• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ராம் சரண் & உபாஸனா தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு வைத்த பெயர்கள்: சிவராம் மற்றும் அன்வீரா தேவி

by Tamil2daynews
February 15, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ராம் சரண் & உபாஸனா தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு வைத்த பெயர்கள்: சிவராம் மற்றும் அன்வீரா தேவி

பெயர்களின் அர்த்தத்தை விளக்கி மகிழ்ச்சியான நிமிடத்தை பகிர்ந்த மெகாஸ்டார் சிரஞ்சீவி. !!

டோலிவுட் நட்சத்திர தம்பதியான ராம் சரண் மற்றும் உபாஸனா கொணிதெலா, ஜனவரி 31 அன்று இரட்டைக் குழந்தைகள் பிறந்ததையடுத்து பேரானந்தத்தில் உள்ளனர். இதன் மூலம், அவர்களின் மகள் கிளிம் காரா உடன் சேர்த்து, மூன்று குழந்தைகளின் பெற்றோராகியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற பாரம்பரியமான பெயர்சூட்டும் விழாவில், ஆன்மிக ஆழமும் குடும்பப் பெருமையும் பிரதிபலிக்கும் வகையில், இரட்டைக் குழந்தைகளின் பெயர்களை தம்பதியினர் அறிவித்தனர்.

இந்த பெயர்களின் அர்த்தங்களை மெகாஸ்டார் சிரஞ்சீவி சமூக வலைதளங்களில் பகிர்ந்து, பெயர்சூட்டும் விழாவிலிருந்து மனதை கொள்ளை கொள்ளும் ஒரு தருணத்தையும் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவு:
“எல்லையற்ற மகிழ்ச்சியுடனும், தெய்வீக அருளுடனும் எங்கள் இரண்டு சிறிய ஆசீர்வாதங்களின் அழகான பெயர்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி
‘ சிவராம் கொணிதெலா’ & ‘அன்வீரா தேவி கொணிதெலா’ (𝑺𝒉𝒊𝒗𝒂 𝑹𝒂𝒎 𝑲𝒐𝒏𝒊𝒅𝒆𝒍𝒂” & “𝑨𝒏𝒗𝒆𝒆𝒓𝒂 𝑫𝒆𝒗𝒊 𝑲𝒐𝒏𝒊𝒅𝒆𝒍𝒂”)

சிவராம் – இரண்டு நிரந்தரமான இலட்சியங்களின் ஆழமான சங்கமம். ‘சிவ’ என்பது சிவ சங்கர வர பிரசாத் அவர்களிடமிருந்து உதித்த, உள்ளார்ந்த வலிமை, ஆன்மிக ஆழம் மற்றும் அமைதியை பிரதிபலிக்கிறது. ‘ராம்’ என்பது ராம் சரணிடமிருந்து வந்தது; நீதிமுறை, கருணை மற்றும் ஒழுக்கத் துணிச்சலை குறிக்கிறது.
இந்த பெயர், உள்ளார்ந்த சக்தியும் பொறுப்பான செயலும் இணையும் சமநிலையை குறிக்கிறது.

அன்வீரா தேவி – தெய்வீக பெண்மை (Divine Feminine) யை பிரதிபலிக்கும் அபூர்வமும் வலிமையும் கொண்ட வெளிப்பாடு. அன்வீரா என்பது அஞ்சாமை, திடத்தன்மை மற்றும் தெய்வீக பாதுகாப்பைக் குறிக்கிறது; கனக துர்கா தேவியின் அருளால் உதித்த பெயர். அருள், துணிச்சல் மற்றும் நிலையான வலிமையை பிரதிபலிக்கும் பெயர்.

சிவராம் மற்றும் அன்வீரா தேவி தங்கள் அழகான வாழ்க்கைப் பயணத்தை தொடங்கும் இந்த தருணத்தில், உங்கள் ஆசீர்வாதங்களை வேண்டுகிறோம். அன்பும் நன்றியுடனும் ”  என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், ராம் சரண் தனது மகள் கிளிம் காராவை மெதுவாகத் தழுவியபடி, சடங்குகளை ஆர்வமுடன் கவனிக்கிறார். உபாஸனா, தனது கணவரின் அருகில் அமைதியான புன்னகையுடன் அமர்ந்துள்ளார். பாரம்பரிய உடைகளில், குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் சூழ்ந்து நிற்க, அந்தச் சூழல் முழுவதும் அன்பும் ஆனந்தமும் நிறைந்ததாக தெரிகிறது.

ஒரு குழந்தையை அளவில்லா பாசத்துடன் தாங்கியபடி சிரஞ்சீவி, உபாஸனாவின் தந்தையான அனில் காமினேனி அவர்களுடன் நிற்கிறார். அதே நேரத்தில், ” சுரேகா கொணிதெலா, உபாஸனாவின் தாயார் சோபனா காமினேனி அருகில்  மற்றொரு குழந்தையை அன்புடன் தாங்கியபடி காட்சியளிக்கிறார். மூத்தோர் மற்றும் குடும்பத்தினரின் இந்த இணைவு, விழாவிற்கு பாரம்பரியமும் உணர்வுப்பூர்வமான  அன்பையும் சேர்க்கிறது.

கொணிதெலா மற்றும் காமினேனி குடும்பங்கள் இந்த அழகான புதிய அத்தியாயத்தை வரவேற்கும் நிலையில், சிறிய சிவ ராம் மற்றும் அன்வீரா தேவியின் வருகை, அவர்களின் குடும்பத்தில் ஒன்றுபட்ட மகிழ்ச்சி, ஆனந்தம் மற்றும் ஆசீர்வாதங்களை கொண்டு வந்துள்ளது.

Previous Post

கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தமிழ் திரையுலகில் தனது முதல் படத்தை தயாரிக்கிறது!

Next Post

இசைஞானி இசையில் பியூட்டிபுல் பிரேக் அப் A Beautiful Breakup (2026) விமர்சனம்

Next Post

இசைஞானி இசையில் பியூட்டிபுல் பிரேக் அப் A Beautiful Breakup (2026) விமர்சனம்

Popular News

  • பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் நாகார்ஜுனாவின் ‘கிங் 100 – King 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா – Karna’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி & RDC மீடியா வழங்கும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

November 12, 2026

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

November 12, 2026

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

November 12, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

November 12, 2026
ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

November 12, 2026

ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இயக்குநராக அறிமுகமாகும் ‘வன மடி’

November 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.