• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

by Tamil2daynews
May 2, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான  ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின்  உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A.சற்குணம் எழுதி இயக்கியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமாவில், துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்

‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும். இந்த சீரிஸ் தமிழில் வெளியாவதுடன், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப் டைட்டில்களுடன் வெளியாகும்

சென்னை, இந்தியா—ஏப்ரல் 27, 2026—இந்தியாவின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, தனது அடுத்த தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 அன்று உலகளவில் வெளியிடப்படும் என்று இன்று அறிவித்துள்ளது. வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஏழு எபிசோட்கள் கொண்ட சீரிஸை, தேசிய விருது பெற்ற இயக்குநர் A.சற்குணம் எழுதி இயக்கியுள்ளார். போட்டித் தேர்வுகளின் அழுத்தம் நிறைந்த சூழலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா, உணர்ச்சி மிகுந்த மற்றும் பதட்டம் நிறைந்த கதையாக உருவாகியுள்ளது. துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த சீரிஸில், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். “எக்ஸாம்” தொடர் இந்தியாவைத் தாண்டி 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
பிரைம் வீடியோ இந்தியாவின் ஒரிஜினல்ஸ் பிரிவு தலைவர் நிகில் மாதோக் கூறியதாவது: ‘எக்ஸாம்’ என்பது இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு கதை. போட்டித் தேர்வுகளில் இருக்கும் உணர்ச்சி அழுத்தத்தை மிகச் சிறப்பாக ஒரு திகில் நிறைந்த கதையாக மாற்றுகிறது. இந்த கதை கோடிக்கணக்கான மக்களின் மனதைத் தொடும் என்று நாங்கள் நம்புகிறோம். ‘சுழல் — தி வோர்டெக்ஸ்’ (சீசன் 1 மற்றும் 2) மற்றும் ‘வதந்தி — தி ஃபேபிள் ஆஃப் வேலோனி’ ஆகிய தொடர்களின் வெற்றிக்குப் பிறகு, புஷ்கர் மற்றும் காயத்ரியுடன் மீண்டும் இணைவது எங்களுக்கு பெருமையாகும். இந்த கதையை மே 15 அன்று உலகம் முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம்.”

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி கூறியதாவது: ‘எக்ஸாம்’ தொடரின் மூலம், மனிதர்களின் ஆசை, அநீதி, மற்றும் கடைசி கட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் நெறிமுறை சிக்கல்கள் ஆகியவற்றை சொல்ல முயன்றோம். இந்தக் கதையின் மையத்தில், சிக்கலான சூழ்நிலையில் தன்னை பலவீனமாக்கி கொள்ளாமல், துணிந்து போராடும்  ஒரு இளம் பெண் இருக்கிறார். ஒரு அநீதி நிறைந்த அமைப்புக்கு எதிராக நின்று அவள் போராடுவது தான் இந்த கதை. எங்கள் கதைகளை உலகளவில் கொண்டு செல்ல பிரைம் வீடியோ எங்களுக்கு சிறந்த கூட்டாளியாக இருந்து வருகிறது. அதுபோலவே எக்ஸாம் சீரிஸையும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல இது சரியான தளமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

‘எக்ஸாம்’ சீரிஸை மே 15 முதல் ப்ரைம் வீடியோவில் கண்டுகளியுங்கள்.

Previous Post

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

Next Post

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

Next Post

'இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

Popular News

  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.