• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழிப் படத்தில் ராஜ் தருண் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, ரஃப் நோட் புரொடக்‌ஷன் அடுத்த தயாரிப்பை அறிவிக்கிறது.

by Tamil2daynews
May 13, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழிப் படத்தில் ராஜ் தருண் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, ரஃப் நோட் புரொடக்‌ஷன் அடுத்த தயாரிப்பை அறிவிக்கிறது. 

 

கதை உள்ளடக்கம் மிக்க சினிமாவை வழங்கி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ள ரஃப் நோட் புரொடக்‌ஷன், தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. தற்காலிகமாக படத்தின் தலைப்பாக “புரொடக்‌ஷன் நம்பர் 5” என வைக்கப்பட்டுள்ளது.  இந்த இருமொழிப் படத்தை புகழ்பெற்ற இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்குகிறார். இந்தப் படம், தெலுங்கு திரையுலகில் பெரும் கவனம் பெற்ற நடிகர் ராஜ் தருணின் கோலிவுட் அறிமுகமாகும்.

இந்த அறிவிப்பு, நடிகர் ராஜ் தருணின் பிறந்தநாளுக்கான சிறப்பு பரிசாக வெளியாகியுள்ளது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே இந்த வலுவான கூட்டணியை அறிமுகப்படுத்துவதில் ரஃப் நோட் புரொடக்‌ஷன் மகிழ்ச்சியடைகிறது.

உய்யாலா ஜம்பாலா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற ராஜ் தருண், குமாரி 21F, சினிமா சூப்பிஸ்த மாமா போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர். இப்போது, தமிழ் சினிமாவிற்கு ஒரு புது பரிமாணத்துடன் காலடி எடுத்து வைக்கிறார். இந்தப் படத்தில் அவர் புதிய தோற்றத்திலும், வித்தியாசமான கதாபாத்திரத்திலும் ரசிகர்களை கவரத் தயாராக இருக்கிறார்.

விஜய் மில்டன், வலுவான கதைகளுடன்  காணக் கூடிய காட்சிப்படிமங்களை இயக்குவதில் முன்னோடியாகத் திகழும் இயக்குநர். அவரது முந்தய படங்களான 10 எண்ணுறதுக்குள்ள, கோலி சோடா, கோலி சோடா 1.5, கடுகு, பைரகி உள்ளிட்ட படங்கள் விமர்சன மற்றும் வணிக ரீதியாக வெற்றியடைந்தன. ஒளிப்பதிவாளராகவும், சிவராஜ்குமார், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் 40-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

இந்தப் படம் குறித்து விஜய் மில்டன் கூறுகையில்:
 “இந்த படம் எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு படம். கோலி சோடா பாணியை தொடர்ந்து- இது ஒரு சக்திவாய்ந்த, உணர்ச்சிமிக்க, உண்மையான கதையை கொண்டு வருகிறது  . ராஜ் தருண் மிகவும் புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் தோன்றுகிறார்; தமிழ் ரசிகர்களை அவருடைய நடிப்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என எனக்கு நம்பிக்கை உள்ளது.”

புரொடக்‌ஷன் நம்பர் 5 படமானது, கோலி சோடா திரைப்படங்கள் போலவே, நியாயமான ஆனால் தாக்கம்மிக்க காட்சிப்படுத்தலோடு தொடரும். தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்களை இணைக்கும் முயற்சியாகவும், வலுவான கதையம்சம் மற்றும் பிரதான கதாநாயகனின் அர்ப்பணிப்பு நிறைந்த நடிப்பை வழங்கும் நோக்கத்துடனும் உருவாக்கப்படுகிறது.

மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். ராஜ் தருண் போன்ற ஒரு சக்திவாய்ந்த, திறமைமிக்க நடிகரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துவதில் ரஃப் நோட் புரொடக்‌ஷன் பெருமை கொள்கிறது. மேலும் இந்தப் படத்தைப் பற்றிய தகவல்களை  ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறது.

மேலும் தகவல்களுக்கு காத்திருங்கள்!
Previous Post

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப்டம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது

Next Post

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி வரும் ‘Dude’ படத்தில் இருந்து நடிகை மமிதா பைஜூவின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!

Next Post

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி வரும் 'Dude' படத்தில் இருந்து நடிகை மமிதா பைஜூவின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!

Popular News

  • ரேவதி இயக்கத்தில் நடிகர்கள் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • கொல்லிமலை ஆகாய நீர்வீழச்சியில் உருவான முதல் திரைப்படம்..

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.