• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கலாமயா பிலிம்ஸ் ஜிதேஷ் வி வழங்கும் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ்-நிமிஷா சஜயன் நடிக்கும் ’என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

by Tamil2daynews
December 28, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கலாமயா பிலிம்ஸ் ஜிதேஷ் வி வழங்கும் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ்-நிமிஷா சஜயன் நடிக்கும் ’என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

 

இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள சோஷியல்- பொலிட்டிகல்- திரில்லர் படமான ‘என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ராமேஸ்வரம், சென்னை, பாண்டிச்சேரி மற்றும் கொச்சி உள்ளிட்ட 56 இடங்களில் மூன்று ஷெட்யூல்களில் படமாக்கப்பட்டுள்ளது.

கலாமயா பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஜிதேஷ் வி கூறும்போது, ”திறமையான இந்த அணியுடன் இணைந்து பணிபுரிந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தான் எடுத்து நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் நடிகர் கருணாஸ். அவரது அர்ப்பணிப்பு பரவலான பாராட்டுகளையும், ஏராளமான விருதுகளையும் பெற்றுத் தரும் என்பதில் உறுதியாக உள்ளேன். நடிகை நிமிஷா சஜயனும் இந்த கதாபாத்திரத்திற்காக கடுமையான அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இயக்குநர் சஜீவ் பழூருக்கு தமிழ் திரைப்படங்கள் மீது பெரும் காதல் உள்ளது. இந்தப் படத்தில் நிச்சயம் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வார்.

ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி சிறப்பான ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார்.   ஒட்டுமொத்த தொழில்நுட்பக்குழுவினரும் நடிகர்களும் முழுப்படப்பிடிப்பும் சீக்கிரம் முடிவடைய ஒத்துழைப்புக் கொடுத்துள்ளனர். சாம் சிஎஸ் இசை கதைக்கு புது உத்வேகம் கொடுத்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயம் உருவாகும். விரைவில் படத்தில் அறிவுப்பு தேதி வெளியாகும்” என்றார்.

கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன்ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி மற்றும் பலரும் நடித்திருக்கின்றனர்.

தொழில்நுட்ப குழு:

பேனர்: கலாமயா பிலிம்ஸ்,
தயாரிப்பாளர்: ஜிதேஷ் வி,
எழுத்து மற்றும் இயக்கம்: சஜீவ் பழூர்,
ஒளிப்பதிவாளர்: ஆல்பி ஆண்டனி,
இசையமைப்பாளர்: சாம் சி எஸ்,
படத்தொகுப்பு: ஸ்ரீஜித் சாரங்,
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: எம். சிவகுமார்,
கலை இயக்குநர்: கே. சிவகிருஷ்ணா,
ஆக்‌ஷன்: பி சி ஸ்டண்ட்,
இணை இயக்குநர்: ரதீஷ்,
ஆடை வடிவமைப்பாளர்: ஆர். முருகானந்தம்,
ஒப்பனை: வி. தினேஷ்குமார்,
நிர்வாக தயாரிப்பாளர்கள்: முகேஷ், சல்மான் கே.எம்,
ஸ்டில்ஸ்: கார்த்திக் ஏ.கே,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்,
தயாரிப்பு மேலாளர்கள்: ஆர். ராஜீவ் காந்தி, பி கார்த்தி

Previous Post

அமெரிக்கா டல்லாஸில் நடைபெற்ற “கேம் சேஞ்சர்” முன் வெளியீட்டு நிகழ்வு !!

Next Post

ஸ்மைல்மேன் – விமர்சனம்

Next Post

ஸ்மைல்மேன் - விமர்சனம்

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.