• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ZEE5, அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லரை வெளியிட்டது !!

by Tamil2daynews
February 12, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ZEE5,   அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும்  ‘கென்னடி’ பட டிரெய்லரை வெளியிட்டது !!

 

இந்தியாவின் முன்னணி  வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, புகழ்மிகு இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  திரில்லர் படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த  ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல்   இந்தியப் பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக பிரீமியர்  ஆகிறது.

‘கென்னடி’  மும்பையை மையமாகக் கொண்டு,  நாயர் பாணியில் உருவான ஒரு அதிரடியான திரில்லர் கதை. முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளியாக மாறிய கென்னடி உதய் ஷெட்டி (Rahul Bhat) என்பவரின் இரட்டை வாழ்க்கையைப் படம் பின்தொடர்கிறது. பகலில் டாக்சி டிரைவராகவும், மறைவில் ஊழல் போலீஸ் கமிஷனர் ரஷீத் கானுக்காக கொலை ஒப்பந்தங்களை நிறைவேற்றுபவராகவும் வாழும் கென்னடி, தனது மகன் இழப்பினால் உண்டான வலி மற்றும் அவருடைய சிதைந்து போன குடும்பத்தின் நினைவுகளால் துரத்தப்படுகிறார். கடந்த காலத்திலிருந்து தப்பிக்க முடியாத நகரத்தில், தன்னையே தேடும் அவரது பயணம் தான் இப்படத்தின்  மையம்.

படத்தில் ராகுல் பட் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார், சன்னி லியோனே, மோஹித் தகல்கர், மேகா பர்மன், அமீர் தல்வி, அபிலாஷ் தாப்லியால், கரிஷ்மா மோடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் கென்னடியின் இருண்ட, பிளவுபட்ட உலகத்திற்குப் பல அடுக்குகளைச் சேர்க்கிறார்கள்.

கென்னடி டிரெய்லர், மௌனம், கோபம், உயிர்தப்புதல் ஆகிய உணர்வுகளால் நிரம்பிய  கதையைக் சொல்கிறது. வெடிச்சிதறல்கள், மிரட்டல் வலையங்கள், அதிகார மையங்கள் எனும் அபாயகரமான சதியில் கென்னடி சிக்க வைக்கப்படும்போது, உண்மை, பழிவாங்கல், இறுதிக்கட்ட மீட்கும் முயற்சி என வன்முறையுடன் கூடிய தேடலுக்கு தள்ளப்படுகிறார். ஸ்டைலிஷ் ஆக்ஷன், அச்சமூட்டும் காட்சிகள், அனுராக் காஷ்யப்பின் முத்திரைமிக்க நாயர் கதையாக்கம்  இவை அனைத்தும் இணைந்து,  தனிமை, நீதி, சமரசமற்ற தேர்வுகளின் விலையை ஆராயும் உணர்ச்சிமிக்க திரையனுபவத்துக்கான மேடையை அமைக்கின்றன.

டிரெய்லர்: https://youtu.be/ZNZuX5zSHYw

படம் குறித்து அனுராக் காஷ்யப் கூறியதாவது..,

“‘கென்னடி’ நான் உருவாக்கிய மிகவும் தனித்துவமான படங்களில் ஒன்று. இந்த படத்தின் பயணம் மிக நீண்டது. ஆனால் திரைப்பட விழாக்களில் கிடைத்த ஒவ்வொரு கருத்துக்களும், நான் இந்த படத்தை   உருவாக்கியதற்கான அர்த்தத்தைத் தந்தது. டிரெய்லர், வெளியில் வன்முறையுடன் இருந்தாலும் உள்ளே ஆழமாக காயமடைந்த ஒரு மனிதனின் உலகத்துக்குள் உங்களை அழைத்துச் செல்கிறது. எந்த சமரசமும் இன்றி, படத்தை அதன் மூல வடிவிலேயே ZEE5 பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி.”

நடிகர் ராகுல் பட் கூறியதாவது..,

“கென்னடி பாத்திரத்தில்  நடித்தது என்னையே மாற்றியது. கென்னடி தனிமையானவன், கோபமிக்கவன், பலவீனமானவன் எப்போதும் கடந்த காலத்திலிருந்து ஓடிக்கொண்டிருப்பவன். அவனின் மௌனத்திலும், கோபத்திலும் வாழ்வது மனதளவில் சோர்வூட்டினாலும், அந்த காதாப்பாத்திரம் எனக்கு மிகுந்த திருப்தியளித்தது. திரை விழா பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடியது பெரும்  நம்பிக்கையளித்தது. இப்போது இந்தியப் பார்வையாளர்கள் கென்னடியின் பயணத்தையும், வலியையும், அனுபவிப்பதைக் காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.”

சன்னி லியோன் கூறியதாவது..,

“‘கென்னடி’ படம் நடிகையாக என்னை முற்றிலும் வேறொரு உணர்ச்சி வெளிக்குள் தள்ளியது. சார்லி மர்மமும், நுட்பமும், வலிமையும் ஒருசேர கொண்டவள். அவளின் பயணத்தை ஆராய்வது சவாலானதும், நிறைவைத் தருவதுமான அனுபவம். அனுராக் காஷ்யப்புடன் பணியாற்றியது, உரையாடலை விட மௌனத்தை கொண்டாடக் கற்றுக்கொடுத்தது. இதுவரை அனுபவிக்காத விதங்களில் இந்த படம் எனக்கு பெரிய சவால்களைத் தந்தது. அதற்காக அனுராக் காஷ்யப்புக்கு நன்றி. பார்வையாளர்கள் இந்த இருண்ட, அழகான உலகத்தை அனுபவிப்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

20-ஆம் தேதி பிப்ரவரி முதல், ஒரு அதிரடியான திரில்லர் பயணம் ‘கென்னடி’ படத்தை ZEE5 ல் காணத் தயாராகுங்கள்.

ZEE5 பற்றி:

ZEE5 என்பது பாரதத்தின் மிகப்பெரிய முன்னணி வீட்டு  வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, பல மொழிகளில் கதைகளை சொல்லும் தளமாக விளங்குகிறது. 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்ஸ், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான நூலகத்தை இது வழங்குகிறது. 12 மொழிகளில் – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி – தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா திட்டங்களுடன் உள்ளடக்கம் வழங்கப்படுகிறது.உலகளாவிய டெக் கூட்டாளிகளுடன் உருவாக்கப்பட்ட வலுவான டீப்-டெக் கட்டமைப்பு, பல சாதனங்கள் மற்றும் இயக்க முறைமைகளில் தடையற்ற பார்வை அனுபவத்தை ZEE5 வழங்க உதவுகிறது.

Facebook, Instagram, LinkedIn மற்றும் X-ல் ZEE5-ஐ பின்தொடருங்கள்.
Previous Post

சுகா இயக்கத்தில் “சைலப்பன் சைக்கிள் மார்ட்” – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Next Post

மைலாஞ்சி – விமர்சனம்

Next Post

மைலாஞ்சி - விமர்சனம்

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.