• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் ‘Dude’ படத்தின் ‘நல்லாரு போ’ பாடல் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது!

by Tamil2daynews
September 21, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் ‘Dude’ படத்தின் ‘நல்லாரு போ’ பாடல் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது!

 

திரைப்படங்களின் இசையும் பாடல்களும் பலருக்கும் உணர்வுப்பூர்வமாக இரண்டற கலந்திருப்பது.  இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ‘Dude’ படம் மீண்டும் நிரூபித்துள்ளது. ஹை எனர்ஜி பாடலாக வெளியான ‘ஊரும் பிளட்டும்’ பாடல் ஹிட்டுக்கு பிறகு தற்போது இரண்டாவது பாடலான ‘நல்லாரு போ’ ஆன்மாவை தொடும் உணர்வுப்பூர்வமான பாடலாக வெளியாகியுள்ளது. குறிப்பாக பெண் இசை ரசிகர்கள் இந்தப் பாடலை  கொண்டாடி வருகின்றனர்.

சாய் அபயங்கர் இசையமைப்பில், ஏக்கம், காதல், பிரிவு ஆகியவற்றின் கலவையாக விவேக் பாடல் வரிகள் எழுதியிருக்க, திப்பு மற்றும் மோஹித் செளஹான் இந்த அர்த்தமுள்ள மெலோடி பாடலை பாடியுள்ளனர். நமக்கு பிடித்தவர்கள் எந்தக் காரணத்திற்காக நம்மை விட்டு பிரிந்தாலும் ‘எங்கிருந்தாலும் வாழ்க…’ என வாழ்த்துவதை கருவாகக் கொண்டு இந்தப் பாடல் உருவாகியுள்ளது.

பொதுவாக மற்ற பிரேக்கப் பாடல்களில் கசப்பும் வேதனையும் இருக்கும். ஆனால், இந்த பிரிவுணர்ச்சியை முதிர்ச்சியாக கையாண்டிருப்பதன் மூலம் மற்ற பிரேக்கப் பாடல்களில் இருந்து ‘நல்லாரு போ’ பாடல் தனித்து தெரிகிறது. காதலித்த பெண் தன்னை விட்டு பிரிந்ததும் அவளை குறை கூறாமல், மரியாதை குறைவாக நடத்தாமல் அவளை அப்படியே பிரிய அனுமதிக்கிறான் ஹீரோ. இந்த மரியாதைக்குரிய, நான் – டாக்ஸிக் பிரிவை பெண் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

உண்மையான உணர்வை மதிக்கும் இந்தப் பாடல் கல்லூரி மாணவர்கள் மத்தியில் வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பு பெற்றது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரில் நவீன் யெர்னேனி மற்றும் Y. ரவி ஷங்கர் தயாரித்திருக்கும் ‘Dude’ படத்தை கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்க அவர்களுடன் ஆர். சரத்குமார், ஹிருது ஹாரூன், ரோகிணி, ஐஸ்வர்யா சர்மா, டிராவிட் செல்வம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
Previous Post

ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள, “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!

Next Post

“ரைட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

Next Post

“ரைட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

Popular News

  • மனதை வருடும் இசை ஆல்பம் –  என் மனமே.

    மனதை வருடும் இசை ஆல்பம் – என் மனமே.

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒன்ஸ்மோர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Hi – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அக்ஷய் குமார் – சைஃப் அலிகான் அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ‘ஹைவான்’ டிரெய்லர் வெளியானது..!!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பான் இந்தியா நட்சத்திர முகமாக ஃபோர்ப்ஸ் இந்தியா அட்டை படத்தை அலங்கரிக்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

August 28, 2026

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

August 28, 2026

அமரம் -விமர்சனம்

August 28, 2026

‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

August 28, 2026

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

August 28, 2026

டாக்ஸிக் – விமர்சனம்

August 28, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.