• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

குபேரா – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

by Tamil2daynews
June 21, 2025
in விமர்சனம்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
குபேரா – விமர்சனம்  

தனுஷ் நடிப்பில் விருதுகளுக்கு பெயர் பெற்ற இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் குபேரா.

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் நீரஜ் மித்ரா (ஜிம் சர்ப்). அரசாங்கத்தை கைக்குள் வைத்துக் கொண்டு நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்பவர். தமிழக கடல் பகுதியில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்படும் தகவல் அரசாங்கத்துக்கு முன்பே அவருக்கு கசிந்து விடுகிறது. அதை பொதுமக்களுக்கு தெரியவிடாமல், தன்னிடம் ஒப்படைத்தால் கிடைக்கப் போகும் பலன்களை கூறி மத்திய அமைச்சரிடம் டீல் பேசுகிறார். இதற்காக பெரும் தொகையை கைமாற்ற திட்டமிடப்படுகிறது. இந்த வேலையை செய்து முடிக்க செய்யாத குற்றத்துக்கு ஜெயிலில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரி தீபக்கை (நாகர்ஜுனா) நாடுகிறார் நீரஜ். முதலில் மறுக்கும் தீபக் பின்னர் தன் குடும்பத்தை எண்ணி ஒப்புக் கொள்கிறார்.

கறுப்பு பணத்தை பினாமி சொத்து மூலம் வெள்ளையாக மாற்ற சில பிச்சைக்காரர்களை பயன்படுத்தலாம் என்று ஐடியா கொடுக்கிறார் தீபக். இதற்காக நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து நான்கு பிச்சைக்காரர்கள் கொண்டு வரப்படுகின்றனர். திருப்பதியில் இருந்து அழைத்து வரப்படும் தேவாவும் (தனுஷ்) அதில் ஒருவர். பிச்சைக்காரர்களை பணக்காரர்கள் போல மாற்றி, பயிற்சி கொடுத்து பணத்தை கைமாற்றுகின்றனர். இதில் நீரஜ்ஜின் உத்தரவின்படி பணம் கைமாறியபின் ஒவ்வொரு பிச்சைக்காரராக கொல்லப்படுகின்றனர்.
Kuberaa audience review: Netizens hail Dhanush's film, 'can't believe this random director...' | Mint

இதை தெரிந்து கொள்ளும் தேவா, நீரஜ் ஆட்களிடம் இருந்து தப்பிக்கிறார். வழியில் காதலனால் கைவிடப்பட்டு தற்கொலைக்கு முயலும் சமீராவை (ராஷ்மிகா) சந்திக்கிறார். ஏற்கெனவே சிக்கலில் இருக்கும் சமீராவுக்கு தேவாவால் மேலும் பல பிரச்சினைகள் வருகிறது. எதிரிகளிடமிருந்து தேவா தப்பித்தாரா? சமீராவின் பிரச்சினைகள் தீர்ந்ததா? என்பதே ‘குபேரா’ படத்தின் திரைக்கதை.

இதேபோன்ற கதையை தமிழிலேயே பல படங்களில் இதற்கு முன்னால் பார்த்திருந்தாலும், அதை இயன்றவரை மசாலாத்தனங்கள் இல்லாமல் உண்மைக்கு நெருக்கமாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் சேகர் கம்முலா. படம் தொடங்கியதுமே வரும் எண்ணெய் படிமம், மத்திய அமைச்சருடன் ஜிம் சர்ப் போடும் டீல், தனுஷின் அறிமுகம், நாகர்ஜுனாவின் பின்னணி என படம் நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. ஆர்ப்பாட்டம் இல்லாத நிதானமான திரைக்கதையாக இருந்தாலும் கிட்டத்தட்ட முதல் பாதி எந்த தொய்வும் இல்லாமலேயே நகர்கிறது.

வில்லன் ஆட்களிடம் இருந்து தனுஷ் தப்பிக்கும் காட்சிக்குப் பிறகு சூடுபிடித்திருக்க வேண்டிய திரைக்கதை சுருண்டு படுத்து விடுகிறது. இங்கிருந்துதான் படத்தின் மொத்த பிரச்சினையும் தொடங்குகிறது. ராஷ்மிகாவை தனுஷ் சந்தித்த பின் வரும் காட்சிகளுக்குப் பின்னால் படம் எங்கெங்கோ சென்று தலையை சுற்ற வைக்கிறது. முதல் பாதியில் சில இழுவைகள் இருந்தாலும் கூட கதாபாத்திரங்களின் தன்மைகளை ஆடியன்ஸ் மனதில் பதிய வைக்க அவை உதவின. குறிப்பாக ஜிம் சர்ப், நாகர்ஜுனா, தனுஷ் என கதாபாத்திரங்களின் பண்புகளே முதல் பாதி முழுவதும் அலசப்படுகின்றன. அவற்றில் பெரிதாக எந்த தொய்வும் இல்லை.

ஆனால், இரண்டாம் பாதி முழுவதும் திரைக்கதை எங்கே செல்கிறது என்று இயக்குநருக்கும் தெரியவில்லை. பார்க்கும் நமக்கும் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் எல்லாம் எங்கே தொடங்கியது என்றே மறந்து போகும் அளவுக்கு இழு… இழு.. என இழுத்து வைத்திருக்கிறார்கள்.
Kuberaa Movie Review': A Fantastic Dhanush Anchors Sekhar Kammula's Intricate Human Drama

படத்தின் ஒற்றை ஆன்மா தனுஷ் மட்டுமே. உயிரைக் கொடுத்து நடிப்பது என்ற வார்த்தைக்கு உண்மை செய்யும் அசுரத்தனமான நடிப்பு. இப்படி ஓர் அறிமுகக் காட்சிக்கு 2 படங்கள் ஹிட் கொடுத்த ஹீரோ கூட ஒப்புக் கொள்வாரா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு சிலிர்ப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாகர்ஜுனா, ராஷ்மிகா, ஜிம் சர்ப், சில காட்சிகளே வரும் சுனைனா என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தனுஷுடன் பிச்சைக்காரர்களாக வருபவர்கள் இன்னும் சற்று நடிக்கத் தெரிந்தவர்களாக போட்டிருக்கலாம். பல இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்கிறார்கள்.

தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை ஓகே ரகம். தனுஷின் அறிமுகக் காட்சி உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே தனித்து தெரிகிறார். பாடல்களில் ’போய் வா.. நண்பா’ படமாக்கிய விதம் சிறப்பு. ‘எனது எனது’ பாடல் சரியாக பயன்படுத்தப்படவில்லை. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு பிரேமிலும் உழைப்பு தெரிகிறது. கார்த்திகா ஸ்ரீனிவாஸ் எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். பல இடங்களில் காட்சிகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பே இல்லாதது போல அப்படியே கட் ஆவது நெருடுகிறது.

படத்தின் மற்றொரு மிகப் பெரிய குறை, எந்த இடத்திலும், எந்த கதாபாத்திரத்துடனும் ஆடியன்ஸால் உணர்வு ரீதியாக ஒன்ற முடியாமல் போவது. நாகர்ஜுனா – தனுஷ், தனுஷ் – ராஷ்மிகா, தனுஷ் – குஷ்பு கதாபாத்திரங்களுக்கு இடையே எமொஷனலுக்காக வைக்கப்பட்ட காட்சிகளில் எந்த கனமும் இல்லை. இன்னொரு குறை, படத்தின் தொடக்கத்தில் இருந்து எந்தக் காட்சியிலும் நுணுக்கம் இல்லாதது. ஜிம் சர்ப் கதாபாத்திரம் அரசாங்கத்தையே ஆட்டுவிக்கும் மிகப் பெரிய கோடீஸ்வரர். ஆனால் பினாமி என்றால் என்ன என்பது கூட அவருக்கு தெரியாமல் இருக்குமா? இதற்காக நாகர்ஜுனா வந்து அவருக்கு க்ளாஸ் எடுக்கிறார். எதற்காக அவர் நாகர்ஜுனாவை தேடிப் போக வேண்டும் என்பதற்கும் கூட வலுவான பின்னணி எதுவும் சொல்லப்படவில்லை.

இயக்குனர் எடுத்த கதைக்களத்தை காட்சி முனையில் அழுத்தமாக சொல்ல முயன்றது தெரியவந்துள்ளது அதேபோல் கதாபாத்திரங்களில் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த இயக்குனர் மறந்து விட்டார்.

தனுஷ் நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர் அவர் ஒரு சில இடங்களில் நடிக்க முயற்சி செய்தாலும் அதை மற்ற கதாபாத்திரங்கள் என்னவோ கெடுக்கின்றது இயக்குனர் சற்று இதை கவனித்திருக்கலாம்.

மொத்தத்தில் இந்த குபேரா  பெயரில் மட்டுமே குபேரன்
Previous Post

“வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி” எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜோனாதன் பெய்லி ஜுராசிக் தொடருடனான தனது தனிப்பட்ட தொடர்பையும் அது தன்னை எவ்வாறு கவர்ந்தது என்பதையும் பகிர்ந்து கொள்கிறார்!

Next Post

DNA – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

DNA - விமர்சனம் ரேட்டிங் - 4 / 5

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஜி.டி.என்.’ திரைப்படம் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது”: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பாராட்டு…மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் படத்தை பார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்!*

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.