• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கங்குவா – விமர்சனம்

by Tamil2daynews
November 15, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கங்குவா – விமர்சனம் 

 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா(Kanguva) திரைப்படம் (14-11-2024)அன்று உலகெங்கிலும் வெளியாகியுள்ளது. பாபி தியோல் , திஷா பதானி , யோகி பாபு  உள்ளிட்டவர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில நடித்துள்ளார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

இந்திய ரஷ்ய எல்லையில் மருத்துவ ஆய்வகத்தில்  ரகசியமாக குழந்தைகளை வைத்து ஆராய்ச்சி ஒன்று நடக்கிறது. இந்த ஆய்வகத்தில்  ஜீடா என்கிற ஒரு சிறுவன் தப்பி கோவாவிற்குச் செல்கிறான். Kanguva' movie review: A fiery Suriya headlines Siva's damp squib of a film - The Hinduகாவல்துறையால் தேடப்படும் குற்றவாளிகளை பிடித்து தரும் பவுண்டி ஹண்டர்களாக  ஸ்டைலான என்ட்ரி கொடுக்கிறார்கள் சூர்யாவும் திஷா பதானியும். இவர்களுடன் காமெடி என்கிற பெயரில் கடுப்பேற்றுகிறார்கள் ரெடின் கிங்ஸ்லி மற்றும் யோகி பாபு.  ஆய்வகத்தில் இருந்து தப்பிச் சென்ற சிறுவன் பிரான்சிஸ் இடம் சேர்கிறான்.

நிகழ்காலத்தில் ஒரு கதை நடக்க இன்னொரு பக்கம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடர்கிறது கங்குவாவின் கதை.

இந்தியாவில் படையெடுக்க முடிவு செய்யும் ரோமானியர்கள் தங்கள் படைகள் ஓய்வெடுக்க ஐந்தீவை தேர்ந்தெடுக்கிறார்கள்  பெருமாச்சி , அரத்தி , வெண்காடு , மண்டைக்காடு ,   என ஐந்து இனமக்கள் வாழ்ந்து வரும் தீவு ஐந்தீவு. பெருமாச்சி தீவில் வசிக்கும் மக்களை கொன்று நிலத்தை ஆக்கிரமிக்க திட்டமிடும் ரோமானியர்கள் அரத்தி இனத்தின் தலைவனான உதிரன் ( பாபி தியோல்) உதவியை நாடுகிறார்கள். இவர்களுக்கு பெருமாச்சி இனத்தைச் சேர்ந்த கொடுவன் ( நட்டி) உதவி செய்வதால் அவனுக்கு பெருமாச்சி மக்கள் தண்டனை வழங்குகிறார்கள். அவனுடன் அவனது மகனையும் சேர்த்து கொல்லவேண்டும் என்கிற பெருமாச்சி மக்க்களின் முடிவுக்கு எதிராக நிற்கிறான் கங்குவா. பெருமாச்சியின் இளவரசனான கங்குவா ( சூர்யா) தன் இனத்தை எதிரிகளிடம் இருந்து காத்து கொடுவனின் மகனை காப்பாற்றுவதே கங்குவா படத்தின் கதை.
Kanguva' movie review: A fiery Suriya headlines Siva's damp squib of a film - The Hinduநிகழ்காலத்தில் வரும் பிரான்சிஸ் சூர்யாவின் காட்சிகளில் வைப் செய்ய வைக்கிறேன் என்கிற பெயரில் கடுப்பேற்றியிருக்கிறார் சிறுத்தை சிவா. சூர்யா திஷா பதானி , யோகி பாபு என அனைவரின்  ஓவர் ஆக்டிங்கை சகிக்க முடியவில்லை.

தப்பியோடி வரும் சிறுவனுக்கும் சூர்யாவுக்கு என்ன தொடர்பு என எந்த வித தெளிவுமில்லாமல் 1000 ஆண்டு கடந்த காலத்திற்கு தாவுகிறது படம்.

நிகழ்கால காட்சிகளைவிட கடந்த கால காட்சிகள் ரசிகர்களை அதிகம் கவரும் படியாக அமைந்துள்ளன என்றாலும் வசனம் முதல் திரைக்கதை வரை குழப்பி அடித்து வைத்திருக்கிறார் இயக்குநர்.

கொஞ்ச நேரம் உரைநடைத் தமிழிலும் கொஞ்ச நேரம் பேச்சுத் தமிழிலும் அமைந்த வசனங்கள் குளறுபடியின் உச்சம். மிக பிரம்மாண்டமாக செட் அமைத்து போர் காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் ஒரு சண்டைக் காட்சியிலும் கண்டினியுட்டி சிங் ஆகவில்லை.  முதலையுடன் சண்டை, நடுக்கடலில் சண்டை , பெண்களின் வீரத்தை நிரூபிக்க ஒரு தனிச்சண்டை காட்சி என படம் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகள் தலைவிரித்தாடுகின்றன.

நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் லாஜிக்கே இல்லாமல் இணைத்தது மட்டுமில்லாமல் கார்த்தியை கேமியோ செய்ய வைத்து இரண்டாம் பகுதிக்கு லீட் வேறு கொடுத்திருக்கிறார்கள்.
Kanguva OTT Release: When And Where To Watch Suriya's Epic Fantasy Action Film Post-Theatrical Run - Filmibeatபடத்தை ஓரளவிற்கு உயிரோட்டமாக வைத்திருக்கும் ஒரு அம்சம் என்றால் தேவிஸ்ரீ பிரசாதின் இசை தான். ஒளிப்பதிவாளர் வெற்றி படத்திற்கு ஒரு தனி டோன் செட் செய்திருக்கிறார் என்றாலும் படத்தொகுப்பு காட்சிகளை கோர்வையாக வழங்குவதில் கோட்டை விட்டிருக்கிறது.

படத்தின் ப்ரோடக்‌ஷன் டிசைனர் மிலன் மற்றும் அவர் மனைவிக்கு தனி பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும். சின்ன சின்ன பொருட்கள் முதல் ஆயுதங்கள் , கிராமம் என ஒரு முழு உலகத்தை கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள்.

படத்தின் பிரம்மாண்ட பட்ஜெட்டிற்கு நியாயம் சேர்க்கும் வகையில் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் அமைந்திருக்கின்றன
Kanguva movie trailer: Suriya and Bobby Deol clash in fantasy action adventureபல்வேறு கதாபாத்திரங்கள் படத்தில் இருந்தாலும் சூர்யாவைத் தவிர எந்த கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.அதிலும் நிகழ்காலத்தில் வரும் பிரான்சிஸ் கதாபாத்திரத்தை வித்தியாசமாக காட்ட வேண்டும் என்பதற்காக சூர்யாவின் பிளஸை எல்லாம் மைனஸாக மாற்றிவிட்டார்கள். எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றே தெரியாதபடி திஷா பதானி தமிழ் பேசுகிறார். ரெடின் கிங்ஸ்லி இனிமேல் நெல்சன் படங்களில் நடிப்பதோடு நிறுத்திக்கொள்வது நல்லது.பாபி தியோலின் தோற்றம் செம வெயிட்டாக இருந்தாலும் அவர் செட் பீஸாக மட்டுமே  பயண்படுத்தப்பட்டிருக்கிறார். சொகுசாக நாற்காலியில் உட்கார்ந்து ஆட்களை ஏவிவிடும் வில்லன் டெம்பிளெட்டை மாற்றி புதிதாக முயற்சித்திருக்கலாம்.

ஒரு சிறுவனுக்கு கொடுத்த சத்தியத்தை காக்க முடியாத தலைவன் அந்த சத்தியத்தை நிறைவேற்ற மறுபிறப்பு எடுக்கிறான். இந்த பிறப்பிலாவது தனது சத்தியத்தை அவன் காப்பாற்றினானா என்பதே படத்தின் ஒன்லைன். ஆனால் அந்த அடிப்படை எமோஷனுக்காக காட்சிகளை உருவாக்காமல் பாகுபலி , கே.ஜி.எஃப் என எல்லா படங்களையும் மிஞ்ச வேண்டும் என்பதற்காக  சைன்ஸ் ஃபிக்‌ஷன் , ஃபேண்டஸி என கலந்து கட்டி எடுத்து மூச்சுத்திணற வைத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் இந்த ‘கங்குவா’ படம் நடிகர் சூர்யா சில வருடங்களுக்கு முன்பு  நடித்த ‘ஏழாம் அறிவின்’ கலவை என்றே சொல்லலாம்.

இந்த கங்குவா தயாரிப்பாளருக்கு கொஞ்சமாவது மிஞ்சுமா என்றால் சந்தேகம் தன்.
Previous Post

எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் சார்பில், ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிக்கும் “எனை சுடும் பனி”

Next Post

தனுஷ் மீது நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு..!

Next Post
தனுஷ் மீது நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு..!

தனுஷ் மீது நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு..!

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.