• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

வருணன் – விமர்சனம் ரேட்டிங் – 2.5 / 5

by Tamil2daynews
March 15, 2025
in விமர்சனம்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
வருணன் – விமர்சனம் 

ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பு எடுத்திருக்கும் வருணன் படத்தை தூசி தட்டி இப்பொழுது ரிலீஸ் செய்து இருக்கிறார்கள்

தண்ணீர் கேன் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரிடேயே ஏற்படும் மோதலால் எப்படி ரத்தம் பாய்ந்து ஓடுகிறது என்பதைச் சொல்லும் படம், வருணன்.

வட சென்னை, ராயபுரம் பகுதியில் ராதாரவியும், சரண்ராஜூம் தண்ணீர் கேன் விற்பனை செய்கிறார்கள். தங்களுக்குள் ஏதும் ஒப்பந்தம் செய்துகொள்ளாமலேயே, ஆளுக்கு ஒரு ஏரியா என பிரித்துக்கொண்டு தொழில் நடத்துகிறார்கள்.

அதே நேரம், இருவரிடமும் வேலை செய்யும் இளைஞர்களிடையே அவ்வப்போது மோதல், ரத்தக்களறி ஏற்படுகிறது.

இதற்கிடையே அந்தப் பகுதி காவல்துறை அதிகாரி, ராதாரவியுடன் சேர்ந்து பிஸினஸ் செய்ய விரும்புகிறார். அதற்கு ராதாரவி மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் ஆத்திரம் அடையும் அவர், எதிர்த்தரப்பினரான சரண்ராஜூடன் சேர்ந்து தொழில் செய்ய ஆரம்பிக்கிறார்.

இந்த நிலையில் சரண்ராஜ் மனைவி மர்மமாக இறக்க.. அதைத் தொடர்ந்து அதிரடி சம்பவங்கள் நடக்கின்றன. இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.Imageதண்ணீர் கேன் நிறுவனம் நடத்தும் அண்ணாச்சியாக ராதாரவி. வழக்கம்போல சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார். தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் கனிவும், கண்டிப்புமாக நடந்து கொள்வது, காவல் அதிகாரியிடம் அதிகாரமாக பேசுவது என இந்தப் படத்திலும் முத்திரை பதித்திருக்கிறார்.

அவருக்கு எதிர்த்தரப்பாக… தண்ணீர் கேன் நிறுவனம் நடத்தும் இன்னொருவராக சரண்ராஜ். பொதுவாக பெரும்பாலான படங்களில் கொஞ்சம் எரிச்சலூட்டும் நடிப்பையே அளிப்பவர் இவர். ஆனால் இந்தப்படத்தில் சரி வர பேச முடியாத கதாபாத்திரத்தில் சிற்பபாக நடித்து கவர்கிறார்.நாயகனாக நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் கேப்ரில்லா, ற்றொரு நாயகன், நாயகியாக நடித்திருக்கும் பிரியதர்ஷன் மற்றும் ஹரிபிரியா, வில்லனாக நடித்திருக்கும் சங்கர்நாக் விஜயன் மற்றும் ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன், ஹைட் கார்த்தி, கெளசிக், கிரண்மயி உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்து உள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ் வித்தியாசமான கோணங்களில் அசத்துகிறார். குறிப்பாக, கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி பிரமிப்பு.

போபோ சசியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு பலம்.

என்.ரமணா கோபிநாத்தின் வசனம் ஈர்க்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஜெயவேல் முருகன், தண்ணீர் கேன் தொழிலை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருப்பதாக ஏற்கெனவே கூறியிருந்தார். ஆனால் இரு தரப்பினருக்கு இடையேயான மோதல்… அதனால் ஏற்படும் ரத்தக்களறிதான் படம்.

கதையை சொல்லும் பின்னணியில் வரும் புரட்சித் தமிழன் சத்யராஜின் குரல் நமக்கு ஆறுதல்.

தண்ணீருக்காக இவ்வளவு பெரிய சண்டையா அதுவும் தமிழ்நாட்டிற்குள் என்று நினைக்கும் பொழுது கர்நாடகாவெல்லாம் பெரிய மேட்டரே கிடையாது அப்படி தான் நமக்கு தோன்றுகிறது.

படம் எடுத்து நீண்ட வருடமானதால என்னவோ தெரியவில்லை படம் பார்க்கும் பொழுது ஒரு உற்சாகமே நம் மனதிற்குள் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் இந்த வருணன் வெயில் காலத்திற்கு கூட தாகம் தீர்க்கதவன்.
Previous Post

ராபர் – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

Next Post

சத்ய ஜோதி பிலிம்ஸ், தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் ‘முண்டாசுப்பட்டி’ & ‘ராட்சசன்’ படங்களின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணையும் புதிய திரைப்படம் ‘இரண்டு வானம்’!

Next Post

சத்ய ஜோதி பிலிம்ஸ், தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் 'முண்டாசுப்பட்டி' & 'ராட்சசன்' படங்களின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணையும் புதிய திரைப்படம் ‘இரண்டு வானம்’!

Popular News

  • Zion Films மற்றும் MRP Entertainment தயாரிப்பில் பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. !!

    Zion Films மற்றும் MRP Entertainment தயாரிப்பில் பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. !!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சூர்யாவால் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின் திரைப்படம் ஃபேமிலி பாய் (Family Boy) – டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கொலையாளி அல்ல..! நான் காதலன்..!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியான நடிகர் ஷாருக்கானின் ‘கிங் – KING’ படத்தின் புதிய போஸ்டர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது”- நடிகை ஃபெமினா ஜார்ஜ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

October 27, 2026

ராமர் மற்றும் சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் ‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து வெளியானது!

October 27, 2026

நடிகர் சூர்யாவால் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின் திரைப்படம் ஃபேமிலி பாய் (Family Boy) – டீசர் வெளியீடு

October 27, 2026

நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

October 27, 2026

‘கொலையாளி அல்ல..! நான் காதலன்..!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியான நடிகர் ஷாருக்கானின் ‘கிங் – KING’ படத்தின் புதிய போஸ்டர்!

October 27, 2026

ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு

October 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.