• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ரேவதி இயக்கத்தில் நடிகர்கள் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!

by Tamil2daynews
June 18, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ரேவதி இயக்கத்தில் நடிகர்கள் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!

 

சென்னை, ஜூன் 16, 2025: ஜியோஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் ‘குட் வைஃப்’ தொடரின் டீசரை ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. இது சமூகவலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம். தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இந்தத் தொடரை நடிகை-இயக்குநர் ரேவதி இயக்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக ரேவதி ஓடிடியில் அறிமுகமாகிறார்.

இதே சீரிஸ் இந்தியிலும் ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ என்ற பெயரில், நடிகர்கள் கஜோல் மற்றும் ஜிஷூ சென்குப்தா நடிப்பில் உருவானது. இது ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகி வெற்றிப்பெற்றது. இப்போது தமிழ் ரசிகர்ளுக்கு ஏற்றபடி இந்த தொடர் உருவாகியுள்ளது.

ஓடிடியில் இயக்குநராக அறிமுகவாது குறித்து நடிகை- இயக்குநர் ரேவதி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாவது, “இந்தி ரீமேக்கில் ‘குட் வொய்ஃப்’ வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து தமிழில் இதனை இயக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்தக் கதையில் கதாநாயகி கதாபாத்திரம் மிகவும் வலுவானது. தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் தொழில் சார்ந்தும் நிறைய சவால்களை அவர் எதிர்கொள்கிறார். இதனை திரைக்கதையில் இருந்து படமாக்குவதை மிகவும் விரும்பி செய்தேன். பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் போன்ற திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பானிஜே ஆசியாவுடன் ஓடிடி உலகில் நான் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சிகரமான அனுபவம்” என்றார்.

கிருஷ்ணன் குட்டி, ஹெட் ஆஃப் கிளஸ்டர், எண்டர்டெயின்மென்ட் (சவுத்) ஜியோஸ்டார், “தமிழ் ரசிகர்களுக்கு ‘குட் வொய்ஃப்’ சீரிஸை வெளியிட ஆர்வமாக இருக்கிறோம். இதன் இந்தி வெர்ஷனான ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் அப்படியான வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். உயர்தர தொழில்நுட்பம், என்கேஜிங்கான கண்டெண்ட், ரேவதி போன்ற இயக்குநர், ப்ரியாமணி, சம்பத் ராஜ் போன்ற நடிகர்கள் மற்றும் பனிஜய் ஆசியா ஆகியோருடன் இணைந்து நல்ல படைப்பை பார்வையாளர்களுக்குக் கொடுக்க இருக்கிறோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

தீபக் தார், ஃபவுண்டர் & குரூப் சிஇஓ, பானிஜே ஆசியா & எண்டேமோல்ஷைன் இந்தியா பகிர்ந்து கொண்டதாவது, “’குட் வொய்ஃப்’ சீரிஸின் இந்தி வெர்ஷனான ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தக் கதையை தமிழிலும் கொண்டு வர ஆர்வமாக இருக்கிறோம். பானிஜே ஆசியா தென்னிந்தியாவை முக்கிய சந்தையாக கருதுகிறது. இங்கு தரமான உள்ளடக்கம் கொடுப்பதற்கும் ஆர்வம் காட்டுகிறது. அதற்கான முதல்படியாக ‘குட் வைஃப்’ இருக்கும். தரமான கதைகளைத் தொடர்ந்து கொடுத்து வரும் ஜியோஹாட்ஸ்டாருடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.

கேட்டி பைக், இயக்குநர், இண்டர்நேஷனல் ஃபார்மட்ஸ் ஃப்ரம் பாராமவுண்ட் குளோபல் கன்டென்ட் டிஸ்டிரிபியூஷன், ’குட் வொய்ஃப்’ சீரிஸின் ஃபார்மட் உரிமைகளை பெற்றுள்ளது. ”உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை ‘குட் வொய்ஃப்’ கவர்ந்திருப்பது மகிழ்ச்சி. இந்தியாவில் வளர்ந்து வரும் மாறுபட்ட கதைசொல்லல் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வலுவான கதையை பார்வையாளர்களுக்குக் கொண்டு வர இருக்கிறோம். ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பானிஜே ஆசியா ஆகியவை தமிழ் ரசிகர்களுக்காக இந்தக் கதையை எவ்வாறு மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க நாங்கள் ஆவலாக உள்ளோம்”.

ஒரிஜினல் யு.எஸ். சீரிஸில் ராபர்ட் மற்றும் மிஷேல் கிங் ஆகியோர் கிரியேட்டர்ஸ் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர்களாகப் பணியாற்றினர். ரிட்லி ஸ்காட், டேவிட் ஜுக்கர் மற்றும் ப்ரூக் கென்னடி ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பணியாற்றினர். ’குட் வைஃப்’ தொடரை சிபிஎஸ் ஸ்டுடியோஸ், ஸ்காட் ஃப்ரீ புரொடக்ஷன்ஸ் மற்றும் கிங் சைஸ் புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து தயாரித்தது. பாராமவுண்ட் குளோபல் கன்டென்ட் டிஸ்ட்ரிபியூஷன் இதன் ஃபார்மட் உரிமைகளை பெற்றுள்ளது.
ஜியோஹாட்ஸ்டார் பற்றி:

ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. நல்ல கதையம்சம், புதுமையான தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்புடன், ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பானிஜே ஆசியா பற்றி:
பானிஜே ஆசியா என்டர்டெயின்மென்ட் மற்றும் தீபக் தார் இடையே கூட்டு முயற்சியாக 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பானிஜே ஆசியா தொடங்கப்பட்டது. இன்று பல்வேறு வகைகளில் பொழுதுபோக்குத் துறையில் மிகப்பெரியதாக பானிஜே ஆசியா உருவெடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், பானிஜே ஆசியா தி நைட் மேனேஜர், தி டிரையல் (தி குட் வைஃப்), ஹோஸ்டேஜஸ், கால் மை ஏஜென்ட்: பாலிவுட், ஃபால் போன்ற மெகா-ஹிட் (தழுவல்), தஹான், மத்ஸ்யா காண்ட், உண்டேகி மற்றும் திரிபங்கா போன்ற வெற்றிகரமான அசல் படங்களையும் வழங்கியுள்ளது. மாங்க், ஹவுஸ் அண்ட் சூட்ஸ் ஆகியவை அடுத்து வரவிருக்கிறது. டெம்ப்டேஷன் ஐலேண்ட், தி கபில் சர்மா ஷோ, எம்டிவி ரோடீஸ், தி வாய்ஸ், தி பிக் பிக்சர், இன்டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ், கேஸ் தோ பந்தா ஹை மற்றும் பல போன்ற பிளாக்பஸ்டர்களையும் பானிஜே ஆசியா கொடுத்துள்ளது.
Previous Post

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் விமல் நடிக்கும், காமெடி எண்டர்டெயினர் திரைப்படம், பூஜையுடன் துவங்கியது !!

Next Post

’கண்ணப்பா’ திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!

Next Post

’கண்ணப்பா’ திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!

Popular News

  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.