• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில், மெகாஹிட் “ஏ.ஆர்.எம்” திரைப்படம், நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது !!

by Tamil2daynews
November 7, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில், மெகாஹிட் “ஏ.ஆர்.எம்” திரைப்படம்,  நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது !! 

 

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான  டிஸ்னி+ ஹாட்ஸ்டார், வரும்  நவம்பர் 8 முதல், மலையாள முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில்,  மலையாள சினிமா வரலாற்றில், மிகப்பிரம்மாண்ட படைப்பாக வெளியாகி வெற்றி பெற்ற, “ஏ.ஆர்.எம்” திரைப்படத்தை,  ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.  இயக்குநர்  ஜிதின் லால் இயக்கியுள்ள இப்படத்தை, மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில்,  டாக்டர். ஜகாரியா தாமஸ் உடன் இணைந்து லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்துள்ளார்.

டோவினோ தாமஸ், கீர்த்தி ஷெட்டி, சுரபி லட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ், பாசில் ஜோசப், சஞ்சு சிவராம், ஹரிஷ் உத்தமன், ரோகினி, ஜெகதீஷ், அஜு வர்கீஸ், சுதீஷ் மற்றும் பிஜு குட்டன் ஆகியோர் நடித்துள்ள இந்த ஃபேன்டஸி திரைப்படம்,  அமானுஷ்யம் சூழ்ந்த சிலையின் பின்னணியில், மூன்று தலைமுறைகளின்  கதையைச் சொல்கிறது.  ஏ.ஆர்.எம் ஒரு விண்கல் மற்றும் ஒரு பழங்கால கோயில் விளக்கைச் சுற்றியுள்ள மர்மங்களை விரிவுபடுத்துகிறது, போர்வீரன் குஞ்சிகேலு, திருடன் மணியன் மற்றும் அஜயன் ஆகிய மூன்று மையக் கதாபாத்திரங்களின் பயணங்களைச் சிக்கலான முறையில் இது இணைக்கிறது. மூன்று தலைமுறை பாத்திரங்களில் டோவினோ தாமஸால் வித்தியாசமான தோற்றங்களில் அசத்தியுள்ளார்.

படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி.ஜான் படம்பிடித்துள்ளார், ஷமீர் முகமதுவின் எடிட்டிங் மற்றும் திபு நினன் தாமஸின் பரபரப்பான இசையமைப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும் இந்த மாயாஜால ஃபேன்டஸி த்ரில்லரான ஏ.ஆர்.எம் – திரைப்படத்தைக் காணத்  தவறாதீர்கள்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது.  மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.
Previous Post

‘ஹர்பஜன் சிங்’ நடித்து தமிழில் அடுத்து உருவாகும் திரைப்படமான ‘சேவியர்’ விரைவில் வெளியாகவுள்ளது

Next Post

ரிபெல் ஸ்டார் பிரபாஸ், புதிய கதைகள் மற்றும் எழுத்தாளர்களுக்காக பிரத்தியேக இணையதளமான ‘தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்’ தளத்தை துவங்கி வைத்தார் !!

Next Post

ரிபெல் ஸ்டார் பிரபாஸ், புதிய கதைகள் மற்றும் எழுத்தாளர்களுக்காக பிரத்தியேக இணையதளமான ‘தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்’ தளத்தை துவங்கி வைத்தார் !!

Popular News

  • தளபதி விஜய் உடன் பிறந்த தங்கையை  இதுவரை யாரும் பார்த்திராத அவரின் அறிய புகைப்படம்..!

    தளபதி விஜய் உடன் பிறந்த தங்கையை  இதுவரை யாரும் பார்த்திராத அவரின் அறிய புகைப்படம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்

    0 shares
    Share 0 Tweet 0
  • மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 4’

    0 shares
    Share 0 Tweet 0
  • “துடிக்கும் கரங்களுக்கு முன்.. துடிக்கும் கரங்களுக்கு பின்..” ; உண்மையை உடைத்து பேசிய விமல்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் “ அன்பறிவு” திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.