• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வாராவாரம் ஆரவாரம் செய்து வரும் உப்பு புளி காரம்!

by Tamil2daynews
June 26, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வாராவாரம் ஆரவாரம் செய்து வரும் உப்பு புளி காரம்!

 

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், சமீபத்தில் வெளியான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘உப்பு புளி காரம்’, குடும்பங்கள் கொண்டாடும் அனைத்து அம்சங்களுடன், அனைத்து தரப்பு பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘உப்பு புளி காரம்’ வெப் தொடர் ஒரு கணவன் மனைவி, அவர்களின் நான்கு குழந்தைகள் என ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தில் நடக்கும் அட்டகாசம்,அன்பு, காமெடி, சேட்டை, அனைத்தும் சேர்ந்த கலவையாக கவனிக்க வைக்கிறது.

இதுவரையிலான கதையில், வீட்டைக் கட்டிக்காக்கும் அம்மா சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் வனிதா ஒரு தாயின் கனிவும் கவனிப்பும் நிரம்பியபடி அழகான நடிப்பை தந்துள்ளார். அப்பா சுப்பிரமணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பொன்வண்ணனின் நகைச்சுவை மற்றும் எமோஷனல் காட்சிகள் பார்ப்பவர்களை மனதை ஈர்க்கிறது. வழக்கறிஞர் சின்மயி கதாபாத்திரத்தில் வரும் ஆயிஷாவின் மெச்சுரிட்டியுடன் கூடிய கண்கவர் நடிப்பில் பிண்ணுகிறார். மேலும் சிவா கதாபாத்திரத்தில் வரும் கிருஷ்ணாவுக்கும் அவருக்கும் இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் கலாட்டா ரகம்.

கனா காணும் காலங்கள் மூலம் புகழ் பெற்ற தீபிகா, யாஷிகா கதாபாத்திரத்தில் கல்லூரி முடித்து, வேலையில் சேட்டை செய்து மாஸ் காட்டி இருக்கிறார். உதய் கதாபாத்திரத்தில் வரும் கலக்கப்போவது யாரு புகழ் நவீனின் நடிப்பு, கனவுகளுக்கும் நிதர்சனத்திற்கும் இடையில் தள்ளாடும் இளைஞராக பிரதிபலித்திருக்கிறார். திப்புவாக வரும் ராஜ் ஐயப்பா, நடிகராக ஆசைப்பட்டு, அதற்கான முயற்சியில் ஈடுபடுவது ரசிக்க வைக்கிறது. மேலும், கீர்த்தியாக வரும் அஸ்வினி தனது துருதுரு நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். மகியாக வரும் தீபக் பரமேஸ் மனதில் நிற்கிறார்.

ஒவ்வொரு எபிசோட்டிலும், பல எதிர்பாராத திருப்பங்களுடன் ஆர்வத்தைத் தூண்டி விடும் அளவில் இயக்கி இருக்கிறார் இயக்குனர் எம். ரமேஷ் பாரதி. முதல் எபிசோட் பார்த்தவுடன் அடுத்து என்ன நடக்கும் என்று இரண்டு, மூன்று என்று தொடர்ச்சியாக அனைத்தையும் பார்க்க வைத்து விடுகிறார் இயக்குனர். குறிப்பாக ராஜ் ஐயப்பாவின் உண்மையான தந்தையின் பெயர் சுப்பிரமணி எனத் தெரியவரும் போது ஏற்படும் திருப்பம் சுவாரஸ்யத்தை கூட்டி இருக்கிறது.

பரபர திரைக்கதையுடன், அதிரடி திருப்பங்களுடன் பார்ப்பவர்களை உற்சாகத்தின் எல்லைக்குக் கூட்டிச் செல்வது இந்த தொடரின் சிறப்பு அம்சம்.

கவலைகளை மறந்து உற்சாகமாக ‘உப்பு புளி காரம்’ வெப் தொடரை, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளியுங்கள். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையில் இந்த தொடரின் புது எபிசோடுகள் வெளியாகிறது.

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள ‘உப்பு புளி காரம்’ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸிற்கு ஷேக் இசையமைக்க, பார்த்திபன் மற்றும் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

Previous Post

கல்கி 2898 கி.பி க்ரோனிக்கிள்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது – இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களை ஒன்றாக கண்டுகளியுங்கள் !!

Next Post

லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், “இந்தியன் 2” பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Next Post

லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், “இந்தியன் 2” பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Popular News

  • 418 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹன்சா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான OTT சீரிஸ்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிப்பில் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லராக தயாராகும் ‘ஜான் டோ- John Doe’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.