• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இரண்டு தேசிய விருதுகளை வென்ற திருச்சிற்றம்பலம்!

by Tamil2daynews
August 17, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இரண்டு தேசிய விருதுகளை வென்ற திருச்சிற்றம்பலம்!

 

கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது திருச்சிற்றம்பலம் திரைப்படம்.

சன் குழுமத்திலிருந்து துவங்கப்பட்ட  சன் பிக்சர்ஸ் நிறுவனம் அயன், சிங்கம், ஆடுகளம், மங்காத்தா உட்பட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வினியோகித்தும், எந்திரன், சர்கார், பேட்ட, பீஸ்ட், ஜெயிலர், சமீபத்திய பிளாக்பஸ்டர் வெற்றித் திரைப்படமான ராயன் உட்பட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தும் தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இவர்கள் தயாரிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் இணையும் ‘கூலி’ திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ஐந்தாவது திரைப்படம் ஆகும்.

சன் பிக்சர்ஸ்  தயாரிப்பில், மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் மற்றும் நித்யா மேனன் இருவரும் முதன்முறையாக ஜோடியாக நடித்த திரைப்படம் திருச்சிற்றம்பலம்.  இத்திரைப்படத்தில் ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் போன்ற முன்னணி நடிகர், நடிகைகளும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மாபெரும் வெற்றி அடைந்தது.

இந்திய அரசால் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. 70-வது தேசிய திரைப்பட விருதுப் பட்டியலில், இத்திரைப்படத்திற்கு சிறந்த நடிகை மற்றும் நடன இயக்கம் ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பன்மொழி நடிகையான நித்யா மேனன் தனது தலைசிறந்த நடிப்பின் மூலம் ஏற்கனவே தன்னை நிரூபித்தவர்.  ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை பதிவு செய்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.

மாபெரும் வெற்றி கூட்டணியான  தனுஷ் மற்றும் அனிருத் இணை நீண்ட நாட்களுக்கு பிறகு இத்திரைப்படத்தில் மீண்டும் சேர்ந்து சிறந்த வெற்றிப் பாடல்களை ரசிகர்களுக்கு விருந்தளித்திருந்தனர். ‘தாய்க்கிழவி’, ‘மேகம் கருக்காதா’ உட்பட அனைத்து பாடல்களும் ஹிட்டாகின. இப்பாடல்களுக்கு நடன இயக்குனர்களாக சதீஷ் கிருஷ்ணன் மற்றும் ஜானி பணியாற்றியிருந்தனர். இவர்கள் இருவருக்கும் இத்திரைப்படத்திற்காக சிறந்த நடன இயக்குனர்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விருது பெற்றவர்களும் படக்குழுவும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Previous Post

‘தங்கலான்’ – விமர்சனம்

Next Post

மெல்போர்னில் நடந்த இந்தியன் ஃபிலிம் பெஸ்டிவலில் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் ‘சிறந்த இயக்குந’ருக்கான விருதை வென்றிருக்கிறார்!

Next Post

மெல்போர்னில் நடந்த இந்தியன் ஃபிலிம் பெஸ்டிவலில் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் ‘சிறந்த இயக்குந'ருக்கான விருதை வென்றிருக்கிறார்!

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.