• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

by Tamil2daynews
May 2, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

 

உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார்.

வோண்டாகர்ள் மற்றும் திவா சாவேஜ் ஆகியோருடன் இணைந்து வெளியான “Ancient Seed” மற்றும் எட் ஷீரனுடன் இணைந்து இடம்பெற்ற “Don’t Look Down” போன்ற சர்வதேச அளவிலான பாடல்களில் தொடர்ந்து பங்கேற்று வந்த அவர், தற்போது இந்த புதிய பாடலை வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடலாசிரியர் சாவன் கோடேச்சா, ரிபப்ளிக் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நிறுவிய விஸ்வா ரெக்கார்ட்ஸ் (Visva Records US) நிறுவனத்துடன் தீ (Dhee) ஒப்பந்தம் செய்துள்ளார்.

புகழ்பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையிலும், கவிஞர் விவேக் எழுதிய வரிகளுடனும், விஸ்வா ரெக்கார்ட்ஸுடன் இணைந்து, தீ (Dhee) தனது மனதை வருடும் அழகான பாடலான ‘வாரி வாரி’யை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தீ (Dhee) குறிப்பிடுகையில், ”இந்த பாடல் நம்மை விட்டு பிரிந்து இனி இல்லாத ஒருவரையோ அல்லது ஒன்றையோ பற்றியது: தொலைந்து போன ஒரு உணர்வை பற்றியது. இந்தப் பாடல் முழுவதுமே வழியில் நீங்கள் தொலைத்திருக்கக் கூடிய உங்களைத் தேடி, அந்த உணர்வை மீண்டும் பெற முயற்சிப்பதாகும்” என்றார்.

நெருக்கமான மற்றும் உணர்வுகளை வெளிப்படையாக காட்டும் ஒரு காதல் பாடலான ‘வாரி வாரி’ உறவின் நீடித்த முத்திரையை அதன் தூய்மையான வடிவில் வெளிப்படுத்துகிறது. பாடகி தீ( Dhee) யின் ஆத்மார்த்தமான ஆல்டோ குரல் மற்றும் பல்வேறு இசை வகைகளில் பயணிக்கும் உணர்வால் வழி நடத்தப்படும் இந்தப் பாடல், தமிழ் நாட்டுப்புற பாரம்பரியத்தில் வேரூன்றி இருந்தாலும் ஆழ்ந்த தனிப்பட்ட உணர்வைத் தருகிறது. இதன் மூலம் இது தமிழ் பாப் இசையின் முன்னணி வரிசையில் அவரது இடத்தை வலுப்படுத்துவதுடன் புலம் பெயர்ந்தோரின் இசையை உலகளாவிய பிரதான நீரோட்டத்திற்கு மேலும் கொண்டு செல்கிறது.
தொடர்ச்சியான கைதட்டல்கள் மற்றும் எதிரொலிக்கும் கிட்டார் இசை- கோடுகளின் மீது கட்டமைக்கப்பட்ட இதன் இசையமைப்பு – அவரது குரல்.. மைய இடத்தை பிடிக்க இடமளிக்கிறது. அவரது பாடும் பாணி.. அமைதியாக காந்தம் போல் ஈர்க்கிறது. அது கேட்போரை விரிவானதாகவும் உடனடியானதாகவும் உணர வைக்கும் ஒரு பல்லவிக்குள் இழுத்துச் செல்கிறது. புதிய காதலைப் பற்றிய ஒரு சிந்தனையாக தொடங்கும் இப்பாடல்… காதலுக்கு அப்பாற்பட்டு ஒருவரின் உணர்வுலகில் நீடித்திருக்கும் எவரையும் உள்ளடக்கும் ..நிபந்தனையற்ற பிணைப்பை பற்றிய ஒரு தியானமாக… இதமாகவும் சிந்தனைக்குரியதாகவும் விரிவடைகிறது.

அதன் சாராம்சத்தில், ‘வாரி வாரி ‘ ( இங்கே வா அல்லது என்னுடன் வா என்று பொருள்படும்) என்ற பல்லவி… நெருக்கத்திற்கும்.. மீண்டும் இணைவதற்குமான ஒரு மென்மையான அழைப்பாக மாறி… அழைப்பையும் இயக்கத்தையும் ஒருங்கே எதிரொலிக்கிறது. கிராமப்புற தமிழ் மொழி அமைப்புகளிலும்.. நாட்டுப்புற உணர்வுகளிலும்.. வேரூன்றிய இப்பாடல், காலத்தால் அழியாததாகவும், தற்காலத்திற்கேற்றதாகவும் ஒரே நேரத்தில் உணர்த்தும் ஒரு இயல்பான கவித்துவ தன்மையை கொண்டுள்ளது. சில பந்தங்கள் நினைவில் தீர்வு காணப்படாமல் நிலைத்திருக்கும் விதத்தை படம்பிடித்து காட்டும் வகையில், இதன் கதை ஒரு முடிவுறாத தன்மையுடன் தொடர்கிறது.

தீ (Dhee) யின் இசைப் பயணம் நிலைத்தன்மையும் புதுமையும் இணைந்த ஒன்றாகும். Dhee கொழும்பில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்தார். Madras (2014) திரைப்படத்தின் ‘நான் நீ’ பாடல் மூலம் அறிமுகமான அவர், Irudhi Suttru (2016) மற்றும் Kaala (2018) ஆகிய படங்களில் தனது தனித்துவ குரலை பதித்தார். Maari 2 (2018) திரைப்படத்தின் Rowdy Baby பாடல் மூலம் உலகளாவிய புகழை பெற்ற அவர், தமிழ் பாப் இசையின் முக்கிய குரல்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 1.5 பில்லியன் பார்வைகளைக் கடந்து, எல்லா காலத்திலும் அதிகம் பார்வையிடப்பட்ட தமிழ் இசை வீடியோவாக இந்த பாடல் வெற்றி பெற்றது. 2021 ஆம் ஆண்டில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து ‘என்ஜாய் என்ஜாமி’ பாடலை வெளியிட்டதன் மூலம் சர்வதேச ஸ்ட்ரீமிங் தளங்களில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தி, தனது இசைப் பயணத்தை தீ ( Dhee) தொடர்ந்தார்.

இசைக்குஅப்பால் தீ( Dhee)யின் கலாச்சாரத் தாக்கம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. சமீபத்தில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆர் அண்ட் பி ( R & B) கலைஞர் கிவியான் (GIVĒON )மற்றும் வளர்ந்து வரும் திறமையாளரான அபாசல்யூட்லி (Absolutely)ஆகியோருடன் இணைந்து, ஹெச் அண்ட் எம் ( H&M) இன் உலகளாவிய ரெட் ஸ்டேஜ் ( Red Stage) பிரச்சாரத்தின் முகமாக அவர் இடம் பிடித்தார். இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக அவர் கிவ் ஆன் ( GIVEON) இன் Like I Want You- லைக் ஐ வாண்ட் யு பாடலுக்கு இந்திய இசை கூறுகளை ஊட்டி, புதிய விளக்கம் அளித்து, இசை உலகங்களுக்கு இடையேயான ஒரு பாலமாக தனது பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

வாரி வாரி – VARI VARI பாடல் மூலம் பாரம்பரியம், வாழ்வனுபவம் மற்றும் சமகால படைப்பு ஆகியவை ஒன்றிணைந்து ஆழ்ந்த மனிதத் தன்மை வாய்ந்த ஒன்றாக மாறும் உலகளாவிய தமிழ் இசையின் எல்லைகளை தீ (Dhee) தொடர்ந்து மறு வரையறை செய்து வருகிறார். தனது சிந்தனையை தெளிவுடனும் நிதானத்துடனும் வெளிப்படுத்தி, அவர் நேர்மையாகவும் மனதை தொடுவதாகவும் இருக்கும் ஒரு படைப்பை வழங்குகிறார்.‌ இந்தப் பாடல் பாரம்பரியத்தை நவீன கதை சொல்லலுடன் தடையின்றி இணைக்கும் அவரது திறனை பிரதிபலிக்கிறது. இதன் மூலம் வேரூன்றியதாகவும் அதேசமயம் உலகளாவிய ரீதியில் எதிரொலிப்பதாகவும் இருக்கும் ஒரு இசையை உருவாக்கும்… சமகால தெற்காசிய இசையில் மிகவும் தனித்துவமான குரல்களில் ஒன்றாக அவரது இடத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.

https://youtu.be/B2uqmomb1Cs

Previous Post

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • Actor Mohan Raman daughter  Actress Vidyullekha gets engaged to Mr.Sanjay Watwani

    0 shares
    Share 0 Tweet 0
  • குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

    0 shares
    Share 0 Tweet 0
  • இரவின் விழிகள் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.