வேம்பு திரைப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றது
கதாநாயகனாக ஹரிகிருஷ்ணன், கதாநாயகியாக ஷீலா, முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து, ஜெயராவ், கர்ணன் ஜானகி மற்றும் நாடககலைஞர்கள் பலரும் நடித்துள்ளனர்.
23-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பல நாடுகள் பங்கு பெற்றன, வேம்பு திரைப்படம் திரையிடலுக்கு தேர்வாகி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது, பார்வையாளர்களின் உணர்வுபூர்வமான பேச்சுக்கள் படக்குழுவினரை பெரும் மகிழ்ச்சியடைய செய்தது, பாலுமகேந்திரா போன்ற பல முன்னணி இயக்குநர்களின் எதார்த்த படைப்புகளை வேம்பு படத்துடன் ஒப்பிட்டு பேசினார்கள், வாழ்வியலுடன் சிலம்ப கலையை மையப்படுத்தி அம்பேத்கார் பெரியாரின் கொள்கைகளும் வசனங்களும் இடம்பெற்றிருந்ததை பெரும் மகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள், இறுதியாக நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விருது விழாவில் வேம்பு திரைபடத்தில் நடித்த கதாநாயகி ஷீலா அவர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் விருது (Special Mention Certificate Award) கிடைத்தது, இந்த மகிழ்ச்சியான நிகழ்வை படக்குழுவினர் அனைவரும் தங்களின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று அளவு கடந்த சந்தோசத்திலுள்ளனர்,
கிராமப்புற வாழ்க்கைக்கு ஏற்றவாறு பாடல்களும் பின்னணி இசையும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது,
வேம்பு திரைப்படம் அனைவருக்குமான அருமருந்தாக கண்டிப்பாக இருக்கும் என்று இயக்குநர் வி. ஜஸ்டின் பிரபு கூறியுள்ளார்.
மஞ்சள் சினிமாஸ் எஸ். விஜயலக்ஷ்மி கோல்டன் சுரேஷ் இப்படத்தை தயாரித்துள்ளனர், அறிமுக இயக்குநர் வி. ஜஸ்டின் பிரபு திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார், வேம்பு திரைப்படம் ஏற்கனவே அகமதாபாத் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த கதாநாயகன் மற்றும் சிறந்த கதாநாயகி பிரிவில் விருது பெற்றது குறிப்பிடதக்கது,
மே -23 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடமும், பத்திரிக்கையாளர்ளிடம் பெரும் பாராட்டை பெற்றது, தற்பொழுது ஆஹா ஓட்டி-யில் வெளியாகியுள்ளது.
படக்குழுவினரின் விவரம்:









