• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘ஆலன்’ – விமர்சனம்

by Tamil2daynews
October 19, 2024
in விமர்சனம்
0
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ஆலன்’ – விமர்சனம் 

 

8 தோட்டாக்கள், ஜீவி பட புகழ் வெற்றி நடித்திருக்கும் படம் ஆலன்.

சிறு வயதில் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த தியாகு, ஒரு விபத்தில் தனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் இழக்கிறார். இதனால், மனமுடைந்து காசிக்கு ஓடி விடுகிறார்.

அங்கு ஆன்மீக வாழ்க்கை வாழத் துவங்குகிறார் தியாகு. பல வருடங்களாக சிறுவயதில் ஏற்பட்ட விபத்து அவரின் மனதிற்கு வடுவாக நிற்கிறது. அதுமட்டுமல்லாமல், தியாகுவிற்குள் இருக்கும் எழுத்துத் திறமையும் ஆன்மீகத்தை தொடர மறுக்கிறது.

இதை அறிந்த, தியாகுவின் குரு இனி நீ ஆன்மீகவாதியாக வாழாமல் சாதாரண மனிதனாக வாழ்ந்து உன் எழுத்துத் திறமையை மக்களிடம் கொண்டு செல் என்று கூறி விடுகிறார்.
Trailer [OV]

அதனை ஏற்றுக் கொண்டு காசியிலிருந்து சென்னைக்கு வருகிறார் தியாகு. வரும் வழியில் நாயகி மதுராவை சந்திக்கிறார். அவருடன் நட்பு ஏற்பட, சென்னையில் இருவரும் சேர்ந்து பழக ஆரம்பிக்கின்றனர்.

நட்பானது நாளடைவில் காதலாக மாறுகிறது. ஒருநாள், சில விஷமிகளால் மதுரா கொல்லப்படுகிறார். இதனால், வாழ்க்கையே வெறுத்துப் போன தியாகு மீண்டும் சன்னியாச வாழ்க்கைக்குச் செல்கிறார்.

அதன்பிறகு அவரது வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.

சிறந்த கதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் வெற்றி, இப்படத்தில் சற்று சறுக்கியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். முகம் முழுவதும் தாடியை வளர்த்துக் கொண்டு இக்கதாபாத்திரத்திற்கு துளியும் பொருத்தமில்லாத ஹீரோவாக தான் தென்பட்டார்.

நாயகி மதுரா, தேவதையாக சில காட்சிகளில் வந்து சென்றார். ஒரு சில காட்சிகள் என்றாலும், மனதில் நிற்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி விட்டார் அனு சித்தாரா.

ஒரு அமைதியான நீரோட்டம் போன்ற ஒரு கதையை கையில் எடுத்த இயக்குனர், அதை திரைக்கதையாக கொடுக்கும் இடத்தில் சற்று தடுமாறியே சென்றிருக்கிறார்.

காட்சிகளை இன்னும் சற்று யதார்த்தமாகவும் உயிரோட்டமாகவும் கொடுத்திருந்திருக்கலாம்.,,

இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக நிற்கிறது.

மொத்தத்தில் இந்த ஆலன் இன்றைய தலைமுறையினரின் மனதை கவருமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
Previous Post

‘ராக்கெட் டிரைவர்’ – விமர்சனம்

Next Post

கல்வியின் மகத்துவத்தை பேசும் நல்ல படைப்பு சார் – திருமாவளவன் புகழாரம் !!

Next Post

கல்வியின் மகத்துவத்தை பேசும் நல்ல படைப்பு சார் - திருமாவளவன் புகழாரம் !!

Popular News

  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • லெலின் பாண்டியன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • டோரதி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.