• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஹைதராபாத்தில் 20,000 ரசிகர்கள் கலந்து கொண்ட கண்கவர் வெளியீட்டு நிகழ்வில் – ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது.

by Tamil2daynews
May 26, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஹைதராபாத்தில் 20,000 ரசிகர்கள் கலந்து கொண்ட கண்கவர் வெளியீட்டு நிகழ்வில் – ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது.

 

இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அறிவியல் புனைகதை காவியமான ‘கல்கி 2898 கி.பி’ படத்தின், ஐந்தாவது மற்றும் இறுதி ஹீரோவான ‘புஜ்ஜி’ என்ற பெயரிடப்பட்ட, எதிர்கால வாகனத்தின் அசத்தலான டீஸரைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர்கள், இறுதியாக மே 22, 2024 அன்று, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட விழாவில் நிகழ்வில் ‘புஜ்ஜி’யை அறிமுகப்படுத்தினர். பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் ஒரு எதிர்கால வாகனம் வருகிறது. இந்த அற்புதமான படைப்பான, ‘புஜ்ஜி’ யை – நடிகர் பிரபாஸ் ஒரு வீடியோவாக வெளியிட்டார், அவர்கள் ஒன்றாகப் பயணம் செய்த தருணங்களை நினைவு கூர்ந்து, பிரபாஸ் முழு மனதுடன், ‘லவ் யூ, புஜ்ஜி’ என்று பிரம்மாண்டமான நிகழ்வில் பகிர்ந்துகொண்டார்.

‘புஜ்ஜி’யின் மூளை அதன் உடல் வடிவத்துடன் கூடவே இணைந்த வித்தியாசமான உருவத்தில் உள்ளது, பிரபாஸ் தனது எதிர்கால வாகனத்தில், ‘புஜ்ஜி’யுடன் ஒரு பெரிய சுவரை மோதி உடைத்துக் கொண்டு வந்து, பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இக்கண்கவர் வெளியீட்டு விழாவில், அவர் தனது நம்பகமான சிறந்த நண்பனுடன் பயணமாவதைக் காண முடிந்தது. பைரவாவும் புஜ்ஜியும் படத்தில் மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கிறார்கள். பைரவாவிற்கும் புஜ்ஜிக்கும் இடையேயான வலுவான தொடர்பையும் நட்பையும் வெளிப்படுத்தும் அழகான விழாவாக இது அமைந்தது.

இயக்குனர் நாக் அஸ்வின், தயாரிப்பாளர்கள் C. அஸ்வனி தத், ஸ்வப்னா தத் சலசானி மற்றும் பிரியங்கா தத் சலசானி மற்றும் நடிகர் பிரபாஸுடன் இணைந்து தயாரிப்பாளர்கள் ஆகியோருடன், கிட்டத்தட்ட இருபதாயிரம் பார்வையாளர்கள் மற்றும் ஊடகங்கள் ஹைதராபாத்தில் கலந்து கொண்டது, மிகப்பிரமாண்டமான வெளியீட்டு நிகழ்வாக திரையுலகில் ஒரு  மைல்கல்லாக அமைந்தது.  மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தியாவின் தனித்துவமான படைப்பான ‘கல்கி 2898 கி.பி’ படத்தின், விளம்பர பணிகள் இத்தனை பிரம்மாண்டமாக துவங்கியிருப்பது ரசிகர்களிடம் பேசு பொருளாகியுள்ளது. பட ரிலீஸையொட்டி  ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில், தயாரிப்பாளர்கள் ‘புஜ்ஜி’யின் அற்புதமான வெளியீட்டு விழா மூலம், பட விளம்பர பணிகளை பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளனர்.

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கல்கி 2898 AD’ படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார்,  வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. ஒரு பன்மொழி படைப்பாக, புராணக்கதைகளால் ஈர்க்கப்பட்ட, எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைகதை வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது.
Previous Post

“நான் முதலில் ஒரு நடிகர் புதிய கதாபாத்திரங்களில் நடிக்க புதியவர்களோடு பணியாற்ற நான் விரும்புகிறேன்” என்கிறார்: பாகுபலி சீரிஸில் பின்னணி குரல் கொடுத்த சரத் கெல்கர்

Next Post

நடிகர் சூர்யா வழங்கும் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து பிரேம் இயக்கும் ‘’மெய்யழகன்’ படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.

Next Post
நடிகர் சூர்யா வழங்கும் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து பிரேம் இயக்கும் ‘’மெய்யழகன்’ படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.

நடிகர் சூர்யா வழங்கும் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து பிரேம் இயக்கும் ‘’மெய்யழகன்’ படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.

Popular News

  • Zion Films மற்றும் MRP Entertainment தயாரிப்பில் பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. !!

    Zion Films மற்றும் MRP Entertainment தயாரிப்பில் பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. !!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கொலையாளி அல்ல..! நான் காதலன்..!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியான நடிகர் ஷாருக்கானின் ‘கிங் – KING’ படத்தின் புதிய போஸ்டர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “விதிகளை மீறும் ருத்ரா கதாபாத்திரம் மிக சுவாரஸ்யமானது”- நடிகை ராதிகா ஆப்தே!

    0 shares
    Share 0 Tweet 0
  • “‘ஹைக்கூ’ திரைப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமானது” – நடிகை ஸ்ரீதேவி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

October 27, 2026

ராமர் மற்றும் சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் ‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து வெளியானது!

October 27, 2026

நடிகர் சூர்யாவால் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின் திரைப்படம் ஃபேமிலி பாய் (Family Boy) – டீசர் வெளியீடு

October 27, 2026

நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

October 27, 2026

‘கொலையாளி அல்ல..! நான் காதலன்..!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியான நடிகர் ஷாருக்கானின் ‘கிங் – KING’ படத்தின் புதிய போஸ்டர்!

October 27, 2026

ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு

October 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.