• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும் ‘ கிராண்ட் பாதர் ‘ ( GRAND FATHER) பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

by Tamil2daynews
December 12, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும் ‘ கிராண்ட் பாதர் ‘ ( GRAND FATHER) பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

 

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்’ கிராண்ட் பாதர் ‘ ( GRAND FATHER) ஃபேண்டஸி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.

ஃபேன்டஸி, ஸ்டைலிஷ் ஆக்ஷன், உணர்ச்சி பூர்வமான டிராமா, திகில் நிறைந்த ஹாரர் காட்சிகள், அசத்தலான காமெடி என எல்லாம்  சேர்ந்து,  ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

நடிகரான ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் ‘ கிராண்ட் ஃபாதர்’ ( GRAND FATHER) எனும் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன், தெலுங்கு நடிகர் சுனில்,  ஸ்மீகா ,அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , மைம் கோபி, ஹரீஷ் பேரடி, மெட்ராஸ் ரமா , பிபின் குமார் அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பல முன்னணி நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.

மேலும் இப்படத்தில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான முன்னணி  நட்சத்திர நடிகர்கள் இருவர் சர்ப்ரைஸ் கேமியோ செய்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரி சுற்று வட்டார பகுதிகளில், ஒரே கட்டமாக   45 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தை அறிவித்த வேகத்தில், குறுகிய காலகட்டத்தில்  முழு படப்பிடிப்பையும் முடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது படக்குழு.

ஒளிப்பதிவாளர் சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ள  இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். திவாகர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க,  கலை இயக்கத்தை பிரேம் மேற்கொண்டுள்ளார்.‌ ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

குட்டி ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி பெரும் பொருட்செலவில் மிக தரமான ஒரு படைப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார். மெட்ரோ முரளி மற்றும் மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

இயக்குநர் பிராங்க்ஸ்டர் ராகுல் தனது எளிமையான, அனைவரும் கொண்டாடும்  பிராங் வீடியோக்கள் மூலம் மக்களின் மனதை வென்றுள்ளார். அந்த வீடியோவைப் போலவே அதே நேர்மையும் உண்மையும் கொண்டு உருவாக்கப்படும் அவரது முதல் படம் “ கிராண்ட் பாதர் “  படமும்  பார்வையாளர்களுடன் ஆழமாக இணைந்து, பலரது இதயங்களில் ஒரு தனித்த இடத்தைப் பெறும்.

இளம் தயாரிப்பாளரான புவனேஷ் சின்னசாமி, இளம் இயக்குநர் பிராங்க்ஸ்டர் ராகுல் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளது. டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்து தகவல்கள் விரைவில்  அதிகாரப்பூர்வமாக வெளியாகும்..
Previous Post

காதலிப்பவரைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி? பாடம் சொல்லும் ‘டியர் ரதி’ திரைப்படம்!

Next Post

கருநாட சக்ரவர்த்தி சிவராஜ்குமாரின் “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!

Next Post

கருநாட சக்ரவர்த்தி சிவராஜ்குமாரின் “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!

Popular News

  • “ரேஜ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ரசிகர்களிடம் பரவலான பாராட்டுகள் பெற்ற ’ஸ்டீபன்’ படத்தின் போஸ்ட் கிரெடிட் காட்சி உளவியல் த்ரில்லரை முழுமையாக மறுவரையறை செய்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • கொம்பு சீவி – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” படப்பிடிப்பு தளத்தில் மெகாஸ்டார் மம்மூட்டி !!

    0 shares
    Share 0 Tweet 0
  • 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை வென்ற ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கொம்பு சீவி – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

December 21, 2025

பருத்தி இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு !!

December 21, 2025

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ரசிகர்களிடம் பரவலான பாராட்டுகள் பெற்ற ’ஸ்டீபன்’ படத்தின் போஸ்ட் கிரெடிட் காட்சி உளவியல் த்ரில்லரை முழுமையாக மறுவரையறை செய்கிறது!

December 21, 2025

JSK சதீஷ் குமாரின் “குற்றம் கடிதல் 2” திரைப்படம் Post-Production கட்டத்திற்குள் நுழைந்துள்ளது; டப்பிங் பணிகள் நேற்று தொடங்கின.

December 21, 2025

பான்-இந்தியா ரெபெல் ஸ்டார் பிரபாஸ் உலகளாவிய கதை சொல்லும் புரட்சியை “தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவல்” மூலம் தொடங்கி வைத்தார்!!

December 21, 2025

பராசக்தி திரைப்பட உலகை அறிமுகப்படுத்தும் விழா !!

December 21, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.