• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்’சைக்கிள் கேப்’!

by Tamil2daynews
May 8, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்’சைக்கிள் கேப்’!

 

மியூசிக்கல் காதல் ஜானர் கதைகளை தங்கள் உணர்வுகளுடன் பொருத்தி பார்க்கும் ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர். ’சிந்து பைரவி’, ’முகவரி’, ’துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற காலத்தால் அழியாத தமிழ் திரைப்படங்களிலிருந்து, உலகளவில் பாராட்டப்பட்ட ’லா லா லேண்ட்’ மற்றும் பாலிவுட்டில் வெளியான மியூசிக்கல் காதல் திரைப்படங்களான ’ஆஷிகி2’,’சயாரா’ வரை இந்தத் திரைப்படங்களின் பாடல்கள், உணர்வுகள் மற்றும் உறவுகள் என ரசிகர்களுக்கு பல மறக்க முடியாத நினைவுகளை இவை உருவாக்கியுள்ளன. இதே உணர்வை இன்றைய தலைமுறையை கவரும் நவீன இசையுடன் முக்கோண காதல் கதையாக கொண்டு வரும் திரைப்படமே இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கியுள்ள ’சைக்கிள் கேப்’.

இலக்கியம், இதழியல் மற்றும் உலகத் திரைப்படங்களால் செதுக்கப்பட்ட கதைசொல்லியான எம்.ஆர். பாரதி, தனது திரைப்படங்கள் மூலம் உணர்வுப்பூர்வமான பல கதைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட அவரது ‘அழியாத கோலங்கள் 2’ திரைப்படம் அதன் முதிர்ச்சியான  மற்றும் உணர்வுப்பூர்வமான கதைசொல்லலுக்காக பாராட்டப்பட்டது. அதேசமயம், அவரது சமீபத்திய படைப்பான ‘ட்ரீம் கேர்ள்’ காதல், கனவுகள் மற்றும் நல்ல நினைவுகளை ரசிகர்களுக்கு கொடுத்து கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது ‘சைக்கிள் கேப்’ இளமைத் துள்ளலான ரொமாண்டிக் மியூசிக்கல் கதையை இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு எடுத்துள்ளார்.
படத்தைப் பற்றி இயக்குநர் எம்.ஆர். பாரதி பகிர்ந்து கொண்டதாவது, “வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகளை வெளிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. உறவுகளை மையப்படுத்திய கதைதான் ‘சைக்கிள் கேப்’. இதில் கதாபாத்திரங்களுக்கிடையேயான உணர்வுகளுக்கு பாலமாக இசை இருக்கும். இந்தத் திரைப்படம் நவீன காட்சியமைப்புகளுடன் இருந்தாலும், உணர்வுப்பூர்வமான கிளாசிக்கல் இசையும் படத்தில் இருக்கும்” என்றார்.

படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “இசையுடன் கூடிய காதல் கதைகள் ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்திருப்பதை நான் எப்போதும் ரசித்திருக்கிறேன். அந்த உணர்வை மனதில் வைத்து தான் ‘சைக்கிள் கேப்’ உருவாக்கப்பட்டுள்ளது. பாரதி சார் கதைகளில் நிஜத்தன்மை, கவித்துவம் மற்றும் ஆழமான உணர்வுகள் எப்போதும் இருக்கும். இந்தப் படத்திலும் ரசிகர்கள் அதை எதிர்பார்க்கலாம். டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் மூலம் இளமையான, காட்சியழகும் இசை நினைவுகளும் நிறைந்த ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்றார்.

டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ’சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் நவாஸ் கதாநாயகனாக நடித்திருக்க, ஷெர்ரி அகர்வால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் பிரபு சாஸ்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

இசையமைப்பாளர்: சதீஷ் பத்மநாபன் (அறிமுகம்),
பாடகர்கள்: நரேஷ் ஐயர், ஸ்ரீநிஷா ஜெயசீலன் மற்றும் கௌஷிக் ஸ்ரீதரன்,
நிர்வாக தயாரிப்பாளர்: சுஜா சூர்யா நிலா,
ஒளிப்பதிவு: சாலமன் போஸ் டி.எஸ்.,
படத்தொகுப்பு: சரவண எட்டயஞானம்,
வசனம்: ஹேமந்த் செல்வராஜ்

Previous Post

சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !!

Next Post

துல்கர் சல்மானின் ஸ்டைலீஷ் படம் “ஐ அம் கேம்” வரும் ஆகஸ்ட் 2026 வெளியாகிறது ! !

Next Post

துல்கர் சல்மானின் ஸ்டைலீஷ் படம் “ஐ அம் கேம்” வரும் ஆகஸ்ட் 2026 வெளியாகிறது ! !

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.