• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

Freedom – விமர்சனம்

by Tamil2daynews
July 12, 2025
in விமர்சனம்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Freedom  – விமர்சனம் 

 

சசி குமார், லிஜா மோல் நடித்துள்ள இப்படத்தை சத்திய சிவா இயக்கி உள்ளார். அது 1991 ஆம் ஆண்டின் ஒரு நாள் இரவு. இலங்கையில் உள் நாட்டு போர் நடக்கும் நிலையில் அங்கே உள்ள தமிழர்கள் பலர் அடைக்கலம் வேண்டி தப்பித்து நமது ராமேஸ்வரத்திற்கு வருகிறார்கள். வருபவர்களை நமது தமிழ் நாடு அரசு ராமேஸ்வரத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கிறது. இப்படி வந்தவர்களில் மாறனும் (சசி குமார்) செல்வியும் (லிஜா மோல்) கணவன் -மனைவி. செல்வி ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ராஜீவ் காந்தி தமிழ் நாட்டில் ஒரு மனித வெடி குண்டால் கொல்ல படுகிறார். இந்த குண்டு வெடிப்பிற்கும், அகதிகள் முகாமில் இருப்பவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் கொள்ளும் தமிழ் நாடு காவல் துறை, முகாமில் இருக்கும் சிலரை ‘இரண்டு நாட்களில் விசாரணை செய்து விட்டு  திருப்பி அனுப்பி விடுகிறோம்,’ என்று வேலூர் கோட்டை சிறைக்கு அழைத்து செல்கிறது. அங்கே அகதிகளை மிகவும் கொடுமையான முறையில் அடித்து சித்தரவதை செய்கிறது. இரண்டு நாட்களில் திருப்பி அனுப்புகிறோம் என்று சொன்ன அரசு தரப்பு,  ஐந்தாண்டுகள் வரை அனுப்பவில்லை.
Sasikumar, Lijomol Jose to star in a thriller set in the 90s - The Hindu

அகதிகளின் குடுபத்தினர் மாவட்ட ஆட்சியர், தாசில்தார் இவர்களிடம் கோரிக்கை வைத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. ராஜீவ் காந்தி படுகொலைக்கு காரணமானவர்களை கைது செய்த பின்பும் அப்பாவி அகதிகளை விடுதலை செய்ய அரசு மறுக்கிறது. வேறு வழி இல்லாமல் அகதிகள் சிறையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். சிறை அறையிலிருந்து வேலூர் கோட்டை அகழி வரை குழி தோண்டி 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று தப்பிக்க திட்டம் தீட்டுகிறார்கள். இவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா என்பதை அகதிகளின் வலி நிறைந்த வாழ்வியல் பின்னணியில், ஒரு திரில்லர் வகை படமாக சொல்லி இருக்கிறார் சத்ய சிவா.

1995 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடந்த உண்மை சம்பவங்ககளின் அடிப்படையில்  சிறிது கற்பனையும் கலந்து இப்படத்தை தந்துள்ளார் டைரக்டர்.  ராஜீவ் காந்தி படுகொலை, ஒற்றை கண் சிவராஜன், ஸ்ரீ பெரும்புதூர், என நமக்கு தெரிந்த விஷயங்களுடன் தொடங்கும் கதை அகதிகளின் வாழ்வு, அனுபவிக்கும் கொடுமைகள் என நமக்கு தெரியாத விஷயங்களையும் சொல்கிறது.  ‘நாம் சுற்றுலா செல்லும் போது பெருமையாக பார்க்கும் வேலூர் கோட்டைக்குள் இப்படி ஒரு  மனிதர்களின் போராட்டம் இருக்கிறதா?’ என்று யோசிக்க தோன்றுகிறது.
Freedom' trailer: Sasikumar, Lijomol Jose play Sri Lankan immigrants rebelling against oppression - The Hindu

ஆர்ட் டைரக்டர் உதயகுமார் திரையியில் உருவாக்கிய இந்த வேலூர் கோட்டை ஒரு கேரக்டர் போல் படம் முழுவதும் வருகிறது. கிளைமாக்ஸ் காட்சியில், ‘எப்படியாவது அகதிகள் தப்பித்து ஏதாவது நாட்டில் நிம்மதியாக இருக்கட்டும் நம்ம ஊர்ல இருந்து கஷ்டப்பட வேண்டாம்’ என்று  நாம்  எண்ணும் அளவில் மிக சிறப்பாக காட்சிகள் உருவாக்க ப்பட்டுள்ளன. கிப் ரானின் இசையில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது.

சசிகுமார் மிக சிறப்பாக நடிக்கிறார். போராட்ட குணம் கொண்ட ஒரு இலங்கை தமிழனாக ஒரு லைவ் கேரக்டரில் வாழ்ந்துள்ளார் சசி. இன்னொரு ரேவதி என்று சொல்லும் அளவிற்கு லிஜா மோல் மிக சிறப்பாக நடித்துள்ளார். கர்ப்பிணியாக நடிக்கும் போதும், அதிகாரியிடம் நியாயம் கேட்கும் போதும், பாதிக்கப்பட்ட இலங்கை பெண்ணை கண் முன் கொண்டு வந்து விடுகிறார். சிறையில் இருப்பவர்கள், காவல் துறை அதிகாரி, வயதான அகதியாக நடிக்கும் பேராசிரியர் மு.ராமசாமி என அனைவருமே சரியான தேர்வுகள்.

நமது தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லி கொள்ளும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக வந்த போது, இந்த தமிழ் மண் அவர்களை எப்படி மோசமாக நடத்தியது என்று பதிவு செய்துள்ள படம் Freedom.
Previous Post

ஓஹோ எந்தன் பேபி – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

“பறந்து போ” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!

Next Post

"பறந்து போ" திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.