• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் பேனரில் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ‘றெக்கை முளைத்தேன்’ ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது

by Tamil2daynews
July 28, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் பேனரில் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ‘றெக்கை முளைத்தேன்’ ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது

 

‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’, ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’ படங்கள் மற்றும் ‘செங்களம்’ இணையத் தொடருக்கு பிறகு எஸ் ஆர் பிரபாகரன் இயக்கும் முற்றிலும் புதிய ஜானர் ‘றெக்கை முளைத்தேன்’ படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்

‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தில் கிராமத்து நட்பு, ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நகைச்சுவை மற்றும் காதல், ‘சத்ரியன்’ படத்தில் ஆக்ஷன், ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’ படத்தில் கிராமத்து வீரம் மற்றும்  ‘செங்களம்’ இணையத் தொடரில் அரசியல் ஆழம் எனப் பல்வேறு வகைப் படைப்புகளில் முத்திரை பதித்த இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன், ‘றெக்கை முளைத்தேன்’ படத்தின் மூலம் இன்னுமொரு புதிய களத்தில் புகுந்துள்ளார்.
இது வரை அவர் செய்த படங்களிலேயே முற்றிலும் மாறுபட்ட விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ஜானரை சேர்ந்த ‘றெக்கை முளைத்தேன்’ படத்தை எழுதி, இயக்கி இருப்பதோடு தனது ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்தும் உள்ளார்.

தன்யா ரவிச்சந்திரன், பிரபா, குருதேவ், நித்திஷா, மெர்லின்,ஜெய்பிரகாஷ், ‘ஆடுகளம்’ நரேன், கஜராஜ், மீராகிருஷ்ணன் மற்றும்
ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘றெக்கை முளைத்தேன்’ படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன், “இத்தகைய படங்களைத் தான் இவர் எடுப்பார் என்ற சுழலில் சிக்காமல் ஒவ்வொரு படத்திலும் புதிதாக முயற்சிக்க வேண்டும் என்ற எனது லட்சியத்தின் வெளிப்பாடு தான் ‘றெக்கை முளைத்தேன்’. கல்லூரியில் சேர்ந்த உடன் புதிய சிறகுகள் கிடைத்தாக உணரும் மாணவர்கள் ஒரு புறம், அதிரவைக்கும் குற்றத்தை விசாரிக்கும் காவல் அதிகாரியாக தன்யா ரவிச்சந்திரன் மறுபுறம் என்று தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத வகையில் இப்படம் இருக்கும்,” என்றார்.
‘றெக்கை முளைத்தேன்’ படத்திற்கு தரண்குமார் பின்னணி இசை அமைக்க, கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிஜு வி. டான்போஸ்கோ கையாளுகிறார்.பாடலுக்கான இசையை தீசன் வழங்கி உள்ளார்.கலை இயக்கம்: பிரேம்,ஸ்டில்ஸ்: சி.எச். பாலு, ஆடை வடிவமைப்பாளர்: திவ்யா பிரபு தயாரிப்பு நிர்வாகி: கார்த்திக் துரை, தயாரிப்பு மேலாளர்: அமிர்தராஜ் மற்றும் சுரேஷ், விளம்பர வடிவமைப்பு: சிவகுமார்.

ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் பேனரில் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கியுள்ள ‘றெக்கை முளைத்தேன்’ திரைப்படம் கிரைம் திரில்லர் வகையில் புதிய தடத்தை பதிக்கும் வகையில் உருவாகியுள்ளது.

Previous Post

வார் 2 டிரெய்லர்: ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’ என்ற வசனத்தோடு ரித்திக் ரோஷன் கூறுகிறார்..

Next Post

Unformula Films தயாரிப்பில், ராஷ்மிகா மந்தனா, ரவீந்திர புள்ளே, இணையும் பான் இந்தியா திரைப்படமான “மைசா” பிரமாண்டமாக துவங்கியது!! இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது.

Next Post

Unformula Films தயாரிப்பில், ராஷ்மிகா மந்தனா, ரவீந்திர புள்ளே, இணையும் பான் இந்தியா திரைப்படமான “மைசா” பிரமாண்டமாக துவங்கியது!! இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது.

Popular News

  • கதை மீது நம்பிக்கை வைத்த ஷரவானந்த்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • எருமை சாணி ஹரிஜாவை ஞாயபகம் இருக்கா? தொடையழகி ரம்பா ஸ்டைலில் வெளியிட்ட புகைப்படங்கள்.

    0 shares
    Share 0 Tweet 0
  • அகண்டா 2: தாண்டவம் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது !

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரீசன் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ’மகாராஜா’ திரைப்படம் நேற்று துபாய், புர்ஜ் கலிஃபாவில் கொண்டாடப்பட்டது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ படத்தின், மிக முக்கியமான சண்டைக் காட்சி, பிரம்மாண்ட செட்டில், பாலிவுட்டின் பிரபல ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் படமாகிறது !!

November 30, 2025

‘சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல் இன்று வெளியானது !

November 30, 2025

பிளாக்பஸ்டர் படமான ‘நெலும் குலுனா’ (டென்டிகோ) / ‘பெருசு’ படத்தின் இயக்குநர் இளங்கோ ராம், எஸ்டோனியாவில் நடைபெறும் ‘ஏ’ லிஸ்ட் திரைப்பட விழாவின் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்!

November 30, 2025

‘ப்ராமிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : இயக்குநர் சேரன் மற்றும் நட்டி வெளியிட்டனர்!

November 30, 2025

IPL – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

November 30, 2025

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

November 29, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.