது.

Popular News

  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹபீபி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • டபுள் ஆக்குபன்ஸி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.