• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘ரகு தாத்தா’ – விமர்சனம்

by Tamil2daynews
August 16, 2024
in விமர்சனம்
0
0
SHARES
32
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘ரகு தாத்தா’ – விமர்சனம் 

1960களில் நடப்பது போன்ற கதை. வள்ளுவன்பேட்டை எனும் கிராமத்தை சேர்ந்தவர் கயல்விழி(கீர்த்தி சுரேஷ்).வங்கியில் வேலை செய்து வரும் கயல்விழி மாணவியாக இருந்தபோதே இந்தி திணிப்புக்கு எதிராக போராடியவர் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல பெயர். மேலும் இந்தி பிரச்சார் சபையை அமைப்பதை தடுத்தவரும் கயல்விழி தான். கா. பாண்டியன் என்கிற பெயரில் எழுதி வருகிறார் கயல்விழி. அவரின் எழுத்துக்கு ரசிகராக இருக்கிறார் என்ஜினியர் தமிழ்செல்வன்(ரவீந்திர விஜய்).

கயல்விழியை திருமணம் செய்து கொள்ளுமாறு குடும்பத்தார் கட்டாயப்படுத்துகிறார்கள். முதலில் விருப்பம் இல்லாமல் இருந்தார். இந்நிலையில் தான் கொண்டாடும் தாத்தா(எம்.எஸ். பாஸ்கர்) புற்றுநோயால் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததும் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.
Raghu Thatha' trailer: Keerthy Suresh and her rebellious shenanigans seem fun! - Tamil News - IndiaGlitz.com

தன் எழுத்தை கொண்டாடும் தமிழ்செல்வனை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார் கயல்விழி. அந்த நேரத்தில் கயல்விழிக்கு ஒரு உண்மை தெரிய வருகிறது. இதையடுத்து இந்தி திணிப்பை எதிர்க்கும் கயல்விழி இந்தி கற்று தேர்வு எழுத முடிவு செய்கிறார்.

முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்துவிட்டார் இயக்குநர் சுமன் குமார். பெண்கள் முன்னேற்றம், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் என படம் சென்றாலும் ஓவராக அறிவுரை வழங்குவது போன்று இல்லாதது ரகு தாத்தாவின் பெரிய பலம். அதே சமயம் கதையுடன் ஒன்ற நேரம் எடுக்கிறது. முதல்பாதியின் பெரும்பகுதி வள்ளுவன்பேட்டையை பற்றியே செல்கிறது. அதை பார்க்கும்போது என்ன தான் சொல்ல வருகிறார்கள் என நினைக்கத் தோன்றுகிறது. குறிப்பிட்ட கதாபாத்திரங்கள், இடத்தை சுற்றியே கதை நகரும் போது ஈர்ப்பு ஏற்படவில்லை.Raghu Thatha Movie Review: Keerthy Suresh's film has got interesting sub-plots let loose in a middling narrative

நல்ல வேளை இரண்டாம் பாதியில் நம்மால் கயல்விழியின் நிலைமையை புரிந்து கொள்ள முடிகிறது. கயல்விழி இந்தி தேர்வு எழுத முடிவு செய்ததில் இருந்து கடைசி வரை காமெடி மற்றும் சஸ்பென்ஸை அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் சுமன்.

சரியான கலைஞர்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார் சுமன். கயல்விழியாகவே மாறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்தி திணிப்புக்கு எதிராக கீர்த்தி சுரேஷ் பேசிய விதம் எதார்த்தமாக உள்ளதே தவிர எரிச்சல் வரவைக்கவில்லை. ரவீந்திர விஜய்யின் நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும்.Raghu Thatha Review: A Simple Story That Effectively Handles A Complex Subject | Times Now
எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி நடிப்பு சிறப்பு. போதிக்காமல் படத்தை எடுத்துச் சென்றது தான் ரகு தாத்தாவுக்கு கை கொடுத்திருக்கிறது. ஷான் ரோல்டனின் இசை பலம்.மொத்தத்தில் இந்த ரகு தாத்தாவை குடும்பத்தினர்  எல்லோருக்கும் பிடிக்கும்
Previous Post

‘டிமான்ட்டி காலனி-2 – விமர்சனம்

Next Post

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ பத்திரிகையாளர் சந்திப்பு

Next Post

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' பத்திரிகையாளர் சந்திப்பு

Popular News

  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பஞ்சாயத்துப்பட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.