• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டிஸ்னியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் தமிழ் பதிப்பில் டிமோன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் சிங்கம் புலி!

by Tamil2daynews
December 7, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டிஸ்னியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் தமிழ் பதிப்பில் டிமோன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் சிங்கம் புலி!

 

கடந்த 2019 இன் லைவ்-ஆக்ஷன் படமான ‘தி லயன் கிங்’ பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, பிரமிக்க வைக்கும் ‘முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படம் டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகிறது. இதன் தமிழ் பதிப்பில் கதாபாத்திரங்களுக்கு பல முன்னணி நடிகர்கள் குரல் கொடுத்துள்ளனர். முஃபாசாவாக அர்ஜுன் தாஸ், டாக்காவாக அசோக் செல்வன், நடிகர்கள் ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டைமனுக்கு குரல் கொடுத்துள்ளனர். மேலும், இளைய ரஃபிக்கின் குரலாக விடிவி கணேஷ் மற்றும் கிரோஸிற்கு நடிகர் நாசரும் குரல் கொடுத்துள்ளனர்.

இந்த அனுபவம் குறித்து சிங்கம் புலி பகிர்ந்து கொண்டதாவது, “இந்தப் படத்தில் நான் இருப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இது முற்றிலும் தற்செயலானது. 2019 இல் எனக்கு முதலில் வாய்ப்பு கிடைத்த போது, நான் தயங்கினேன். ஆனால் என் குழந்தைகளின் உரையாடலைக் கேட்டவுடன் நான் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இதுபோன்ற வாய்ப்புகள் அரிதானவை என்பதை அவர்கள் எனக்கு நினைவூட்டினர்” என்றார்.
டிமோனுக்கு குரல் கொடுப்பது அவருக்கு மகத்தான அங்கீகாரத்தை அளித்தது மட்டுமல்லாமல், உலகளாவிய பார்வையாளர்களுடன் அவர் பரிச்சியம் ஏற்படுத்திக் கொள்வதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு.  “டிமோனின் கதாபாத்திரம் எப்போதும் நேர்மறையாக இருக்கும் மற்றும் கடின உழைப்பு வெற்றிக்கு முக்கியமானது என்ற நம்பிக்கையை அது கொடுக்கும். நான் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் போதெல்லாம், குழந்தைகள் அடிக்கடி என்னிடம் டிமோனின் வரிகளை பேசிக் காட்டும்படி கேட்பார்கள். அது எனக்கு பெருமையான தருணம்” என்றார்.

‘முஃபாஸா: தி லயன் கிங்’குடன் தொடங்கியிருக்கும் இந்தப் புதிய பயணம் தனக்கு பெரும் உற்சாகம் தருவதாக சிங்கம் புலி தெரிவித்துள்ளார். வாய்ப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் குணச்சித்திர நடிகராக இருந்து உலகளாவிய வாய்ஸ் ஆக்டராக மாறியிருக்கும் அவரது பயணம் பெரிய கனவு காண்பவர்களுக்கு ஒரு உத்வேகம்.

லின்-மானுவல் மிராண்டாவின் கதையைத் தழுவி ‘முஃபாசா: தி லயன் கிங்’ படத்தை பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார்.

‘முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படம் டிசம்பர் 20, 2024 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்திய திரையரங்குகளில் வெளியாகும்.

Previous Post

இயற்கை பேரிடர் காரணமாக ‘ராஜா கிளி’ படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர்-27 க்கு மாற்றம்

Next Post

புஷ்பா-2 – விமர்சனம்

Next Post

புஷ்பா-2 - விமர்சனம்

Popular News

  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.