• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

தி டோர் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

by Tamil2daynews
March 28, 2025
in விமர்சனம்
0
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தி டோர் – விமர்சனம் 

கட்டிடக்கலை நிபுணரான பாவனா, வடிவமைக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிட பணிக்காக பழமையான சிறு கோவில் ஒன்று இடிக்கப்படுகிறது. கோவில் இடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பாவனாவின் தந்தை விபத்து ஒன்றில் சிக்கி மரணமடைகிறார். இதனால், சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தன் பணியை பாவனா தொடங்கும் போது, அவரை சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. தனது நண்பர்களின் உதவியுடன் தன்னை பின் தொடரும் அமானுஷ்யத்தின் பின்னணி குறித்து பாவனா அறிந்து கொள்ள முயற்சிக்கும் போது, அவர் சந்திக்கும் நபர்கள் இறந்து போகிறார்கள். அவர்களின் இறப்புக்கும், பாவனாவுக்கு என்ன சம்மந்தம்?, அவரை பின் தொடரும் அமானுஷ்யத்தின் பின்னணி என்ன? என்பதை திகிலாக மட்டும் இன்றி கிரைம் திரில்லர் பாணியிலும் சொல்வதே ‘தி டோர்’.

வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய தனது புரிதலையே சவால் செய்யும் பயங்கரமான மற்றும் குழப்பமான நிகழ்வுகளை கடந்து செல்ல வேண்டிய ஒரு கதாபாத்திரமாக, முக்கிய கதாபாத்திரத்தில் பாவனா ஒரு வசீகரிக்கும் நடிப்பை வழங்குகிறார். அவர் பாதிப்பு மற்றும் உறுதியின் சரியான சமநிலையைக் கொண்டு வருகிறார், இது அவரது பயணத்தை ஆழமாக ஈர்க்கிறது. படத்தின் தீவிரத்திற்கு கூடுதலாக, வருண் உன்னி ஒரு கவர்ச்சிகரமான நடிப்பை வழங்குகிறார், கதையை சூழ்ச்சி மற்றும் கணிக்க முடியாத தன்மையுடன் நிரப்புகிறார். அனுபவம் வாய்ந்த நடிகர்கள் ஜெய பிரகாஷ் மற்றும் நந்த குமார் உறுதியான ஆதரவை வழங்குகிறார்கள், அவர்களின் சக்திவாய்ந்த திரை இருப்பு மற்றும் நுணுக்கமான நடிப்பால் சஸ்பென்ஸை உயர்த்துகிறார்கள்.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் கணேஷ் வெங்கட்ராமனுக்கு வழக்கமான வேலை தான் என்பதால் அதை எந்தவித குறையும் இன்றி செய்திருக்கிறார்.

ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார், கிரிஷ், பாண்டி ரவி, சங்கீதா, சிந்தூரி, பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம், கபில், பைரி வினு, ரோஷினி, சித்திக், வினோலியா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கெளதம்.ஜி, பாவனாவை அழகாக காட்டியிருப்பதோடு, கொடைக்கானல் காட்சிகளை கவனம் ஈர்க்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார். படம் முழுவதுமே பளிச்சென்று இருப்பது படத்தின் தரத்தை வெளிக்காட்டினாலும், திகில் காட்சிகளில் எந்தவித பயத்தையும் ரசிகர்களிடத்தில் கடத்தாதது ஒளிப்பதிவின் சிறு குறையாக இருக்கிறது.

இசையமைப்பாளர் வருண் உன்னியின் பின்னணி இசை சில காட்சிகள் மூலம் திகிலடைய செய்தாலும், பல இடங்களில் அதிகப்படியான சத்தம் மூலம் காதை கிழிக்கவும் செய்திருக்கிறது.
ஆரம்பத்தில் திகில் படமாக தொடங்கினாலும், அடுத்தடுத்த காட்சிகளில் கிரைம் திரில்லராக பயணிக்கும் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும் வகையில் படத்தொகுப்பாளர் அதுல் விஜய் காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் ஜெய்தேவ், வழக்கமான பாணியிலான திகில் கதையாக ஆரம்பித்தாலும், அதில் திகில் உணர்வுகளை குறைத்துவிட்டு, கிரைம் நாவல் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.

பாவனா தேடும் ராம் யார்? என்ற எதிர்பார்ப்பு, அந்த தேடல் பயணத்தில் ஏற்படும் திருப்பங்கள் மற்றும் மர்ம மரணங்களும், அதன் பின்னணி என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பும் பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்கிறது.
வெறும் ஒரு திகில் படத்திற்கு மேலாக, தி டோர் தெரியாதவற்றை ஆராய்வது, பயம், விதி மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்டவை பற்றிய நமது புரிதலுக்கு சவால் விடுப்பது. அதன் கவர்ச்சிகரமான கதைக்களம், விதிவிலக்கான நடிப்புகள் மற்றும் தலைசிறந்த இயக்கம் ஆகியவற்றுடன், இந்த படம் தமிழ் திகில் சினிமாவின் பரிணாம வளர்ச்சிக்கு ஒரு சான்றாக நிற்கிறது. இது முதுகெலும்பை உறைய வைக்கும் சிலிர்ப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நீடித்த தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது, பார்வையாளர்களை நம் வாழ்க்கையை வடிவமைக்கும் கண்ணுக்குத் தெரியாத சக்திகளைப் பற்றி சிந்திக்க ஊக்குவிக்கிறது. உங்களை பயமுறுத்தும் மற்றும் மயக்கும் ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவத்திற்கு தயாராகுங்கள்!
மொத்தத்தில் இந்த கோடைக்கு  வித்தியாசமான  திகில் அனுபவத்தை பார்க்க வேண்டிய படம்
Previous Post

திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்!

Next Post

வீர தீர சூரன் 2 – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

வீர தீர சூரன் 2 - விமர்சனம் ரேட்டிங் - 4 / 5

Popular News

  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • “வள்ளி மயில்” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • கிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் ‘எல் ஜி எம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

    0 shares
    Share 0 Tweet 0
  • 11 வில்லேஜர்ஸ் ஃபிலிம் புரொடக்‌ஷன் & யாதவ் ஃபிலிம் புரொடக்‌ஷன் வழங்கும், ஆறு பாலா இயக்கத்தில், ஆர்.எஸ்.கார்த்திக் நடித்த ‘போர்குடி’ படத்தை உலகளவில் திரையரங்குகளில் பிக்சர் பாக்ஸ் கம்பெனி வில்லியம் அலெக்சாண்டர் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.