• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பம்

by Tamil2daynews
December 24, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பம்

 

பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்து ‘கராத்தே பாபு’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் ‘கராத்தே பாபு’ படத்தை ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகி வரும் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதை குறிக்கும் வகையில், ரவி மோகன் டப்பிங் பேசும் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த காணொலியில் அவர் பேசும் அரசியல் வசனம் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பும் இடைவிடாமல் நடைபெற்று வரும் நிலையில், டீசர் வெகு விரைவில் வெளியிடப்படும் என்றும் படத்தை உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் விரைவில் வெளியிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, “அரசியல்வாதிகள் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக திரையில் பேசப்படவில்லை. இந்த திரைப்படம் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இன்னொரு பக்கம் குறித்து அலசுகிறது. உணர்வுப் பூர்வமான அரசியல் திரில்லராக இது உருவாகி வருகிறது,” என்று தெரிவித்தார்.

படக்குழுவினர்

இசை – சாம் சி எஸ்
ஒளிப்பதிவு – எழில் அரசு கே
படத்தொகுப்பு – கதிரேஷ் அழகேசன்
தயாரிப்பு வடிவமைப்பு – சண்முகராஜா
இதர நடிகர்கள்: நடிகர்கள்: வி.டி.வி கணேஷ், சுப்ரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, ராஜா ராணி பாண்டியன், இலன், சாம் ஆண்டர்சன், ஸ்ரீ தன்யா, சந்தீப் ரவி ராஜ், ஆனந்தி, சிந்து பிரியா, அஜித் கோஷ், கல்கி ராஜா, நைஃப் நரேன், வெற்றி, அரவிந்த், தர்மராஜ், நந்தினி செந்தமிழன், ஜீவா சுப்ரமணியம், மணிமேகலா
இணை எழுத்தாளர்கள்: ரத்ன குமார், பாக்கியம் சங்கர்
சண்டை பயிற்சி: திலிப் சுப்பராயன்
ஒலி வடிவமைப்பாளர்: அருணாச்சலம் சிவலிங்கம்
நடன இயக்குநர்: சதீஷ் கிருஷ்ணன்
ஆடை வடிவமைப்பாளர்: காயத்ரி பாலசுப்ரமணியன்
தயாரிப்பு நிர்வாகி: கார்த்திக் ஆனந்த்கிருஷ்ணன்
நிர்வாகத் தயாரிப்பாளர்: கே.எஸ். செந்தில் குமார்
விநியோகத் தலைவர்: கிரண் குமார் எஸ்
கோ டைரக்டர்: எஸ் ஏ பாஸ்கரன்
தயாரிப்பு: சுந்தர் ஆறுமுகம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கணேஷ் கே பாபு
Previous Post

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தில் ‘நாடியா’ (Nadia) வாக கலக்கும் கியாரா அத்வானி (Kiara Advani) ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

Next Post

வேம்பு திரைப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றது

Next Post

வேம்பு திரைப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றது

Popular News

  • விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

    0 shares
    Share 0 Tweet 0
  • மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.