Dont Trouble The Trouble – விமர்சனம்
பகத் பாசில் மலையாள சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். இவர் நடிப்பில் ராஜமௌலி மகன் கார்த்திகேயா தயாரிப்பில் சஷாங் இயக்கத்தில் வெளிவந்துள்ள Dont Trouble The Trouble வெளிவந்துள்ள படம் .
பகத் பாசில் ஒரு ஆம்புலேன்ஸ் ட்ரைவர், பணத்திற்காக பெட்டிங் எல்லாம் கட்டி ஆம்புலேன்ஸ் ஓட்டி தன் வாழ்க்கையை ஓட்டி வருபவர்.இந்த நிலையில் ஸ்மக்லீங் வேலை பார்க்கும் மகேஷ் மஞ்சரேக்கருடன் இவருக்கு ஒரு மோதல் வந்து ரூ. 25 லட்சம் தர வேண்டிய சூழ்நிலை உருவாகுகிறது.

பேபி சாரா கியூட் கேர்ள் ஆக வந்து அவரும் தன் பங்கிற்கு ரசிகர்களை கவர்ந்துள்ளார், படம் முழுவதும் இந்த சாரா கியூட் ரியாக்ஸன் பெர்ப்பாமன்ஸ் என பகத்திற்கு ஈடுகட்டி நடித்துள்ளார்.ஆனால், படத்தில் இவர்களை தாண்டி எந்த ஒரு ப்ளஸ்ஸும் இல்லை, காமெடி, எமோஷன், பேண்டசி என பல விஷயங்கள் வந்தாலும் எதுவுமே நம்மை கவரவில்லை என்பது தான் உண்மை.பகத் கண்டிப்பாக தன்னை சுய பரிசோதனை செய்யும் இடத்தில் உள்ளார், தொடர் சறுக்கலில் இருக்கும் இவர் அடுத்தடுத்தாவது நல்ல படங்களை கொடுத்து கம்பேக் தரவேண்டும்.முதல் பாதி கூட கான்செப்ட் இண்ட்ரஸ்ட் ஆக உள்ளதே என பார்த்தாலும் இரண்டாம் பாதி ஜவ் ஆக இழுக்கிறது. டெக்னிக்கலாக படத்தின் இசை, ஒளிப்பதிவு எல்லாமே ஆவரேஜ் ஆகவே உள்ளது.









