• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

“உயிர் தமிழுக்கு” – விமர்சனம்

by Tamil2daynews
May 10, 2024
in விமர்சனம்
0
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“உயிர் தமிழுக்கு” – விமர்சனம் 

 

இந்த  படத்தில் இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் சாந்தினி ஸ்ரீதரன், இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், ஆனந்தராஜ், சரவண சக்தி, மகாநதி சங்கர், சுப்பிரமணியம் சிவா, கஞ்சா கருப்பு என பலரும் நடித்துள்ளனர்.

உயிர் தமிழுக்கு என டைட்டில் பார்த்ததும் ஹீரோ தமிழ் மொழிக்காக உயிரை கொடுப்பதாக நினைக்க வேண்டாம். அதேபோல் இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் கண்டு தீப்பொறி பறக்க அரசியல் ஆக்‌ஷன் படம் என எண்ண வேண்டாம். இந்த படத்தில் ஹீரோயின் சாந்தினி ஸ்ரீதரன் பெயர் “தமிழ் செல்வி” அவ்வளவு தான்.  எதற்காக “உயிர் தமிழுக்கு” என பெயர் வைத்தார்கள் என்று இப்போது புரிந்திருக்குமே! (முதலில் இப்படத்துக்கு வைத்த பெயர் “நாற்காலி” என்பது குறிப்பிட வேண்டிய தகவல்).
Uyir Thamizhukku tamil Movie - Overview
கதை என்னவென்று பார்த்தால், சென்னையில் ஒருநாள் அதிகாலையில் முற்போக்கு மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான ஆனந்தராஜ் மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். அவரின் மகளான சாந்தினியை காதலிக்கும் எதிர்க்கட்சியான புரட்சிகர மக்கள் முன்னணி கழகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் அமீர் தான் இந்த கொலையை செய்தார் என குற்றம் சாட்டப்படுகிறது. இதனை சாந்தினியும் நம்பி அமீரை வெறுக்கிறார். இறுதியாக அமீர் தன் மீதான கொலைப்பழியை நீக்கி சாந்தினியோடு எப்படி சேர்ந்தார் என்பதே இப்படத்தின் கதையாகும்.
சினிமாவில் லாஜிக் பார்த்தால் எதுவும் எடுபடாது என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் இயக்குநர் ஆதம்பாவா. கேபிள் டிவி நடத்தும் பாண்டியன் (அமீர்), தமிழ் செல்வி (சாந்தினி) மீது ஏற்படும் காதலால் அரசியலுக்குள் வருகிறார். காதலிக்காக அரசியல் செய்வது மட்டுமல்லாமல் அவருக்காக கண்டன பொதுக்கூட்டம், நன்றி அறிவிப்பு கூட்டம் என அனைத்தையும் நடத்துகிறார். ஹீரோயின் சாந்தினி நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழுக்கு மீண்டும் வந்துள்ளார். முதல் பாதி காதல் காட்சிகளில் அழகாக நடித்துள்ளார். ஆனால் இரண்டாம் பாதியில் சுத்தமாக நடிப்பு வரவில்லை. இவர்களை தவிர்த்து ஆனந்தராஜ், ராஜ் கபூர், இமான் அண்ணாச்சி ஆகியோர் பேசும் வசனங்கள் ஆங்காங்கே  சிரிப்பை வரவழைக்கிறது.
Uyir Thamizhukku tamil Movie - Overview

உயிர் தமிழுக்கு படம் கிட்டதட்ட 5 வருடங்களாக எடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது. முதலில் இந்த படத்தை வி.இசட்.துரை இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் நடுவில் விலகியதால் தயாரிப்பாளர் ஆதம்பாவா படத்தை இயக்கியுள்ளார். இடைவெளி விட்டு விட்டு எடுக்கப்பட்டது படத்தில் அழகாக தெரிகிறது. அதனை கதையில் மேட்ச் செய்ய முயற்சித்துள்ளார்கள். ஆனால் திரைக்கதையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி அதனை ஏமாற்றும் வகையில் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.

அதேபோல் படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குகள். குறிப்பாக வாக்கு எண்ணிக்கை தொடர்பான காட்சிகளெல்லாம் சரியாக விசாரித்து வைத்திருந்திருக்கலாம்.
அமீரின் 'உயிர் தமிழுக்கு' ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Ameer Uyir Thamizhukku

படத்தின் ஒரே பிளஸ் சமகால அரசியலை பகடி செய்திருப்பது தான். சமாதி முன் தியானம், மத்திய அரசின் தயவில் 4 ஆண்டுகள் ஆட்சியை காப்பாற்றியது, மெரினா பீச்சில் அரசுடமையாக்கப்பட்ட தலைவர்கள் சமாதி, இவிஎம் மிஷினால் ஆட்சி செய்யலாம் என நினைப்பது, ஆன்மீக அரசியல், நடிகர்களின் அரசியல் வருகை ஆகியவை தொடர்பான வசனங்கள் ஆங்காங்கே ரசிக்க வைக்கிறது. இசையமைப்பாளர் வித்யாசாகர் கம்பேக் கொடுத்திருந்தாலும் அவரின் பழைய பாணி வேண்டும் என்றே தோன்ற வைக்கிறது.

முழுக்க முழுக்க அரசியல் படம் பார்த்து ரொம்ப நாள் ஆகிறது என்பவர்களுக்கு இப்படம் பிரியாணி தான்
Tags: Adham BavaAmeerChandini SreedharanUyir thamizhukkuUyir Thamizhukku Movie ReviewUyir Thamizhukku Movie Review in Tamil
Previous Post

விஜய் குமார் நடிக்கும் ‘எலக்சன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு

Next Post

விஜய் தேவரகொண்டா + ரவி கிரண் கோலா + ராஜு -ஷிரிஷ் இணையும் பான் இந்திய திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Next Post

விஜய் தேவரகொண்டா + ரவி கிரண் கோலா + ராஜு -ஷிரிஷ் இணையும் பான் இந்திய திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Popular News

  • பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

    ரீ-என்ட்ரி கொடுக்கும் காம்னா ஜெத்மலானி

    0 shares
    Share 0 Tweet 0
  • உழவர்களுக்கு பெருமை சேர்த்த நடிகர் கார்த்தி..!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்; மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கிறார்கள்; இதன் தனித்துவமான சிலந்தி வலை விளம்பர போர்டுகள் சென்னை நகரத்தை அலங்கரிக்கின்றன.

    0 shares
    Share 0 Tweet 0
  • அண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் டைட்டில் வெளியீடு

April 16, 2026

‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்

April 16, 2026

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

April 16, 2026

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

April 16, 2026

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி விழா!

April 16, 2026

குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

April 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.