• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இயற்கை பேரிடர் காரணமாக ‘ராஜா கிளி’ படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர்-27 க்கு மாற்றம்

by Tamil2daynews
December 5, 2024
in சினிமா செய்திகள்
0
இயற்கை பேரிடர் காரணமாக ‘ராஜா கிளி’ படத்தின் ரிலீஸ் தேதி  டிசம்பர்-27 க்கு மாற்றம்
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இயற்கை பேரிடர் காரணமாக ‘ராஜா கிளி’ படத்தின் ரிலீஸ் தேதி  டிசம்பர்-27 க்கு மாற்றம்

 

‘மிக மிக அவசரம்’, ‘மாநாடு’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’.

கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

தம்பி ராமையா இந்த படத்தில் கதைநாயகனாக நடிக்க அவரது வெற்றி கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பாடகர் கிரிஷ், வெற்றிக்குமரன், இயக்குநர் மூர்த்தி, ஷ்வேதா ஷிரிம்டன், சுபா, பிரவீன், முபாஸிர், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவின் போது அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெஞ்சல் புயல்  காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்கள் கன மழையால் பாதிக்கப்பட்டு மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி  உள்ளனர்.

மேலும் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் வரும் டிசம்பர் 13-ஆம் தேதி மீண்டும் ஒரு கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை மையத்தில் இருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இந்த  மழை நாட்களில் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை சமாளிக்கவே போராடும் சூழ்நிலையில் ‘ராஜா கிளி’ படத்தை டிசம்பர் 13-ல் வெளியிடுவது சரியாக இருக்காது எனக்  கருதிய படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதன் ரிலீஸ் தேதியை டிசம்பர் 27 ஆம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளார்.

‘ராஜா கிளி’ இன்றைய காலத்திற்கு ஏற்ற ‘ரத்தக்கண்ணீர்’ போன்ற ஒரு நல்ல கருத்தம்சம் கொண்ட படம் என்பதால் மக்கள் இந்த படத்தை தங்கள் பிரச்சனைகளை மறந்து  திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ரிலீஸ் தேதி மாற்றம் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post

பவர் ஸ்டார் பவன் கல்யாணின் பீரியட் ஆக்‌ஷன் படமான ‘ஹரி ஹர வீர மல்லு பகுதி-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் நுழைகிறது!

Next Post

டிஸ்னியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் தமிழ் பதிப்பில் டிமோன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் சிங்கம் புலி!

Next Post

டிஸ்னியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 'முஃபாசா: தி லயன் கிங்' படத்தின் தமிழ் பதிப்பில் டிமோன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் சிங்கம் புலி!

Popular News

  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • டிஸ்னியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் தமிழ் பதிப்பில் டிமோன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் சிங்கம் புலி!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய சினிமாவில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக பிரபாஸ் ஆட்சி செய்வது ஏன்..?

    0 shares
    Share 0 Tweet 0
  • L G M – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.