• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தமிழ் திரையுலகில் தனது முதல் படத்தை தயாரிக்கிறது!

by Tamil2daynews
February 15, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தமிழ் திரையுலகில் தனது முதல் படத்தை தயாரிக்கிறது!

 

ஹோம்பலே ஃபிலிம்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற அண்டை திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்து பான் இந்திய படங்களின் வெற்றி விகிதத்தை அதிகமாக்கியுள்ளது. அந்த வரிசையில், தற்போது மேலும் ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறது.

கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ், தனது மிகப்பெரிய வெற்றிப் படமான ’S/o முத்தண்ணா’ மூலம் பரவலாக அறியப்பட்டது. தற்போது ’எம்ஜிஆர்’ என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறது. தயாரிப்பாளர் ஹரி பிரசாத் பி.வி தலைமையிலான இந்த நிறுவனம், தற்போது தமிழ் திரையுலகில் தனது பயணத்தை தொடங்குகிறது. இந்த புதிய படத்தின் கதாநாயகனுக்காக தமிழ் திரையுலகின் பல முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் செல்வராகவனும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் ’S/o முத்தண்ணா’ மற்றும் ’எம்ஜிஆர்’ படங்களில் இணைந்து பணியாற்றிய திறமையான இயக்குநர்  ஸ்ரீகாந்த் ஹுன்சூர் இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய தமிழ் படத்தை இயக்குகிறார்.
ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ஹரி பிரசாத் கூறுகையில், “இந்திய சினிமாவில் தமிழ் சினிமா துறைக்கென்று எப்போது சிறப்பான இடம் உண்டு. புதுமை, சிறந்த கதைகள் மற்றும் தனித்துவமான படங்கள் ஆகியவற்றிற்காக தமிழ் சினிமா கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமாவில் ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்ற என்னுடைய நீண்டநாள் கனவு இந்தப் படம் மூலம் நிறைவேறுவது மகிழ்ச்சி. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இந்த படத்திற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “இந்த புதிய படத்தில் நடிகர் செல்வராகவன் இணைந்திருப்பது கூடுதல் பலம். அவரின் திறமையான நடிப்பு, திரை ஆளுமை மற்றும் சினிமாவிற்கான அர்ப்பணிப்பு ஆகியவை இந்த படத்திற்கு பெரும் பலமாக இருக்கும். இப்படத்திற்கு கன்னட திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான சரண் ராஜ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ஸ்கேட்டிங் கிருஷ்ணா மேற்கொள்கிறார்.

படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரைப் பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என்றார்.

Previous Post

டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

Next Post

ராம் சரண் & உபாஸனா தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு வைத்த பெயர்கள்: சிவராம் மற்றும் அன்வீரா தேவி

Next Post

ராம் சரண் & உபாஸனா தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு வைத்த பெயர்கள்: சிவராம் மற்றும் அன்வீரா தேவி

Popular News

  • விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

    0 shares
    Share 0 Tweet 0
  • மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.