• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

பஞ்சாயத்துப்பட்டி – விமர்சனம்

by Tamil2daynews
October 10, 2026
in விமர்சனம்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பஞ்சாயத்துப்பட்டி – விமர்சனம்

 

கிராமத்து மண் வாசனையையும், அங்கே நிலவும் மனித உறவுகளையும், பஞ்சாயத்து அரசியலையும் மையமாக வைத்து உருவாகியிருக்கும் ஒரு திரைப்படம் தான்  ‘பஞ்சாயத்துப்பட்டி’. மோகன் தாஸ் இயக்கியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, பஞ்சாயத்துப்பட்டி என்ற கிராமத்தில் ஊர் நாட்டாமைக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கிறது. கருப்பாக இருக்கும் குழந்தைக்கு அமாவாசை எனவும், கலராக இருக்கும் குழந்தைக்கு பௌர்ணமி எனவும் பெயர் வைக்கிறார். எந்த குழந்தை முதலில் பிறந்தது என தெரியாததால் தனக்கு பின் பஞ்சாயத்து தலைவராக இருவரையும் நியமிக்கிறார். எதிரும் புதிருமாக இருக்கும் இவர்களில் அமாவாசை நாட்டாமை பாதி நாட்களும், பௌர்ணமி நாட்டாமை பாதி நாட்களும் பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார்கள். அந்த ஊரில் காதலுக்கு எதிர்ப்பு இருக்க, விஷ்ணுவும் (நாயகன் ஜெய்), கயல்விழியும் (நாயகி வினோஸ்ரீ) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனால் கோபமடையும் அமாவாசை நாட்டாமை அவர்கள் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார். அந்த நேரத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் நாயகனின் நண்பன் கண்ணன் நாட்டாமையிடம் கேள்வி கேட்க, அமாவாசையோ கில்லி போட்டியில் மோதி வென்றால் அவர்களை ஊருக்குள் சேர்த்துக் கொள்கிறேன் என சவால் விடுகிறார். அந்த சவாலில் நாயகனின் நண்பர்கள் வென்றார்களா? நாயகனும், நாயகியும் ஊருக்குள் வந்தார்களா? என்பதே மீதிக்கதை.
இயக்குனர் மோகன் தாஸ் கிராமத்தின் இயல்பான வாழ்க்கை, அங்குள்ள மனிதர்களின் பேச்சு, பழக்க வழக்கங்கள், அதிகாரப் போட்டி என கதையின் களத்தை நமக்கு நெருக்கமாகக் கடத்துகிறார். பெரிய நகரத்து பிரம்மாண்டத்தை நம்பாமல், எளிய கிராமத்து மனிதர்களையும் அவர்களது அன்றாட பிரச்சினைகளையும் திரையில் முன்னிறுத்தியிருப்பது படத்தின் முக்கியமான பலம். நகைச்சுவை, காதல், பஞ்சாயத்து, மோதல் என பல அம்சங்களை ஒன்றோடொன்று இணைத்து செல்லும் விதத்தில் படம் ரசிக்கும்படியான படமாக மாறுகிறது. பஞ்சாயத்து தலைவர்களில் அதிகார மோதலுக்கு நடுவே ஜெய், வினோஸ்ரீ இடையிலான காதல் காட்சிகள் கதைக்கு காதல் பரிமாணத்தையும் வழங்குகின்றன. கிராமங்களின் முக்கியமான கில்லி விளையாட்டை கிளைமாக்ஸில் வைத்து அந்த விளையாட்டை மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறார்.
குறிப்பாக கிராமத்து கதாபாத்திரங்களின் தோற்றம், பெயர்கள், பேச்சு வழக்கு மற்றும் அவர்களுக்கிடையேயான உரையாடல்கள் காட்சிகளுக்கு இயல்பான தன்மையை கொடுக்கின்றன. குறிப்பாக நாட்டாமை கதாபாத்திரங்களைச் சுற்றி உருவாக்கப்பட்ட காட்சிகள் புதுமையாகவும, படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கின்றன. அதே நேரத்தில், கதை இன்னும் அழுத்தமாகவும், சில இடங்களில் திரைக்கதை வேகமாகவும் அமைந்திருந்தால் படத்தின் தாக்கம் மேலும் அதிகரித்திருக்கும். படத்தின் பட்ஜெட் குறைவு என்பது காட்சிகளை பார்க்கும்போதே தெரிகிறது. அது தொழில்நுட்ப ரீதியில் படத்தின் தரத்தை கொஞ்சம் குறைத்திருக்கிறது. அடுத்தடுத்த படங்களில் குறைகளை களைந்தால் இயக்குனர் இன்னும் நல்ல படங்களை தரலாம்.
கதையின் நாயகன் ஜெய், நாயகி வினோஸ்ரீ இடையேயான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. பாடல் காட்சிகளிலும் அவர்கள் காட்டும் அன்யோன்யமும் நிஜமான கிராமத்து காதலர்களை பார்த்த உணர்வை தருகிறார்கள். நாயகனின் நண்பர்களாக வரும் ஸ்பேனர் பாண்டி, நட்டு போல்ட் மற்றும் அமெரிக்க நண்பன் கண்ணன் ஆகியோரும் கதைக்கு ஏற்ப காமெடியிலும் கைகொடுக்கிறார்கள்.
இவர்களை எல்லாம் தாண்டி அதிகம் கவனம் ஈர்ப்பது பெளர்ணமி நாட்டாமையாக வரும் கேசவனும், அமாவாசை நாட்டாமையாக வரும் பிரபாகரனும் தான்.  அதிலும் கேசவன் செய்யும் அலப்பறைகள் சிரிக்க வைக்கிறது. பிரபாகரன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். வாய் பேசாமல் தன்னுடைய ஆக்ஷன் மூலம் காமெடி செய்யும் ரங்கன் அவரது உடல்மொழி மற்றும் செயல்களால் ரசிக்க வைக்கிறார். பார்வையற்றவராக, நாயகனின் தந்தையாக வருபவரும் நல்ல நடிப்பு.
சினிமா பூச்சு இல்லாமல் அச்சு அசல் ஒரு கிராமத்தை மிக இயல்பாக அப்படியே காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் மோகன் தாஸ். ஊர் வீதிகள், மனிதர்கள், பஞ்சாயத்து நடைபெறும் இடங்கள் போன்றவற்றை இயல்பாக காட்டியுள்ளார். படத்தின் நீளமும், படத்தொகுப்பாளர் மோகன் தாஸ் அதை தொகுத்த விதமும் ஆறுதல் அளிக்கிறது. திவாகர் மற்றும் ராஜிவ் இசை கதையின் சூழலுக்கு ஏற்ப பயணிக்கிறது. பாடல்கள் எளிமையாகவும், இரைச்சல் இன்றியும் இருப்பது மனதுக்கு இதம்.
மொத்தத்தில் ‘பஞ்சாயத்துப்பட்டி’, ஒரு எளிமையான கிராமத்து பொழுதுபோக்கு திரைப்படமாக கவனம் பெறுகிறது.
Previous Post

லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா!

Next Post

மனதை வருடும் உணர்வுகளும் நகைச்சுவையும் நிறைந்த ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘ஹைக்கூ’வின் டிரெய்லர் வெளியானது!

Next Post

மனதை வருடும் உணர்வுகளும் நகைச்சுவையும் நிறைந்த ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘ஹைக்கூ’வின் டிரெய்லர் வெளியானது!

Popular News

  • சிபிராஜ் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம்: ‘ஜீப்ரா’ பட இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’டோரதி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து மன்னர் தசரதராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • மனதை வருடும் உணர்வுகளும் நகைச்சுவையும் நிறைந்த ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘ஹைக்கூ’வின் டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சிபிராஜ் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம்: ‘ஜீப்ரா’ பட இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார்!

October 10, 2026
ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

October 10, 2026

’டோரதி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு!

October 10, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து மன்னர் தசரதராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டர் வெளியானது!

October 10, 2026

மனதை வருடும் உணர்வுகளும் நகைச்சுவையும் நிறைந்த ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘ஹைக்கூ’வின் டிரெய்லர் வெளியானது!

October 10, 2026

பஞ்சாயத்துப்பட்டி – விமர்சனம்

October 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.