• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அதிரடி ஆக்‌ஷன், நகைச்சுவை, பரபரப்பு என இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது ‘அனகோண்டா’!

by Tamil2daynews
September 23, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அதிரடி ஆக்‌ஷன், நகைச்சுவை, பரபரப்பு என இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது ‘அனகோண்டா’!

 

பால் ரூட் மற்றும் ஜாக் பிளாக் நடித்த இந்தப் படம் டிசம்பர் 25, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

 ‘அனகோண்டா’வின் முதல் டிரெய்லரை சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிட்டுள்ளது. ஆக்‌ஷன் அட்வென்ச்சர் மற்றும் நகைச்சுவையுடனும் பல திருப்பங்களுடனும் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் அனகோண்டாவை மீண்டும் ரசிகர்களுக்கு க
காட்டுகிறது. ஜாக் பிளாக் மற்றும் பால் ரூட் நடித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 25, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும்.

டாம் கோர்மிகன் இயக்கி இருக்கும் இந்தப் படம், டக் (ஜாக் பிளாக்) மற்றும் கிரிஃப் (பால் ரூட்) ஆகிய இருவரையும் மையமாகக் கொண்டு நகர்கிறது. நீண்ட கால நண்பர்களான இருவரும் நடுத்தர வயதின் நெருக்கடியில் இருக்கிறார்கள். தங்களுக்குப் பிடித்த ஜங்கிள் மூவியை மீண்டும் உருவாக்கத் திட்டமிடுகிறார்கள். ஆனால் ஒரு ராட்சத அனகோண்டா அவர்களின் ஆர்வத்தை முறியடிக்கிறது. இதனால், இருவரும் திரைப்படம் எடுப்பதை விட அமேசான் காடுகளில் உயிர் பிழைத்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

பரபரப்பு, அட்வென்ச்சர், நகைச்சுவை, ஆக்‌ஷன் என பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் என ‘அனகோண்டா’ உறுதியளிக்கிறது.

இந்தப் படத்தில் ஸ்டீவ் ஜான், தாண்டிவே நியூட்டன், டேனிலா மெல்ச்சியர் மற்றும் செல்டன் மெல்லோ ஆகியோரும் நடித்துள்ளனர். பிராட் புல்லர், ஆண்ட்ரூ ஃபார்ம், கெவின் எட்டன் மற்றும் டாம் கோர்மிகன் ஆகியோர் ‘அனகோண்டா’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா டிசம்பர் 25, 2025 அன்று இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ‘அனகோண்டா’ திரைப்படத்தை வெளியிடுகிறது.
Previous Post

விதார்த் நடிப்பில் விவசாயியின் வாழ்வைப் பேசும் “மருதம்”… அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது !!

Next Post

ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும், ரிஷப் ஷெட்டி நடிப்பில் ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் !!

Next Post

ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும், ரிஷப் ஷெட்டி நடிப்பில் ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் !!

Popular News

  • ‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “விஸ்வநாத் & சன்ஸ்” முதல் சிங்கிள் “பட்டாம்பூச்சி” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.