• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் துல்கர் சல்மான் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் பொருட்டு ‘காந்தா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் துல்கரின் வியக்கத்தக்க உழைப்பு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

by Tamil2daynews
February 7, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் துல்கர் சல்மான் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் பொருட்டு ‘காந்தா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் துல்கரின் வியக்கத்தக்க உழைப்பு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

 

 

சினிமாவில் 2012 ல் நடிகர் துல்கர் சல்மான் அறிமுகமானதில் இருந்தே அவரது வித்தியாசமான கதாபாத்திரங்களும் திறமையான நடிப்பும் அவரை முன்னணி நடிகராக்கியுள்ளது. ‘பெங்களூர் டேய்ஸ்’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘ஓ காதல் கண்மணி’, ‘மகாநடி’, ‘குரூப்’ மற்றும் சமீபத்திய வெற்றிப் படங்களான  ‘சீதா ராமம்’, ‘லக்கி பாஸ்கர்’  என அவரது மாபெரும் வெற்றிகள் அனைத்தும் துல்கரின் வளர்ச்சி, அர்ப்பணிப்பு மற்றும் அவரது கதைகள் தேர்வுக்கு சான்றாக உள்ளது.
‘ஹண்ட் ஃபார் வீரப்பன்’ என்ற நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தொடர் இயக்கிய செல்வமணி செல்வராஜ் ‘காந்தா’ படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “நடிகர் துல்கர் சல்மானின் 13 வருட சினிமா பயணத்தை பெருமைப்படுத்தும் வகையில் ‘காந்தா’ படத்தின் முதல் பார்வையை ரசிகர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த திரைப்படம், துல்கரின் சினிமா வாழ்க்கையைப் போலவே பல பரிணாமம், சவால் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின்  பிரதிபலிப்பாக அமையும். இது நிச்சயம் அவருக்கான படமாக இருக்கும்” என்றார்.
இந்த திரைப்படத்தில் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளது. நடிகர் ராணா டகுபதி, அவரது தாத்தா டி. ராமாநாயுடுவின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஸ்பிரிட் மீடியா நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனமும் நடிகர் துல்கர் தலைமையிலான வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறது. பல திறமையாளர்களை இந்த நிறுவனங்கள் வருங்காலத்தில் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். அதில் ‘காந்தா’ மறக்க முடியாத படமாக இருக்கும்.
‘காந்தா’ படத்தின் முதல் பார்வையைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீடு பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும்.

Previous Post

“’விடாமுயற்சி’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு” நடிகை ரெஜினா காசண்ட்ரா!

Next Post

வேல் டெக் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் காட்சித் தொடர்பியல் புலம், 03.02.2025 அன்று நடத்திய நிகழ்ச்சியில் பிக் பாஸ் புகழ் நடிகர் ஆரவ் அவர்கள் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டார்.

Next Post

வேல் டெக் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் காட்சித் தொடர்பியல் புலம், 03.02.2025 அன்று நடத்திய நிகழ்ச்சியில் பிக் பாஸ் புகழ் நடிகர் ஆரவ் அவர்கள் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டார்.

Popular News

  • பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

    ரீ-என்ட்ரி கொடுக்கும் காம்னா ஜெத்மலானி

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்; மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கிறார்கள்; இதன் தனித்துவமான சிலந்தி வலை விளம்பர போர்டுகள் சென்னை நகரத்தை அலங்கரிக்கின்றன.

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்தியாவின் இந்த வார சிறந்த படம் என்ற சிறப்பு பெற்ற ‘நெடுநல்வாடை’

    0 shares
    Share 0 Tweet 0
  • வைபவ் முருகேசன் வெறும் புகழைத் தேடி ஓடவில்லை.. அவர் தனக்கான நிரந்தர இடத்தை கட்டமைத்து வருகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் டைட்டில் வெளியீடு

April 16, 2026

‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்

April 16, 2026

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

April 16, 2026

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

April 16, 2026

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி விழா!

April 16, 2026

குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

April 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.