• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஃபெமீனா அங்கீகரித்து கெளரவித்த சூப்பர் டாட்டர் விருதுகள் 2019

by Tamil2daynews
November 27, 2019
in சினிமா செய்திகள்
0
ஃபெமீனா அங்கீகரித்து கெளரவித்த சூப்பர் டாட்டர் விருதுகள் 2019
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சென்னை, 24 நவம்பர் 2019 இந்தியாவில் பெண்களுக்கான மாபெரும் பிராண்ட் ஆகத் திகழும்
ஃபெமீனா, வண்ணமயமான விழா ஒன்றை நடத்தி, நான்காவது சூப்பர் டாட்டர் விருதுகளை வழங்கியது. அப்பலோ மருத்துவமனையுடன் இணைந்து நேச்சுரல், குஷால் பேஷன் ஜ்வல்லரி மற்றும் சுக்ரா ஜ்வல்லரி ஆகியவையும் இந்த விழாவை நடத்தியது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற சாதனையாளர்களின் பின்னால் முக்கியமான ஒருவர் இருப்பார். இந்த உண்மைக்கு உறுதுணையாக, தென்னிந்தியாவில் சாதனை செய்த சில பெண்களின் பெற்றோரை அங்கீகரித்து கெளரவிக்கும் விதமாக இந்த வண்ணமயமான விழா, சென்னை சர் முத்த வெங்கட சுப்பாராவ் அரங்கில் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது.

தனித்துவம் மிக்க பிணைப்பு மூலம், சுக துக்கங்களைப் பகிர்ந்து கொண்ட புதல்விகள் தங்கள் பெற்றோருக்கு நன்றி தெரிவிக்கும் தளமாக அமைந்தது இந்த விழா மேடை. பல்வேறு பிரிவுகளில், பின்பற்றத்தக்க தலைவர்களை உருவாக்க, உறுதுணையக இருந்த பெற்றோருக்கு அங்கீகாரமளித்து கெளரவிப்பதே இந்த விழாவின் நோக்கம். பெண்களின் நிஜமான சக்தியையும் அவர்களின் சாதனைகளையும் வெளிப்படுத்த, முன்னணி பிராண்ட் ஆன ஃபெமீனா தீவிரமாக செயலாற்றுகிறது. சுமார் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக  ஃபெமீனா பெண்களுக்கு அதிகாரமளித்தல், மதிப்பீடு செய்தல், மாற்றங்களை ஏற்படுத்துதல் ஆகியவற்றை கட்டமைத்து வருகிறது. டிஜிட்டல் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம், உலகெங்கும் பெண்களுக்கு வழிகாட்ட தீவிரமாகப் பணியாற்றும் அறிவுசார் ஆளுமைகளை ஏற்கெனவே ஃபெமீனா பிராண்ட் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் பேஷன் உலகில் சாதனை புரிந்தவர்களின் பெற்றோர்,  இந்த வண்ணமயமான விழாவில் கெளரவிக்கப்பட்டனர். அவர்களின் விவரம் வருமாறு

1. அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியனின் தந்தை (திரைப்படம் மற்றும் நாடக நடிகை)
2. ராஜா – காயத்ரி ராஜாவின் தந்தை தொலைக்காட்சி நடிகை
3. ராமலிங்கம் – வினோலினி ராமலிங்கம் அயர்ன்மேன் வின்னர்
4. மீனாட்சி சந்தோஷ் – தீயின் தாயர் பாடகி

1. அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியனின் தந்தை திரைப்படம் மற்றும் நாடக நடிகை
2. ராஜா – காயத்ரி ராஜாவின் தந்தை தொலைக்காட்சி நடிகை
3. ராமலிங்கம் – வினோலினி ராமலிங்கம் அயர்ன்மேன் வின்னர்
4. மீனாட்சி சந்தோஷ் – தீயின் தாயர் பாடகி
5. வி.வெங்கட் ராமன் தீபா வெங்கட்டின் தந்தை பின்னணி குரல் கொடுப்பவர்
6. சி.குப்பன் உமாதேவியின் தந்தை எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர்
7. டாக்டர் என்.எஸ்.கே.பத்மினி அனு வரதனின் தாயார் உடையலங்கார நிபுணர்
8. திருமதி.மணிமொழி ஸ்நேகா பார்த்திபராஜாவின் தாயார் வழக்குரைஞர்
9. திருமதி ஜூனைதா பேகம் எம்.இஷா பாத்திமாவின் தாயார் நிறுவனர் ஐயமிட்டு உண் சென்னையின் சமூக குளிர்சாதனப்பெட்டி
10. திருமதி ரத்னா மாணிக்கம் விஜயலட்சுமி தம்மாலாவின் தாயார் தலைமை நிர்வாக அதிகாரி ரைட் ஸ்ட்ரைட் பி.லிட்
11. வி.சி.விஜய ராகவன் டாக்டர் மீரா ராகவனின் தந்தை
12. திருமதி கீதா சேஷாத்ரி டாக்டர் ரேவதி ராஜின் தாயார்
13 திருமதி ரத்னாவதி கோதண்டம் டாக்டர் சுமனா மனோகரின் தாயார்
14. டாக்டர் ராஜசித்ரா மணிவண்ணன் ஐஸ்வர்யா மணிவண்ணனின் தந்தை சிலம்பாட்டம்
15. திருமதி சித்தாரா திம்மையா சாந்தலா டி.மேடப்பா உணவுத் தொழில்

ஃபெமீனா இதழின் ஆசிரியரும் தலைமை சமூக அதிகாரியுமான தன்யா சைதன்யா தனது உரையில் குறிப்பிட்டதாவது,…

“தங்கள் புதல்வியின் வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகித்து, அவர்கள் வெற்றிக்குத் துணை நிற்கும் பெற்றோரை கவனத்தில் கொண்டு மிகச் சரியான முறையில் இந்த சூப்பர் டாட்டர் விருதுகள் வழங்கப்படுகின்றன. பெற்றோரின் தொலைநோக்குப் பார்வை, பங்களிப்பு மற்றும் முயற்சிகள்தான் அவர்கள் குழந்தைகளுக்கு பெயரையும் புகழையும் கொடுத்து அவரவர் துறையில் குறிப்பிடத்தக்க இடத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது. இன்றைய உலகில் தனித்துவமும் பலம் மிக்கவர்களாகவும் பெண்கள் இருக்கும் நிலையில், தங்கள் குழந்தைகள் சிறகு விரித்துப் பறந்து உச்சம் தொட்டு சாதனை செய்ய பெற்றோர் வானமாக இருக்கிறார்கள். சூப்பர் டாட்டர்ஸ் தங்கள் பெற்றோருக்கு தரும் சிறிய அங்கீகாரம்தான் இந்த விருது. எப்போதும் பெண்களுக்குத் துணை நிற்கும் ஃபெமீனா, சூப்பர் டாட்டர்ஸை  இந்த உலகுக்கு வழங்கய பெற்றோருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது” என்றார் தன்யா சைதன்யா.

பன்முகத் திறமை மிக்க அழகிய தொகுப்பாளர், வர்ணனையாளர், வீடியோ ஜாக்கி மற்றும் பாடகியுமான பாவ்னா பாலகிருஷ்ணன் தன் இனிமையான குரலில் சில மெல்லிசைப் பாடல்களைப் பாடி அரங்கத்திலிருந்த ரசிகர்களை மகிழ்வித்தார்.

பெண்களின் மாற்றம், முன்னேற்றம், சுதந்திரம், புரட்சி, ஆகிவற்றின் அடையாளமாக இருக்கும் எந்த ஒரு பெண்ணுக்கும் அங்கீகாரம் அளிப்பதே சூப்பர் டாட்டர் விருதின் நீட்சி. இத்தகைய பெருமுயற்சிகள் காரணமாக ஃபெமீனா புதுமையானதாகவும் செல்வாக்கு மிக்கதாகவும் உலகிலுள்ள அனைத்து பெண்களும் அண்ணாந்து பார்க்கும் உயர்ந்த நிலையிலும் இருக்கிறது.

வோர்ல்ட் வைட் மீடியா குறித்து…

இந்தியாவிலுள்ள டைம்ஸ் குழுமத்தின் ஓர் அங்கமான வோர்ல் வைட் மீடியா முழுமையான பொழுது போக்கு மற்றும் வாழ்வியல் பத்திரிகைகளை நடத்துகிறது.
ஃபெமீனா,  ஃபிலிம்பேர், ஹலோ, க்ரேஸியா, லோன்லி பிளானட் இன் இந்தியா, குட் ஹோம்ஸ் மற்றும் குட் ட்ரெண்டஸ் ஆகியன இக்குழுமத்தால் நடத்தப்படும் இதழ்கள் ஆகும்.
ஃபெமீனா குறித்து….

ஃபெமீனா முதல் முறையாக 1959ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானது. முற்போக்கு பெண்களுக்காக வாழ்வியல் செய்திகளை உள்ளடக்கமாகக் கொண்ட இந்த ஆங்கில இதழ் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அதிக வாசகர்களால் படிக்கப்படும் இதழாக முதலிடத்தில் இருக்கிறது. வோர்ல் வைட் மீடியாவின் உடமையான  ஃபெமீனா, டைம்ஸ் குழுமத்தின் அங்கமாகத் திகழ்கிறது.
சமீபகாலமாக டிஜிட்டல் மற்றும் சமூக வளைதளங்கள் மூலமாக ஃபெமீனா சற்றேறக் குறைய ஒரு கோடி இந்தியப் பெண்களை சென்றடைகிறது. மாதமிருமுறை வெளிவரும் ஃபெமீனா இதழில் பெண் சாதனையாளர்கள், உறவுகள், அழகுக் குறிப்புகள், பேஷன், சமையல், ஆரோக்கியம் ஆகியன குறித்த கட்டுரைகள் இடம் பெறுகின்றன. மேலும் நய்க்கா ஃபெமீனா பியூட்டி அவார்ட், ஃபெமீனா சூப்பர் டாட்டர் அவார்ஸ், ஃபெமீனா ஸ்டைலிஸ்டா ஆகியன ஃபெமீனா பிராண்டின் கீழ் வழங்கப்படும் விருதுகளாகும். மேலும் பல அழகுக்கலை நிபணர்களை தேர்வு செய்து அவர்களுக்காக பிரத்யேகமாக  ஃபெமீனா சலூன் அண்ட் ஸ்பா என்ற இதழையும் நடத்தி வருகிறது.

Tags: Arun PandianFeminaKeerthi PandianSuper Daughter
Previous Post

Atharvaa Murali-Anupama Parameswaran starrer “Production No.3”

Next Post

” அழியாத கோலங்கள் 2 “

Next Post
” அழியாத கோலங்கள்  2 “

" அழியாத கோலங்கள் 2 “

Popular News

  • மாலா மணியன் தயாரிப்பில் குட்டி ரேவதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிறகு’ ; உலக மகளிர் தினத்தில் சிறப்பு காட்சி திரையிடல்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீகாந்த்தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட கருவறை குறும்பட இயக்குனரை பாராட்டிய இளையராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜுவி-2 விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சமூக அக்கறையில் விஜய்சேதுபதியின் “கடைசி விவசாயி”

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்

April 12, 2026

தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட “தீயோர் கூடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

April 12, 2026

நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!

April 12, 2026

TN (2026) தங்க நட்சத்திரம் – விமர்சனம்

April 12, 2026

Lik (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) – விமர்சனம்

April 12, 2026

“மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர் மனு ஆனந்த்

April 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.