வீர தீர சூரன் 2 – விமர்சனம்
உலக சினிமாவில் முதன்முறையாக இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டுள்ளார் இயக்குனர்.
வீர தீர சூரன் பார்ட் – 2 திரைப்படத்தில் ‘சியான்’ விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.யூ. அருண்குமார் இப்படத்தை இயக்கி உள்ளார்.
மதுரையில் செல்வாக்குமிக்க குடும்பத்தின் தலைவராக இருக்கும் பெரியவர் ரவிக்கும் (பிருத்வி) அவரது மகன் கண்ணனுக்கும் (சூரஜ் வெஞ்சரமூடு) ஊர்த் திருவிழாவின்போது ஒரு சிக்கல் எட்டிப் பார்க்கிறது. அதே சிக்கலைச் சாக்காக வைத்து அவர்களை என்கவுன்ட்டரில் போடத் துடிக்கிறார் எஸ்.பி-யான அருணகிரி (எஸ்.ஜே. சூர்யா). அருணகிரியிடமிருந்து தப்பிக்க அந்த ஊரில் மளிகைக் கடை வைத்திருக்கும் காளியின் (விக்ரம்) உதவியை நாடுகிறார் பெரியவர் ரவி. காளி, அருணகிரி, பெரியவர், கண்ணன் இவர்களுக்குள் இருக்கும் முன்பகை எத்தகையது, அருணகிரி எதற்காகப் பெரியவர் குடும்பத்தைப் பழிவாங்கத் துடிக்கிறார், ரவுடிகளே மிரளும் காளியின் பிளாஷ்பேக் என்ன, அவர் இந்தச் சிக்கலுக்கு எழுதும் முடிவுரை என்ன என்பதே இந்த ‘வீர தீர சூரன் பாகம் 2’.

சீயான் விக்ரம் இந்த படத்தின் வெற்றி முகமே இவர்தான் ஒரு பக்கம் அமைதியாக தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் நடந்த சம்பவங்களை எல்லாம் மனதுக்குள் வைத்துக் கொண்டு அப்பாவை போல் வாழும் அவரது முகபாவனை அழகு.
துஷாரா அப்பா என்ன ஒரு அற்புதமான முக பாவனைகள் நடக்கும் சம்பவங்கள் என்னவென்று தெரியாத அளவுக்கு அவர் தன் கணவனை குடும்பத்தையும் காப்பாற்ற அவர் போராடும் அந்த நடிப்பு அபாரம். சியான் விக்ரம் அவருக்கு வசனங்கள் குறைவாக இருந்தாலும் அவர் பேசும் ஒவ்வொரு வரிகளிலும் ரசிகர்கள் நிச்சயம் கைதட்டுவார்கள். ஜிகர்தண்டா x மார்க் ஆண்டனி படங்கள் வரிசையில் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யாவிற்கு இந்த வீர தீர சூரன் மகுடம் சூட்டும்.அப்பப்பா மனுசனா என்ன என்ன ஒரு நடிப்பு. மகனை காப்பாற்ற வில்லத்தனத்தில் முந்தி நிற்கிறார் பிருத்திவி.

மலையாள நடிகர் சூரஜ் தன் கதாபாத்திரத்தை உருண்டைக் கண்ணை கொண்டு மிரட்டி இருக்கிறார். படத்தில் இன்னொரு நாயகன் ஜிவி பிரகாஷ் பின்னணி இசை பின்னி பெடல் எடுக்கிறார். வில்லன் பிருத்திவின் குடும்பத்தில் வரும் பெண்கள் படும் கோபத்தை பார்த்தால் படம் பார்ப்பவர்களுக்கும் அவர்கள் மீது கோபம் வரும்.தனது திக் திக் திரைக்கதையின் மூலம் சூப்பரான இயக்குனர் என்று மீண்டும் பெயர் எடுத்திருக்கிறார் அருண்குமார்.ஒரே இரவில் நடக்கும் கதை சண்டை காட்சிகள் முகம் சுளிக்காத ரத்தம் தெறிக்கும் காட்சிகள் படத்தில் ஜொலிக்கிறார் விக்ரம்.படம் ஆரம்பகாட்சி துப்பாக்கி சுடுவதில் இருந்து கார் வெடித்து சிதறும் இறுதிக் காட்சி வரை சீட்டின் நுனியில் உட்கார வைக்கின்றது திரைக்கதை.ஒட்டுமொத்த படக்குழுவினர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் இந்த வீர தீர சூரன் ராஜராஜ சோழன்.
மொத்தத்தில் இந்த வீர தீர சூரன் ராஜராஜ சோழன்.