• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இந்திய சினிமாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் !! மம்மூட்டி – மோகன்லால் – மகேஷ் நாராயணன் இணையும் “பேட்ரியாட்” ( “Patriot” ) திரைப்படம்

by Tamil2daynews
January 27, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்திய சினிமாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் !!  மம்மூட்டி – மோகன்லால் – மகேஷ் நாராயணன் இணையும் “பேட்ரியாட்” ( “Patriot” )  திரைப்படம்

 

இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்கத் தயாராக இருக்கும் “பேட்ரியாட்” -படத்தின் அதிகாரப்பூர்வ  வெளியீட்டு தேதி அட்டகாசமன போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கும் போஸ்டரை, 40-க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மகேஷ் நாராயணன் இயக்கத்தில், மம்மூட்டி மற்றும் மோகன்லால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த மல்டி-ஸ்டாரர் திரைப்படம், 2026 ஏப்ரல் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இத்திரைப்படத்தின் தமிழ் போஸ்டரை அட்லீயும், தெலுங்கு போஸ்டரை விஜய் தேவரகொண்டாவும் , ஹிந்தி போஸ்டரை கரண் ஜோர்ரும் வெளியிட்டனர். மலையாளத்தில், துல்கர் சல்மான், பிரித்விராஜ் சுகுமாரன், டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, உன்னி முகுந்தன், பாசில் ஜோசப், ஜெயசூர்யா, சன்னி வேய்ன், நஸ்லென், நஸ்ரியா நசீம், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்கள் வெளியீட்டு தேதி போஸ்டரை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், இப்படத்திலிருந்து முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருடன் நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.

இந்த திரைப்படத்தை Anto Joseph Film Company மற்றும் Kichappu Films சார்பில், அன்டோ ஜோசப் மற்றும் K. G. அனில்குமார் தயாரித்துள்ளனர். இணைத் தயாரிப்பாளர்களாக C. R. Salim Productions மற்றும் Blue Tigers London நிறுவனங்களின் கீழ் C. R. சலீம் மற்றும் சுபாஷ் ஜார்ஜ் மானுவல் செயல்பட்டுள்ளனர். நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: C. V. சாரதி மற்றும் ராஜேஷ் கிருஷ்ணா.
Image17 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி மற்றும் மோகன்லால் மீண்டும் இணையும் இந்த படம், மலையாள சினிமாவின் இதுவரை இல்லாத மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. ஒரு வருடத்துக்கும் மேலாக, 10-க்கும் மேற்பட்ட கட்டங்களாக பல நாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புக்குப் பிறகு, இந்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. Twenty:20 திரைப்படத்திற்குப் பிறகு, மலையாள சினிமாவின் பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்களை ஒன்றிணைக்கும் மற்றொரு படமாக  இப்படம் அமைந்துள்ளது.

மம்மூட்டி, மோகன்லால், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், ராஜீவ் மேனன் ஆகியோருடன், ரேவதி, ஜினு ஜோசப், டானிஷ் ஹுசைன், ஷஹீன் சித்திக், சனல் அமன், தர்ஷனா ராஜேந்திரன், செரீன் ஷிஹாப் மற்றும் Madras Cafe, Pathaan ஆகிய படங்களின் மூலம் பிரபலமான நாடகக் கலைஞரும் இயக்குநருமான பிரகாஷ் பெலவாடியும் நடிகர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Take Off மற்றும் Malik படங்களுக்குப் பிறகு, இயக்குநர் மகேஷ் நாராயணன் “பேட்ரியாட்” திரைப்படத்தை சர்வதேச அளவிலான ஸ்பை திரில்லர் (Spy Thriller) படமாக, விரிந்த களத்துடன் மற்றும் நவீன தொழில்நுட்ப தரத்துடன் உருவாக்கியுள்ளார். அதிகமான நாடுகளில் படமாக்கப்பட்ட மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் இந்த படம் பெற்றுள்ளது. இந்தியா, இலங்கை,The  UK, அசர்பைஜான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)  ஆகிய நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்றுள்ளது. 2024 நவம்பரில் இலங்கையில் தொடங்கிய படப்பிடிப்பு, இந்தியாவில் டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொச்சி போன்ற முக்கிய நகரங்களில் நடைபெற்றது.

முன்னதாக வெளியான “பேட்ரியாட்” திரைப்படத்தின் டைட்டில் டீசர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மம்மூட்டி மற்றும் மோகன்லால் நடித்துள்ள சக்திவாய்ந்த அதிரடி காட்சிகள் படத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்பதை டீசர் சுட்டிக்காட்டியது. இரு ஆளுமைகளையும் முழு கம்பீரத்துடன் காட்டிய அந்த டீசர், மலையாள சினிமாவிற்கு இதுவரை இல்லாத தொழில்நுட்ப சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தி இப்படம் சிறப்பான அனுபவமாக இருக்குமென உறுதி அளித்தது. இந்த திரைப்படத்தின் திரைக்கதையையும் இயக்குநர் மகேஷ் நாராயணன் தானே எழுதியுள்ளார்.

திரைப்படத்தின் இசையமைப்பை, முன்னணி மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் செய்துள்ளார். ஒளிப்பதிவை, முக்கிய பாலிவுட் படங்களில் பணியாற்றிய மனுஷ் நந்தன் மேற்கொண்டுள்ளார். எடிட்டிங் பணியை மகேஷ் நாராயணன் மற்றும் ராகுல் ராதாகிருஷ்ணன் செய்துள்ளனர். வெளிநாடுகளில் படத்தை விநியோகிக்கும் பொறுப்பை Truth Global Films மேற்கொள்கிறது.

தொழில்நுட்ப குழு:

ஒளிப்பதிவு: மனுஷ் நந்தன்

இசை: சுஷின் ஷியாம்

எடிட்டிங்: மகேஷ் நாராயணன், ராகுல் ராதாகிருஷ்ணன்

கலை இயக்கம்: ஷாஜி நடுவில், ஜிபின் ஜேக்கப்

ஒலி: விஷ்ணு கோவிந்த்

தயாரிப்பு கட்டுப்பாடு: டிக்சன் போடுதாஸ்

லைன் புரொட்யூசர்கள்: சுனில் சிங், நிரூப் பின்டோ, ஜஸ்டின் போபன், ஜெஸ்வின் போபன்

சிங் சவுண்ட்: வைஷாக் P. V.

மேக்கப்: ரஞ்சித் அம்பாடி

பாடல் வரிகள்: அன்வர் அலி

ஆக்ஷன்: திலீப் சுப்பராயன், ஸ்டண்ட் சில்வா, மாஃபியா சசி, ரியாஸ் ஹபீப்

உடை வடிவமைப்பு: தன்யா பாலகிருஷ்ணன்

நடன அமைப்பு: ஷோபி பவுல்ராஜ்

முதன்மை துணை இயக்குநர்: லினு ஆண்டனி

துணை இயக்குநர்: பேண்டம் பிரவீண்

ஸ்டில்ஸ்: நவீன் முரளி

VFX: Firefly, Egg White, Ident VFX Lab

DI கலரிஸ்ட்: ஆஷிர்வாத் ஹட்கர்

விளம்பர வடிவமைப்பு: Aesthetic குஞ்சம்மா

டிஜிட்டல் PR: விஷ்ணு சுகதன்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

இந்த திரைப்படத்தை Ann Mega Media நிறுவனம் விநியோகிக்கிறது

Previous Post

“ROOT – Running Out of Time” திரைப்படத்தில் அபர்ஷக்தி குரானாவின் அட்டகாசமான லுக்கை இயக்குநர் A.R. முருகதாஸ் வெளியிட்டார்

Next Post

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பாராட்டிய ஃப்ளாக் திரைப்படம்

Next Post

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பாராட்டிய ஃப்ளாக் திரைப்படம்

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • மீண்டும் கம் பேக் கொடுக்கும் ‘ஆரண்ய காண்டம் ‘ புகழ் யாஸ்மின் பொன்னப்பா

    0 shares
    Share 0 Tweet 0
  • கோவையில் நடைபெற்ற ‘ரெஜினா’ டீசர் வெளியீட்டு விழாவில் கதை பற்றி வெளிப்படையாக பேசிய சுனைனா

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் விக் வைத்திருந்தாரா என கேட்ட ரசிகர்.. அதற்கு தளபதி நண்பர் ஸ்ரீமன் கூறிய பதில்

    0 shares
    Share 0 Tweet 0
  • கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பாராட்டிய ஃப்ளாக் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பாராட்டிய ஃப்ளாக் திரைப்படம்

January 27, 2026

இந்திய சினிமாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் !! மம்மூட்டி – மோகன்லால் – மகேஷ் நாராயணன் இணையும் “பேட்ரியாட்” ( “Patriot” ) திரைப்படம்

January 27, 2026

“ROOT – Running Out of Time” திரைப்படத்தில் அபர்ஷக்தி குரானாவின் அட்டகாசமான லுக்கை இயக்குநர் A.R. முருகதாஸ் வெளியிட்டார்

January 27, 2026

தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் வழங்கும் ‘VOWELS – An Atlas of Love’ திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது!

January 27, 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி ‘ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

January 27, 2026

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில், ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ரணபலி’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு! பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்தப் படம் செப்டம்பர் 11 அன்று வெளியாகிறது!

January 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.