• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி மற்றும் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் ’லக்கி பாஸ்கர்’ பட டீசர் ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுத்துள்ளது!

by Tamil2daynews
April 12, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி மற்றும் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் ’லக்கி பாஸ்கர்’ பட டீசர் ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுத்துள்ளது!

 

துல்கர் சல்மான் பல்வேறு மொழிகளில் தனது அழுத்தமான நடிப்பின் மூலம், தான் பல மொழி நட்சத்திரம் என்பதை நிரூபித்துள்ளார். ’மகாநடி’ மற்றும் ’சீதா ராமம்’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களின் மூலம் தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் தனி அன்பைப் பெற்றுள்ளார். அவர் வரவிருக்கும் தனது பல மொழி திரைப்படமான ’லக்கி பாஸ்கர்’ படத்திற்காக புகழ்பெற்ற இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் இணைந்துள்ளார்.

’லக்கி பாஸ்கர்’ படத்தில், துல்கர் ஒரு எளிய பேங்க் கேஷியராக நடித்துள்ளார். இதுவரை பார்த்திராத தோற்றத்தில் இந்தப் படத்தில் அவரைப் பார்க்க முடிகிறது. ‘லக்கி பாஸ்கர்’ படக்குழு ஈத் பண்டிகையை கொண்டாடும் வகையில் படத்தின் டீசரை ஏப்ரல் 11, இன்று வெளியிட்டனர்.

அதிர்ஷ்டத்தையும் பணத்தையும் பெறுவதற்கான பாஸ்கரின் அசாதாரண பயணத்தை இந்த டீசர் காட்டுகிறது. இதில் இடம்பெற்றுள்ள துல்கர் பேசும் வசனம், “ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நபர் செலவைக் குறைத்து சிக்கனமான வாழ்க்கையை நடத்துவதன் மூலம் தனது சேமிப்பை அதிகரிக்க முடியும். அதுவே போட்டி என்று வந்துவிட்டால் ஒத்த ரூபாயைக் கூட மிச்சம் வைக்காமல் செலவு செய்வோம்” என்கிறார். அவர் ஏன் விசாரிக்கப்படுகிறார்? அவர் எப்படி இவ்வளவு பெரிய தொகையை சம்பாதித்தார்? இந்த கேள்விகள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் படம் மீது ரசிகர்களுக்கான ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தை பிளாக்பஸ்டர் எழுத்தாளரும் இயக்கநருமான வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். அவரது முந்தைய படமான ‘சார்/வாத்தி’ சமூகப் பொறுப்புடன் கூடிய பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு படமாக விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். அவர் சமீபத்தில் மகேஷ் பாபு நடித்த ’குண்டூர் காரம்’ படத்தில் நடித்து பிரபலமானார்.

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சியும், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சாய் சௌஜன்யாவும் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் இப்படத்தை வழங்குகிறது. ’லக்கி பாஸ்கர்’ படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பு பக்காளன் மற்றும் நவின் நூலி படத்தொகுப்பாளர். ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் மற்றும் டீசரில் அவரது பின்னணி இசை சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.

‘லக்கி பாஸ்கர்’ தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும்.

Previous Post

’கள்வன்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு தங்க சங்கிலி வழங்கிய தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு!

Next Post

‘ரோமியோ’ அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு முழுமையான படமாக இருக்கும்” – நடிகர் விஜய் ஆண்டனி!

Next Post

'ரோமியோ' அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு முழுமையான படமாக இருக்கும்" - நடிகர் விஜய் ஆண்டனி!

Popular News

  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “வள்ளி மயில்” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • கிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் ‘எல் ஜி எம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.